Published:Updated:

இனி நாங்க நிம்மதியா தூங்குவோம்! - நெகிழும் மாற்றுத்திறனாளி தாய் - FOLLOW-UP

ஆழிகுடி
பிரீமியம் ஸ்டோரி
ஆழிகுடி

‘இப்படி ஒரு ஏழ்மையான குடும்பத்தை எனக்கு அடையாளம் காட்டிய ஜூ.வி-க்கு நன்றி” என்றார் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.

இனி நாங்க நிம்மதியா தூங்குவோம்! - நெகிழும் மாற்றுத்திறனாளி தாய் - FOLLOW-UP

‘இப்படி ஒரு ஏழ்மையான குடும்பத்தை எனக்கு அடையாளம் காட்டிய ஜூ.வி-க்கு நன்றி” என்றார் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.

Published:Updated:
ஆழிகுடி
பிரீமியம் ஸ்டோரி
ஆழிகுடி

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகிலுள்ள ஆழிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பானுமதி. இவரின் கணவர் சங்கரன், உடல்நலக்குறைவால் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். மூளைச்சவாலுடைய தன் 42 வயது மகன் உதயகுமாருடன் பாழடைந்த வீட்டில் வசித்துவந்தார் பானுமதி. எந்நேரத்திலும் இடிந்துவிழும் ஆபத்துள்ள வீட்டில் வாழ்ந்துவரும் தங்களுக்கு, ‘அரசு புதிய வீடு கட்டித் தர வேண்டும்’ எனத் தொடர்ந்து பல முறை பானுமதி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

வெடிப்பு விழுந்த சுவர்கள், சிமென்ட் பூச்சு பெயர்ந்துபோன மேற்கூரை, கதவில்லாத கழிப்பறை என அவலநிலையில் வாழ்ந்துவந்த தாய், மகன் நிலையை கடந்த 09.01.2022 தேதியிட்ட ‘ஜூனியர் விகடன்’ இதழில் ‘ஒரு மாற்றுத்திறனாளி தாயின் கண்ணீர்!’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டதுடன், மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கும் எடுத்துச் சென்றோம்.

இனி நாங்க நிம்மதியா தூங்குவோம்! - நெகிழும் மாற்றுத்திறனாளி தாய் - FOLLOW-UP

இதையடுத்து, இதழ் வெளியானவுடனேயே ஆழிகுடி கிராமத்துக்கு ‘சர்ப்ரைஸ் விசிட்’ செய்த ஆட்சியர் செந்தில்ராஜ், பானுமதி அம்மாளின் வீட்டை ஆய்வுசெய்தார். பின்னர், அவர்களின் குடும்பநிலை குறித்து விசாரித்தவர் பசுமை வீடு கட்டித் தருவதற்கான ஆணையையும், புதிய பட்டாவையும் வழங்கினார். கட்டுமானப் பணிகள் முமுமை பெற்றிருப்பதால், ரூ.2.1 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வீட்டை இப்போது (24.07.22) திறந்துவைத்த ஆட்சியர், வீட்டின் சாவியையும் பானுமதி அம்மாளிடம் ஒப்படைத்திருக்கிறார்.

சிரித்த முகத்துடன் புதிய வீட்டின் முன்பு மகனுடன் அமர்ந்திருந்த பானுமதி, “மழை நேரங்கள்ல உயிருக்கு பயந்து, பக்கத்துல இருக்குற கோயில் மண்டபத்துலதான் நானும் மகனும் படுத்திருப்போம். வீட்டின் மேற்கூரை எப்போ இடிஞ்சு விழும்னு தெரியாத நிலையில, தப்பிச்சு ஓடக்கூட திராணியில்லாத மகனோட பயத்துலயே வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். எங்க கஷ்டத்தை அரசாங்கத்தோட கவனத்துக்குக் கொண்டுபோன ஜூனியர் விகடனுக்கும், வீடு கட்டித்தந்த கலெக்டர் ஐயாவுக்கும் நன்றியைச் சொல்லிக்கிறேன். இனிமே நானும் மகனும் நிம்மதியா தூங்குவோம்” என்றார் வழியும் ஆனந்தக் கண்ணீரைத் துடைத்தபடியே!

இனி நாங்க நிம்மதியா தூங்குவோம்! - நெகிழும் மாற்றுத்திறனாளி தாய் - FOLLOW-UP

‘‘இப்படி ஒரு ஏழ்மையான குடும்பத்தை எனக்கு அடையாளம் காட்டிய ஜூ.வி-க்கு நன்றி” என்றார் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். கூடவே, அந்தக் கட்டுரையில் நாம் சுட்டிக்காட்டியிருந்த பட்டா இல்லாத 14 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கினார் ஆட்சியர்.

நன்றி தெரிவித்து விடைபெற்றோம்..!