Published:Updated:

எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?

தூத்துக்குடி
 உப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
தூத்துக்குடி உப்பு

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பரில் உப்பளங்களில் மிகப்பெரிய தெப்பத்தையும் பாத்திகளையும் தயார்செய்வார்கள்.

தூத்துக்குடி உப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 20,000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு 22 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. உப்பில் பருமணி (கல் உப்பு), சிறுமணி (பொடி உப்பு), தூள் உப்பு என மூன்று வகை உண்டு. தூத்துக்குடி உப்பு இலங்கை, மலேசியா, இந்தோனேஷியா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தூத்துக்குடி
 உப்பு
தூத்துக்குடி உப்பு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 பேச்சிமுத்து
பேச்சிமுத்து

``ஒவ்வோர் ஆண்டும் டிசம்பரில் உப்பளங்களில் மிகப்பெரிய தெப்பத்தையும் பாத்திகளையும் தயார்செய்வார்கள். இதற்கு `செய்னத் வேலை’ என்று பெயர். இங்கு ஆழ்துளைக்குழாய் மூலமாக எடுக்கப்படும் நீர் 6 முதல் 7 டிகிரி `பாமி' என்கிற நிலையில் இருக்கும். இவை 24 டிகிரி பாமி நிலைக்கு வரும்வரை (வெயிலைப் பொறுத்து) 8-10 நாள்கள் தெப்பத்தில் தேக்கி வைக்கப்படும். அதற்குப் பின்னர், சதுர வடிவில் இருக்கும் பாத்திகளுக்கு இவை திறந்துவிடப்படும். பாத்தியில் விடும்போதே, தண்ணீரில் உப்பு ஆடை மிதக்கும். பாத்தியில்விட்ட மறுநாளிலிருந்து தினமும் காலையில் கோட்டுப் பலகையால் பாத்தியில் கோடு போடுவார்கள். இதனால், உப்பு கெட்டிப்படாமல் உருவாகும். அதன்பிறகு, 7-15 நாள்களில் தயாராகும் உப்பு குடோனில் சேமிக்கப்படும். பாத்தியில் தண்ணீர் அதிகம் கட்டினால் 15 நாள்களில் உப்பு பருமணியாக உருவாகும். தண்ணீர் குறைவாக கட்டினால் சிறுமணியாக 7 நாள்களில் உருவாகும். தேவைக்கேற்ப பருமணி, சிறுமணி, தூள் உப்பு என பேக்கிங் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இப்போது ஒரு டன் பருமணி உப்பு 1,200-க்கும், சிறுமணி உப்பு 1,500-க்கும், தூள் உப்பு 1,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்திக்கேற்ப விலைகளில் ஏற்ற இறக்கம் உண்டு" என்கிறார், 30 வருட உப்பு உற்பத்தியாளரான பேச்சிமுத்து.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஈரோடு மஞ்சள்

ங்கலகரமான நிகழ்ச்சிக்கு அடையாளமான மஞ்சள் அதிகம் விளைவது ‘மஞ்சள் மாநகரம்’ என்றழைக்கப்படும் ஈரோட்டில். இந்த ஊர் மஞ்சளுக்கு மவுசு குறையாததற்கு ஒரே காரணம் பவானி ஆற்று நீர்தான் என்கிறார்கள் விவசாயிகள். தமிழ்நாட்டில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. அதில் 30 சதவிகித மஞ்சள் ஈரோடு பகுதியில்தான் பயிரிடப்படுகிறது. அதோடு, தமிழகத்தின் பல பகுதிகளில் விளைவிக்கப்படும் மஞ்சளும், ஈரோடு சந்தைக்கே விற்பனைக்குக் கொண்டுவரப்படுகின்றன. ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆகிய நான்கு இடங்களிலும் மக்கள் தரமான மஞ்சளை வாங்கலாம்.

ஈரோடு மஞ்சள்
ஈரோடு மஞ்சள்
 கந்தராஜா
கந்தராஜா

“இன்றைக்கு ஹைப்ரிட் முறையில் பல வகையான மஞ்சள்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும், சிறந்த மணமும் சுவையும் கொண்ட ஈரோடு மஞ்சளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த மஞ்சள் சமையலுக்கு மட்டுமல்ல; மருந்து மற்றும் அழகுசாதனப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கிழங்கு மஞ்சள், விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் எனப் பல வகைகளை மக்கள் இங்கே வாங்கலாம். இப்போதைய நிலவரப்படி ஒரு குவிண்டால் (100 கிலோ) மஞ்சள் 7,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ மஞ்சளானது 75-80 ரூபாய்க்குக் கிடைக்கிறது” என்கிறார் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் துணைப் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் கந்தராஜா.