Published:Updated:

`விபத்தில் சிக்கியவருக்கு உதவுங்கள்; எந்த பயமும் வேண்டாம்!’ -தூத்துக்குடி எஸ்.பி பகிரும் சட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
 உதவிய போலீஸாருக்கு பரிசு வழங்கிய எஸ்.பி ஜெயக்குமார்
உதவிய போலீஸாருக்கு பரிசு வழங்கிய எஸ்.பி ஜெயக்குமார்

தூத்துக்குடியில் சாலை விபத்தில் சிக்கி, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்து, அவரது உயிரைக் காப்பாற்றிய போலீஸாரை மாவட்ட எஸ்.பி பரிசு வழங்கி பாராட்டினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையிலுள்ள காமராஜ் கல்லூரி அருகே கடந்த 18-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலை விபத்தில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். ஆனால், அவரைச் சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் அவரைக் காப்பாற்ற முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

ஜெயக்குமார் - எஸ்.பி
ஜெயக்குமார் - எஸ்.பி

ஆனால், ரோந்துப் பணிக்காக அந்த வழியாக வந்த தூத்துக்குடி மாவட்ட தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர்கள் சக்தி மாரிமுத்து, டேவிட் ராஜன், சண்முகையா, சுடலைமணி, மகேஷ் ஆகியோர் சற்றும் தாமதிக்காமல், அவர்கள் வந்த காவல்துறை வாகனத்திலேயே விபத்தில் அடிபட்ட நபரை ஏற்றி, அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்து, அவரது உயிரைக் காப்பாற்றினர்.

வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து!

விபத்தில் அடிபட்டவரைக் காப்பாற்ற அங்கு திரண்டிருந்த மக்களில் யாரும் முன்வராத நிலையில் தங்களின் வாகனத்திலேயே அழைத்துச் சென்று காப்பாற்றிய போலீஸாருக்கு மக்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்துள்ளனர். அந்த நபரைக் காப்பாற்றிய போலீஸாருக்கு மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``இது போன்று பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவர்களை காவல்துறையினர் மட்டுமல்ல, பொதுமக்களும் காப்பாற்ற முன்வர வேண்டும்.

விபத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் அனுமதித்த போலீஸார்
விபத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் அனுமதித்த போலீஸார்

இதற்காகத்தான் அரசு, கடந்த 2014-ம் ஆண்டு `குட் சமாரிட்டன் சட்டம்’ (Good Samaritan Laws) என்ற சட்டத்தை இயற்றியிருக்கிரது. இந்தச் சட்டத்தின்படி, இது போன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருப்பவர்களை பொதுமக்கள் மனிதாபிமானத்தோடு, அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவ்வாறு அனுமதிக்கும்போது உதவுபவர்களின் பெயர், முகவரி போன்ற எந்த விவரத்தையும் அரசு மருத்துவமனையிலோ, காவல்துறைக்கோ தெரிவிக்கவேண்டியதில்லை. பொதுமக்களில் பலர் இதுபோன்று பாதிக்கப்படுபவர்களுக்கு உதவுவதற்குத் தயாராக இருப்பார்கள். ஆனால், சாட்சி, வழக்கு, நீதிமன்றம் என அலைச்சலுக்கு ஆளாவோமோ, நமக்கு ஏதும் பிரச்னை வந்துவிடுமோ என்ற பயத்தில்தான் உதவி செய்ய யாரும் முன்வருவதில்லை. இனி எந்த பயமும் தேவையில்லை. இது போன்று உதவுபவர்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது.

ஜெயக்குமார் - எஸ்.பி.
ஜெயக்குமார் - எஸ்.பி.

உதவி செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் அவசர மருத்துவ சிகிச்சையின் இலவச தொலைபேசி எண் 108-க்கோ அல்லது காவல்துறையின் இலவச அவசர உதவி எண் 100-க்கோ பொதுமக்கள் உடனடியாகத் தகவல் தெரிவிக்கலாம். உயிர் விலை மதிப்பில்லாதது. அந்த உயிரைக் காப்பாற்றும் தங்களின் உதவி மேலானது. எனவே, பொதுமக்கள் எவ்வித பயமும் இல்லாமல், இது போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, அவர்களது உயிரைக் காப்பாற்ற முன்வர வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு