இப்போது, ஆலை ஊழியர்கள் மற்றும் ஆலையினால் வாழ்வாதாரம் பெற்றுவந்த தரப்பிலிருந்து புலம்பல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்திருக்கிறது தமிழக அரசு. ஆலையைத் திறக்க நீதிமன்றத்தை நாடியது வேதாந்தா நிறுவனம். ஆனாலும், ஆலையைத் திறக்க முடியவில்லை. இதனால், அதே மண்ணைச் சேர்ந்த மற்றொரு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையின் ஊழியர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘மத்திய-மாநில அரசுகளுக்கு ஸ்டெர்லைட் செலுத்திவந்த வரி மட்டும் ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய். இதன் அடிப்படையில் ஒன்றரை ஆண்டில் 4,500 கோடி ரூபாய் மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் மொத்தம் 1,100 பேர் நிரந்தர ஊழியர்களாக இருந்தோம். ஆலை மூடப்பட்டதும் இவர்களில் 250 பேர் வேதாந்தாவின் மற்ற மாநிலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். 150 பேர் தற்காலிக ஊழியர்களாக மாற்றப்பட்டனர். 100 பேர் வேறு வேலைகளுக்குப் போய்விட்டனர். மீதம் உள்ள ஊழியர்களுக்கு மாதச்சம்பளம் கொடுத்துக்கொண்டிருந்தனர். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக 30 சதவிகித சம்பளத்தைக் குறைத்துவிட்டார்கள். இவை மட்டுமல்லாமல், இரண்டாயிரம் நிரந்தர ஒப்பந்தத் தொழிலாளர்களை ‘ஆலையைத் திறந்தால் அழைக்கிறோம்’ என்று சொல்லி அனுப்பிவிட்டனர். நீதிமன்றத்தில் இறுதித்தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்’’ என்றனர்.

இதுகுறித்து தூத்துக்குடி ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் தியாகராஜன் நம்மிடம், ‘‘ஸ்டெர்லைட் ஆலையில், 60 பேர் ஒப்பந்த வேலைகளைச் செய்துகொண்டிருந்தோம். எங்களிடம் நேரடியாக இரண்டாயிரம் பேரும், மறைமுகமாக மூன்றாயிரம் பேரும் வேலைபார்த்தனர். ஆலையை நம்பி தினசரி ஆயிரம் லாரிகள் இயங்கின. ஆலையை மூடியதால் பலரும் தவணை கட்ட முடியாமல் லாரிகளை விற்றுவிட்டனர். ஐந்து முதல் பத்து லட்சம் ரூபாய் வரை வாடகை வருமானம் வரக்கூடிய 100 குடோன்கள் மூடிக்கிடக்கின்றன. நிலத்தின் மதிப்பும் பாதியாகக் குறைந்துவிட்டது’’ என்றார்.

ஆலையின் அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, “வேதாந்தா நிறுவனம் மிகப்பெரிய குழுமம். அதில் சம்பளக் குறைப்பு என்ற வார்த்தைகளையே பின்னடைவாகக் கருதுகிறோம். இதுகுறித்து குழுமத்தின் மேல்மட்ட அதிகாரிகளிடம் கலந்து பேசவுள்ளோம்’’ என்று சுருக்கமாகச் சொன்னார்கள்.

ஒட்டுமொத்த மண்ணையும் மக்களையும் பாதிக்கக்கூடிய ஆலையை மூடியதில் எந்தத் தவறும் கிடையாது. அதேசமயம் இத்தனை நாட்கள் அந்த ஆலைக்காக ரத்தம் சிந்திய ஊழியர்களுக்கு அரசும் அந்த நிறுவனமும் மாற்று வழியை ஏற்படுத்தித் தர வேண்டும்.