Published:Updated:

` T23' புலி தாக்கி மேலும் ஒருவர் பலி; அச்சத்தில் மக்கள்; வனத்துறை சுட்டுப்பிடிக்க உத்தரவு

``டைகர் 23 என்ற பெயரில் எங்களால் அடையாளம் வைக்கப்பட்டுள்ள இந்த‌ப் புலி இதுவரை மனிதர்களைத் தாக்கியிருந்தாலும், உடலைத் தின்றதில்லை. ஆனால், முதன்முறையாக இன்றைக்கு மாதவனின் உடல் பாகங்களைத் தின்றிருக்கிறது. இந்தப் புலி ஆட்கொல்லியாக மாறிவிட்டது."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முதுமலை புலிகள் காப்பகத்தில் `T-23’ என எண்ணிடப்பட்டு கண்காணிக்கப்பட்டுவந்த ஆண் புலி ஒன்று, அதன்‌ உடலில் ஏற்பட்டுள்ள‌ காயம் காரணமாகக் காட்டில் இரை தேட‌ முடியாமல் காட்டைவிட்டு வெளியேறியுள்ளது. தேயிலைத் தோட்டத்தில் தஞ்சம் புகுந்திருக்கும் அந்தப் புலி நீலகிரி மாவட்டம், கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக 15-க்கும் அதிகமான கால்நடைகளை வேட்டையாடியிருக்கிறது. தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்ற நபரைக் கடந்த வாரம் தாக்கியது.

டைகர் 23
டைகர் 23

தலையில் கடுமையான காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த சந்திரனுக்கு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இவரது இறப்புக்குக் காரணமான‌ குறிப்பிட்ட அந்தப் புலியைப் பிடிக்க வலியுறுத்தியும், வனத்துறையினரைக் கண்டித்தும் கூடலூரில் ஏராளமான மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். அடுத்த நபரைப் புலி தாக்குவதற்குள் அந்தப் புலியைப் பிடிக்கக் களமிறங்கியது வனத்துறை.

டைகர் 23 தேடுதல் வேட்டை
டைகர் 23 தேடுதல் வேட்டை
நீலகிரி: 2 மாதங்களில் 11 மாடுகள்; புலி தாக்கிக் கொல்லப்பட்ட மாட்டுடன் வனத்துறை அலுவலகம் முற்றுகை!

கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், பறக்கும் கேமராக்கள், கேரளாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறப்புக்குழு, வனத்துறையின் களப்பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள், காவல்துறையினர் எனப் புலியைப் பிடிக்க பெரும்படையுடன் களத்தில் இறங்கி புலியைத் தேடிவந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்று மசினகுடி அருகிலுள்ள ஒலகேரி பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மாதன் என்ற பழங்குடியின நபரைப் புலி தாக்கியது. அவரது சடலத்தைக் காட்டுக்குள் இழுத்துச் சென்று உடல் பாகங்களைத் தின்றிருக்கிறது. இதையறிந்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டு அந்தப் புலியை விரட்டினர். அடுத்தடுத்து நிகழும் புலி தாக்குதல் சம்வத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மசினகுடி மக்கள் மறியலில் ஈடுபட்டுவருகின்றனர்.

டைகர் 23
டைகர் 23

புலி தாக்குதல் குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், ``டைகர் 23 என்ற பெயரில் எங்களால் அடையாளம் வைக்கப்பட்டுள்ள இந்த‌ப் புலி இதுவரை மனிதர்களைத் தாக்கிவந்தாலும் உடலைத் தின்றதில்லை.ஆனால், முதன்முறையாக இன்றைக்கு மாதவனின் உடல் பாகங்களை தின்றிருக்கிறது. இந்தப் புலி ஆட்கொல்லியாக மாறிவிட்டது" என்றார். தற்போது வனத்துறை அந்தப் புலியை சுட்டுப் பிடிக்க உத்தரவிட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு