Published:Updated:

நெட்டி முறிக்காதீங்க!

நெட்டி முறிக்காதீங்க!
பிரீமியம் ஸ்டோரி
நெட்டி முறிக்காதீங்க!

டாக்டர் விகடன்

நெட்டி முறிக்காதீங்க!

டாக்டர் விகடன்

Published:Updated:
நெட்டி முறிக்காதீங்க!
பிரீமியம் ஸ்டோரி
நெட்டி முறிக்காதீங்க!

கவலையுடன் சாப்பிடாதீங்க!

* சாப்பிடும்போது சாப்பாட்டைத் தவிர வேறு சிந்தனைகள் வேண்டாம். உணவைப் பற்றிச் சிந்திப்பது உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கும். செரிமானம் சீராகும்.

* சாப்பிட்ட உடனே தூங்கச் செல்ல வேண்டாம். தாமதமாகச் சாப்பிடுவதும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். நெஞ்செரிச்சலை உருவாக்கும்.

* இரவில் செரிமானத்துக்கு எளிதான உணவுகளை மட்டுமே உண்ணுங்கள். மாவுச் சத்தும், மசாலாக்களும், எண்ணெயும் நிறைந்த உணவுகள் செரிமானத்தைக் கடினமாக்குவதுடன் தூக்கத்தையும் கெடுக்கும்.

* மூன்று வேளை வயிறுமுட்ட சாப்பிடுவதற்கு பதில் ஆறு வேளை குறைந்த அளவில் சாப்பிடுவது உங்கள் ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

* சாப்பிடும்போது கவலைகளை ஓரங்கட்டிவிடுங்கள். கவலையாக இருக்கும்போது உங்களையும் அறியாமல் நீங்கள் அதிகம் சாப்பிடுவீர்கள்.

நெட்டி முறிக்காதீங்க!

விரல் எலும்புகளின் இணைப்புகளுக்கு இடையே `சைனோவியல்’ என்கிற திரவம் சுரக்கும். இதுதான் மூட்டு எலும்புகள் உரசாமலிருக்க எண்ணெய்போலச் செயல்படுகிறது. நீண்ட நேரம் அசையாமலிருந்தால், குறிப்பிட்ட பகுதியின் எலும்புகளுக்கிடையே இந்தத் திரவம் மொத்தமாகச் சேர்ந்துவிடும். நெட்டி முறிக்கும்போது, எலும்பு இணைப்புகள் விரிவடைவதால், அதனுள் சேர்ந்திருக்கும் திரவம் வேகமாக நகரும்போது சொடக்குச் சத்தம் வெளிப் படுகிறது.

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிறைய நெட்டி முறித்தால், பிடி வலிமையின்றிப் போவது, முழங்கால் வீக்கம், தசைநார் பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.

நெட்டி முறிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட, குறிப்பிட்ட அந்தப் பகுதியை அழுத்தம் நிறைந்த வேலைகளுக்கு அவ்வப்போது உட்படுத்த வேண்டியது அவசியம்.

தகவல்: ஆசிக் அமீன், எலும்பு மருத்துவர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism