பிரீமியம் ஸ்டோரி

போளி, ஆலூ பராத்தா செய்யும்போது, பூரணத்தை உருண்டையாக வைக்காமல் வடை போல செய்து வைத்தால் மாவால் மூடும்போது மேற்புறமும் கீழ்ப்புறமும் சமமாக இருக்கும். தேய்க்கும்போது, மாவு ஒதுங்காது.

டிப்ஸ்..!

அவரை, பீன்ஸ், கொத்தவரங்காய் போன்ற காய்களை கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு அதிக சூட்டில் ஓரிரு நிமிடங்கள் வதக்கி, பின்னர் தீயைக் குறைத்து, தண்ணீர் தெளிக்கவும். இதை மூடி போட்டு சமைத்தால், ஐந்தே நிமிடங்களில் நிறம் மாறாமல் வெந்துவிடும்.

கேரட் கீர் செய்யும்போது அடுப்பில் இருந்து இறக்கும்போது ஏலக்காய்த்தூளுடன் ஒரு சிட்டிகை பச்சைக்கற்பூரம் சேர்த்தால் சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.

டிப்ஸ்..!

கிழங்கு வகைகளை ரோஸ்ட் செய்யும்போது ரவையில் உப்பு, காரம்/மசாலா, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துப் பிசிறி வைக்கவும். கிழங்கை வேகவைத்து எடுத்து, கலந்து வைத்திருக்கும் கலவையில் பிசிறி வைக்கவும். எண்ணெய் குறைவாக வைத்து சன்னமான தீயில் இதை ரோஸ்ட் செய்யலாம். சுவையும் கூடும். எண்ணெய் செலவும் குறையும்.

அடைக்கு மாவு அரைக்கும்போது, ஒரு கைப்பிடி அளவு கொள்ளு சேர்த்து ஊறவைத்து அரைத்தால் வித்தியாசமான சுவையில் இருப்பதோடு வாய்வு தொந்தரவும் ஏற்படாமலிருக்கும்.

டிப்ஸ்..!

பாயசம் செய்வதற்கு வெறும் வாணலியில் ஜவ்வரிசியை வறுத்து சூடாக்கி, பிறகு வேகவைத்தால் முத்து முத்தாக வெந்துவிடும். ருசியும் நன்றாக இருக்கும். ஒன்றோடோன்று ஒட்டாமல் வரும்.

கொத்தமல்லி அதிகமாகவும் விலை மலிவாகவும் கிடைக்கும்போது நிறைய வாங்கி வந்து அலசி, உப்பு, காரத்துக்கேற்ற பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, வடைகளாகத் தட்டி வெயிலில் காயவைத்து பத்திரப்படுத்தவும். கொத்தமல்லி கிடைக்காதபோது இதை குழம்பு, ரசத்தில் சேர்த்தால் மிகவும் வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும்.

டிப்ஸ்..!

ஒரு டேபிள்ஸ்பூன் தனியா, ஆறு மிளகு ஆகியவற்றை அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு வாசனை வரும்வரை வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். புளி சாதம் செய்யும்போது, புளிக்காய்ச்சலை சாதத்துடன் சேர்த்துக் கலக்கும்போது இந்தப் பொடியை சிறிதளவு தூவி இறக்கினால் மிகவும் ருசியாக இருக்கும்.

வடைக்கு அரைக்கும்போது மாவு நீர்த்துவிட்டால், சிறிதளவு அவல் சேர்த்து அரைத்து வடை தட்டினால் நன்றாக வரும்.

டிப்ஸ்..!

முறுக்கு மாவு கெட்டியாக, பிழிவதற்கு கடினமாக இருந்தால் சிறிதளவு உப்பில்லாத வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கலந்தால் கடினத்தன்மை மாறும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு