Published:Updated:

ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

ஆரோக்கிய இல்லம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கிய இல்லம்

வீட்டின் மற்ற இடங்களைவிடவும் சமையலறைதான் தேவையற்ற பொருள்களை அதிகம்கொண்ட அறையாக இருக்கிறது.

வ்வொரு வீட்டின் வரவேற்பறையிலும் அவசியம் இருக்க வேண்டியது புத்தக அலமாரி. புத்தகங்களைப் பார்ப்பதே பாசிட்டிவிட்டியைத் தரும். கண்ணாடிக் கதவுகள் வைத்த அலமாரிகளில் புத்தகங்களை அடுக்கி வைத்தால் பார்வைக்கும் அழகு. தேடிப் படிக்கவும் சுலபம். தூசும் படியாது.

ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

ஒரு புத்தகத்தை மீண்டும் மீண்டும் படிக்கப் போகிறீர்கள் அல்லது நண்பர்களுக்குப் படிக்கக் கொடுக்கப் போகிறீர்கள் என்றால் மட்டும் அதைப் பத்திரப்படுத்தலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

நல்வாழ்வுக்கான அஸ்திவாரம் சமையலறையே. அது முறையாகப் பராமரிக்கப்படாதபோது அத்தனை ஆரோக்கியக் கேடுகளுக்குமான ஆரம்ப இடமாகவும் மாறுகிறது. பல வீடுகளிலும் சமையலறைதான் கலவரங்கள் நடக்கும் இடத்துக்கான களேபரங்களுடன் காணப்படுகிறது. சமையலறை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு முதல் படி, அதில் அடைசல்கள் இல்லாமல் வைத்திருப்பதுதான். வீட்டின் மற்ற இடங்களைவிடவும் சமையலறைதான் தேவையற்ற பொருள்களை அதிகம்கொண்ட அறையாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

சமையலறையைச் சுத்தம் செய்வதை ஒரே நாளில் முடித்துவிடுவது சிறப்பு. அதற்கேற்ப அந்த வேலையைத் திட்டமிட வேண்டும். உதவிக்கு யாரையாவது வைத்துக்கொண்டு ஒரே நாளில் சுத்தப்படுத்துவது சுலபமாகவும் இருக்கும். நகை, துணிமணிகளுக்கு அடுத்து அதிகம் பெண்கள் வாங்க விரும்புவது சமையலறைப் பாத்திரங்கள். அப்படிப் பார்த்துப் பார்த்து வாங்கிய பொருள்களைத் தேவையற்றவை எனத் தூக்கிப்போட ஒருவித மன தைரியம் தேவைதான்.

ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

சமையலறை அலமாரிகளில் உள்ளவை, மேடைக்கு அடியில் உள்ளவை, பரணில் போடப்பட்டவை அனைத்தையும் ரகம் வாரியாகப் பிரிக்க வேண்டும். கடாய்களை சைஸ்வாரியாகத் தனியே எடுங்கள். கரண்டிகள், ஸ்பூன்கள்... இப்படி ஒவ்வொன்றையும் தனித்தனியே அடுக்குங்கள். இப்படிப் பிரிக்கும்போது ஒரே பொருள் நம்மிடம் எத்தனை இருக்கின்றன என்பது தெரியும். உதாரணத்துக்கு, நான்கு குக்கர் வைத்திருக்கிறீர்கள் என்றால் நான்குமே உங்களுக்குத் தேவையா என்பதை முடிவு செய்ய இது வசதியாக இருக்கும்.

சில பாத்திரங்களை விருந்தாளிகள் வரும்போது உபயோகிக்க எனத் தனியே வைத்திருப்போம். விருந்தாளிகளுக்கெனத் தனியே எடுத்துவைப்பதில் தவறில்லை. ஆனால், அதற்கு முன் உங்களை நீங்களே ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்...

ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

`உங்கள் வீட்டுக்கு எப்போதெல்லாம் அதிக அளவிலான விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள்? போன வருடத்திலா... சில வருடங்களுக்கு முன்பா... அல்லது அப்படி யாரும் வந்ததே இல்லையா?'

எப்போதோ வருவார்கள் என்றாலோ, வந்ததே இல்லை என்றாலோ அவர்களுக்கெனத் தனியே பாத்திரங்களை எடுத்துவைப்பது அர்த்தமற்றது.

ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

‘அணிகிற உடைக்கு மேட்ச்சாக ஏராளமான ஹேண்ட்பேக்குகள் அவசியா? யோசியுங்கள். தையல் போனது, ஜிப் போனதையெல்லாம் அப்புறப்படுத்திவிடுவதே நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு அலுவலகத்துக்கு ஒன்று, பயணத்துக்கு ஒன்று, ஃபங்ஷனுக்கு ஒன்று என மூன்று ஹேண்ட்பேக்குகள் போதும். அதிக ஹேண்ட்பேக்குகள் இருக்கும்பட்சத்தில் அவற்றை ஒன்றுக்குள் ஒன்றாகப் போட்டு வைத்தால் இடத்தை அடைக்காமலிருக்கும்.

ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

பீரோ, அலமாரி, பெட்டி என எல்லாவற்றிலும் உள்ள துணிகளில் கிழிந்தவை, சாயம் போனவை, கறை படிந்தவை, அளவு மாறிப்போனவை போன்றவற்றைப் பிரித்து ஒதுக்கவும். பிரித்து எடுத்த துணிகளில் தேவையானவற்றை மட்டும் எடுத்து உள்ளே வைக்கலாம். குறிப்பாக... எந்த உடையை அணிகிறபோது சந்தோஷமாக உணர்கிறோமோ, அதையெல்லாம் வைத்துக்கொள்ளலாம். அதேபோல, தேவையற்ற உள்ளாடைகளையும் சேர்த்து வைக்க வேண்டாம்.

வார்ட்ரோப்பை செட் செய்கிறபோது கூடியவரையில் துணிகளைத் தொங்க விடாமல் வைப்பது சிறந்தது. தொங்கவிட்டால் இடம் அடைபட்டது போலத் தோன்றும். மடித்து ஒன்றன் மேல் ஒன்றாக வைப்பதே சரியானது.

ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு பத்து டவல்கள் போதும். அதில் இரண்டு டவல்களை விருந்தினர்கள் வரும்போது பயன்படுத்தலாம். இதுபோலவே கைக்குட்டைகள், பெட்ஷீட், மிதியடி, திரைச்சீலை, டைனிங் டேபிள் உறை என எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

துணிகளையும் உடைமைகளையும் ஒழுங்குபடுத்துவது என்பது வருடத்தில் ஒருநாள் செய்கிற வேலையாக இல்லாமல், வாரம் ஒருமுறையோ, மாதம் இருமுறையோ செய்யப்படுகிற தொடர் வேலையாக மாற வேண்டும். அதை வீட்டிலுள்ள எல்லோருக்கும் பழக்கப்படுத்த வேண்டும்.

ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

குழந்தைகளையும் இந்தப் பணியில் ஈடுபடுத்துவது மிக அவசியம். சிறுவயதிலிருந்தே வீட்டுவேலைகளுக்கெல்லாம் பழக்கப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான ஒரு லைப்ஸ்டைலை குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்தலாம்.

ஆபரணங்கள் வாங்கும்போது ஒவ்வோர் உடைக்கும் ஒன்று என வாங்க வேண்டியதில்லை. ஒரே கலரில் உள்ளவற்றுக்குப் பொதுவாகப் பொருந்தும்படி அளவாக வாங்கினாலே போதுமானது.

ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

செயற்கை நகைகள், ஹேர் பேண்டுகள், பொட்டு போன்றவற்றைப் பிரித்து ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பெட்டியில் வைத்துக்கொள்ளலாம். சின்னச் சின்ன கப்புகளில் போட்டு, டிராயரில் வைத்தாலும் தேவைக்கேற்ப உபயோகிப்பது எளிது.

ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

எடை குறைந்ததும் அணியலாம் என்று சில உடைகளைப் பத்திரப்படுத்தி யிருப்போம். அவை இப்போது உங்களுக்குப் பொருந்தினால் வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் கொஞ்சம் எடை குறைந்த பிறகுதான் சரியாக இருக்கும் எனத் தோன்றினால் வைத்துக்கொள்ளாதீர்கள். எடையைக் குறைத்ததும் புது உடைகளையே வாங்கி அதைக் கொண்டாடலாம். கொஞ்சம் டைட் செய்தால் அல்லது ஒரு தையலைப் பிரித்துவிட்டால் உபயோகிக்கலாம் என்கிற மாதிரியான உடைகளை மட்டும் வைத்துக்கொள்ளலாம்.

ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

குளியலறையிலும் கழிவறையிலும் சேர்த்து வைத்திருக்கிற அத்தனை பொருள்களையும் முதலில் எடுத்து வெளியே போடுங்கள். ஒவ்வொன்றாக ஆராய்ந்து பாருங்கள். எக்ஸ்பைரி தேதி ஆகியிருந்தாலோ, உடைந்திருந்தாலோ, உபயோகித்துப் பல காலம் ஆகியிருந்தாலோ, அவை உங்களுக்குத் தேவையற்றவை என அர்த்தம். தூக்கிப் போடத் தகுதியானவையே... தயக்கமே வேண்டாம்!

ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

கடைகளில் கிடைக்கிற காஸ்மெட்டிக்ஸ், கண்டிஷனர்ஸ், ஃபேஸ் வாஷ் எனக் கண்டதையும் வாங்கிவந்து, குளியலறையிலும் கழிவறையிலும் அடுக்குவார்கள் சிலர். ஆனால், ஆறு மாதங்களாகியும் அவற்றில் பல அயிட்டங்களின் சீல்கூடப் பிரிக்கப்படாமல் அப்படியே இருக்கும். ஆறு மாதங்கள் உபயோகிக்காத ஒரு பொருளை அதன் பிறகும் நீங்கள் நிச்சயம் பயன்படுத்தப் போவதில்லை. எனவே, யோசிக்காமல் அவற்றைத் தூக்கிப் போடலாமே!

ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

பாத்ரூமில் கண்டிப்பாகக் குப்பைத் தொட்டி ஒன்றை வையுங்கள். மூடி போட்ட குப்பைத் தொட்டி என்றால் சிறப்பு. அன்றாடம் சேர்கிற தலைமுடி, ஷாம்பூ பாக்கெட், சோப்பின் அட்டை போன்றவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்த வசதியாக இருக்கும். அந்தக் குப்பைத் தொட்டி நிரம்பி வழியாதபடி அதையும் அடிக்கடி சுத்தப்படுத்துங்கள்.

ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

பாத்ரூம் மற்றும் கழிவறைகளைச் சுத்தப்படுத்த துடைப்பம், பிரஷ், கிருமி நாசினி போன்றவற்றை வீட்டிலுள்ள அனைத்துக் கழிவறை மற்றும் பாத்ரூம்களிலும் வைக்க வேண்டும் என அவசியமில்லை. ஒரு பாத்ரூமுக்குப் பயன்படுத்துவதையே இன்னொன்றுக்கும் பயன்படுத்தலாம். ஆனால், அவை தேய்ந்து பயன்படுத்த முடியாத நிலைக்குப் போன பிறகும் தூக்கிப்போட மனசில்லாமல் உபயோகிக்காதீர்கள். குறிப்பிட்ட இடைவெளிகளில் மாற்றுங்கள்.

ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

யூஸ் அண்டு த்ரோ டப்பாக்கள், வாட்டர் கேன்கள், அட்டைப் பெட்டிகள், தெர்மாகோல் என எதையுமே தூக்கிப் போட மனது வராது சிலருக்கு. ஒருநாள் வீட்டைக் கறையான் அரித்திருக்கும் அல்லது பத்திரப்படுத்திய பிளாஸ்டிக் பொருள்கள் உருகி ஒன்றோடுஒன்று ஒட்டிக்கொண்டு தம் பயனை இழந்திருக்கும். வேறு வழியே இல்லாமல் அரை மனதுடன் அவற்றைத் தூக்கிப்போடுவார்கள். அந்தப் பொருள்கள் ஏற்படுத்தியிருந்த மக்கிய வாசத்தையும் கறைகளையும் சுத்தப்படுத்துவது கூடுதல் சுமையாகச் சேர்ந்திருக்கும்.

எந்நேரமும் டி.வி முன்னே அமர்ந்து மணிக்கணக்கில் ரசிக்கிறோம். ஒருநாளாவது அதன் பின்பக்கத்தை எட்டிப் பார்த்திருப்போமா? ஏகப்பட்ட வயர்களோடு ஒட்டடையும் தொங்கிக்கொண்டிருக்கும். அவற்றில் தேவையற்றவற்றை அகற்றி, தேவையானவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கட்டவும் செய்யலாம்.

ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

ரிமோட்டைக் கண்டுபிடிப்பதென்பது பல வீடுகளிலும் டெய்லி டாஸ்க். ஏ.சி, டி.வி என அனைத்துக்குமான ரிமோட்டுகளை ஒரு ட்ரேயில் வைப்பதை வழக்கமாக்கிக ்கொள்ளலாமே!

பல வீடுகளில் அலங்காரப் பொருள்களைத் திறந்த அலமாரிகளில் வைத்திருப்பார்கள். அவற்றைச் சுத்தம் செய்து பல காலமாகியிருக்கும். முடிந்தவரை இவற்றைக் கண்ணாடிக் கதவுகள் போட்ட அலமாரிகளுக்குள் வைப்பதே சிறந்தது. அதுவும் அன்புக்குரியவரின் அன்பளிப்பு என்றால் மட்டுமே பத்திரப்படுத்துங்கள்.

ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

புசுபுசு பொம்மைகளில் எக்கச்சக்க தூசு படிந்திருக்கும். வீட்டுக்கு வருகிற குழந்தைக்கு எடுத்து விளையாடக் கொடுக்கக்கூடத் தகுதியில்லாத நிலையில் இருக்கும். அவை தேவைதானா? யோசியுங்கள்.

`சிங்க்'கில் இரவு முழுவதும் பாத்திரங்களைத் தேங்கவிடாமல் வைப்பது நல்லது. அதேபோல குப்பைக்கூடையைக் கட்டாயம் மூடிவைக்க வேண்டியது அவசியம். இவை, கரப்பான் பூச்சிகளின் பெருக்கத்தைக் குறைக்கும்.

ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

புதிதாக வீடு கட்டுபவர்கள், வீட்டைப் புதுப்பிக்கிறவர்கள் ‘இன்செக்ட் ட்ராப்’ என்பதைத் தண்ணீர் வெளியேறும் இடங்களில் பொருத்திவிடலாம். இதன் மூலம் கரப்பான்பூச்சிகள் நீர்க்குழாய்கள் மூலம் மேலே வருவதைத் தடுக்கலாம். இதை பாத்ரூமிலும் பொருத்தலாம்.

ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

நீங்கள் பயன்படுத்தாத சாம்பிள் சோப், ஷாம்பு, சீப்பு, ஷவர் கவர், சென்ட் போன்றவற்றை போன்றவற்றை பாத்ரூமில் அடைக்காதீர்கள். உபயோகித்த பொட்டு, உள்ளாடைகளின் ஸ்டிக்கர் போன்றவற்றை பாத்ரூம் சுவர்களில் ஒட்டிவைக்கிற பழக்கத்தைத் தவிருங்கள். உபயோகித்த துணிகளை பாத்ரூம் ஹேங்கரிலேயே தொங்கவிடுவது வேண்டாம். பாத்ரூம் மற்றும் கழிவறை வாசலில் போடப்படுகிற மிதியடிகளை இரண்டு நாள்களுக்கொரு முறையாவது துவைத்துப் பயன்படுத்துங்கள்.

ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

வரவேற்பறையில் குடும்ப உறுப்பினர்களின் போட்டோக்களை மாட்டி வைப்பது பலருக்கும் பிடிக்கிறது. சிலர் ஓவியங்களையும் மாட்டி வைத்திருப்பார்கள். தவறில்லை. ஆனால், இவற்றின் பின் பகுதிதான் பல்லிகளின் பெருக்கத்துக்கான இடம். அதை நினைவில்கொண்டு கூடியவரையில் குறைந்த அளவிலான படங்களை மாட்டுவது சிறப்பு. அதேபோல ஷோகேஸிலும் ஏகப்பட்ட பொருள்களை அடைக்க வேண்டாம்.

ஆரோக்கிய இல்லம் அமைப்போம்!

சுகாதாரம் என்று பார்த்தால் காலணிகளை வீட்டுக்கு வெளியே வைப்பதே சிறந்தது. ஆனால், வெளியே வைக்க முடியாதபட்சத்தில், தினமும் பயன்படுத்துவதை மட்டும் வீட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். வீட்டுக்கு வெளியே இடமிருந்தால் ஷூ ஸ்டாண்டு வாங்கி, அதில் அடுக்கி வைக்கலாம். ஷூ ஸ்டாண்டு பயன்படுத்துவோர், அதிலேயே சாக்ஸ் வைக்க இடம் ஒதுக்கினால், காலை பரபரப்பில் சாக்ஸ் தேடும் டென்ஷன் குறையும். பழைய காலணிகளை அப்புறப்படுத்துவதில் தயக்கமே வேண்டாம்.