Published:Updated:

அதிகரிக்கும் இணையவழி நேர்முகத் தேர்வு! - எதிர்கொள்ளும் வழிகள்!

நேர்முகத் தேர்வு
பிரீமியம் ஸ்டோரி
நேர்முகத் தேர்வு

நீங்கள் கேட்கும் கேள்விகள் உங்களைப் பற்றி நெகட்டிவ்வாக நினைக்க வைத்துவிடக் கூடாது!

அதிகரிக்கும் இணையவழி நேர்முகத் தேர்வு! - எதிர்கொள்ளும் வழிகள்!

நீங்கள் கேட்கும் கேள்விகள் உங்களைப் பற்றி நெகட்டிவ்வாக நினைக்க வைத்துவிடக் கூடாது!

Published:Updated:
நேர்முகத் தேர்வு
பிரீமியம் ஸ்டோரி
நேர்முகத் தேர்வு
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளிக் கல்வி முதல் அலுவலக வேலை வரை அனைத்தும் வீட்டிலேயே நடக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதில் வேலைக்குத் தேர்வுசெய்யும் நேர்முகத் தேர்வுகளுக்கும் விதிவிலக்கு இல்லை. ‘நேர்முகம்’ என்பது நேரில் சந்திப்பதுதான். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில், யாரும் யாரையும் நேரில் பார்க்க முடியாது என்பதால், இணையம் மூலம் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இணையம் மூலம் நேர்முகத் தேர்வு என்பது முன்பு ஐ.டி துறையில் மட்டும் இருந்தது, தற்போது எல்லாத் துறைகளிலும் வேகமாக நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. இந்த ஆன்லைன் நேர்காணலில் ஜெயிப்பது எப்படி என்று டிப்ஸ் வழங்குகிறார், சமூகவியலாளரும் மனிதவள மேம்பாட்டு ஆலோசகருமான எஸ்.பி.பாலமுருகன்.

நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு

பேச்சுத் திறமை வேண்டும்..!

“கடந்த நான்கு மாதங்களாக வீட்டிலிருந்து வேலை செய்யும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இதற்கு ஏற்றாற்போல, நிறுவனங்களும் தங்கள் கோட்பாடுகளை மாற்றிவருகின்றன. இந்த ஊரடங்கு காலத்தில் நேர்முகத் தேர்வு பல இணையச் சேவைகள் மூலம் நடத்தப்படுவது புதிய நடைமுறையாக மாறியிருக்கிறது.

இணையவழியிலான நேர்முகத் தேர்வில் வெற்றியடைய பேச்சுத் திறமை அவசியம். முன்னர் தொழில்நுட்ப அறிவு அதிகம் இருந்து, பேச்சுத் திறமை குறைவாக இருந்தாலும் அவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளும் நிலை இருந்தது. ஆனால், இன்றைய சூழல் அப்படியல்ல. இணையவழியாக வீட்டிலேயே வேலை பார்க்கப்போகிறோம் என்பதால், கம்யூனிகேஷன் ஸ்கில் மிகவும் அவசியம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்ததாக தங்கள் துறையில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து, தங்களை மேம்படுத்திக் கொள்ளுதல் அவசியம். கல்லூரிகளில் நமக்கு அடிப்படைக் கல்வியே வழங்கப்படுகிறது. அதைத் தவிர, தொழில்நுட்பங்களில் ஏற்படும் மாற்றத்தை நாளுக்கு நாள் அறிந்துகொள்வது அவசியம். எப்போதுமே தங்கள் துறை சார்ந்த நுட்பங்களைப் புதிதாகக் கற்றுக்கொள்ள ஆர்வம் உடையவராக இருக்க வேண்டும்” என்றவர், இணையவழி நேர்முகத் தேர்வு நடைபெறும் நாளில் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை எடுத்துச் சொன்னார்.

நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு

ஆள்பாதி ஆடைபாதி!

ஒருவரை வேலைக்கு நியமிக்கும்போது படிப்பு, திறமை, தோற்றம், பேச்சுத் திறமை எனப் பல வகைகளில் ஆராய்ந்து தேர்வு செய்கிறோம். இணையவழித் தேர்வின்போதும் உடையில் கவனம் அவசியம். சிலர் ‘இணையவெளி தேர்வுதானே..!’ என்று நினைத்து, டிஷர்ட்டுடன் வந்துவிடுகிறார்கள். இதை உயரதிகாரிகள் யாரும் விரும்புவதில்லை. இணையவழி நேர்காணலில் நீங்கள் டை கட்டி பக்காவாக வர வேண்டும் என்றில்லை. ஆனால், நேர்த்தியாக உடை அணிந்திருப்பது அவசியம்.

நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு

இடம் தேர்வு செய்தல்!

நேர்முகத் தேர்வு நடக்கும்போது, வீட்டில் அவரைச் சுற்றிக் குழந்தைகள் விளையாடுவார்கள். டி.வி சத்தம், சமையலறையில் மிக்ஸி சத்தம் என ஒரே களேபரமாக இருக்கும். நேர்முகத் தேர்வுக்கென அமைதியான சூழலில் அமர வேண்டும். வேறு எந்தவிதத்திலும் உங்கள் கவனம் சிதறாத வண்ணம் அந்த இடம் அமைய வேண்டும். நேர்முகத் தேர்வு செய்பவர்கள் உங்களை மட்டும் பார்க்கப் போவதில்லை. உங்கள் பின்னால் என்னென்ன நடக்கிறது என்றும் கவனிப்பார்கள். தேவையற்ற சத்தங்கள் அவர்களின் கவனத்தைச் சிதைக்கும்.

வாய்ஸ் டோனில் கவனம்!

அமைதியான இடமா, இணையச் சேவை சரியாக இருக்கிறதா போன்ற அனைத்தையும் ஆராய்ந்துவிட்டு, காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு, நேர்முகத் தேர்வில் அமரும் பலர் தங்களின் வாய்ஸ் டோனை அதிகப்படுத்திப் பேசுகின்றனர். காரணம், சிலருக்கு போனில் பேசும்போது உரக்கப் பேசிப் பழக்கம். இவ்வாறு செய்வதால் ஹெட்போன் போட்டு அமர்ந்திருக்கும் எதிராளி எரிச்சல் அடைவார். எனவே, வாய்ஸ் டோனை கட்டுக்குள் வைத்து அமைதியாகப் பேச வேண்டும்.

அதிகரிக்கும் இணையவழி நேர்முகத் தேர்வு! - எதிர்கொள்ளும் வழிகள்!

பேக்கேஜ் பேச்சு அவசியமா?

பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு நேர்முகத் தேர்வின்போது பேக்கேஜ் குறித்துப் பேசுவது. இதைத் தவிர்க்க வேண்டும். நேர்காணல் செய்பவர்கள் உங்களைத் தேர்வு செய்யலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்காத சமயத்தில், நீங்கள் பேக்கேஜ் பற்றிப் பேசுவது, எதிர்மறை முடிவுகளைத் தரலாம். பெரும்பாலான இணையவழி நேர்காணலில் இரண்டு அல்லது மூன்று சுற்றுகள் இருக்கும். இறுதிச்சுற்றில் பேக்கேஜ் பற்றிய உங்களின் எதிர்பார்ப்பைக் கூற வாய்ப்பு அளிக்கப்படும். அதுவரை பொறுமையுடன் இருப்பது அவசியம்.

கேள்வி கேட்கலாமா?

நேர்முகத் தேர்வின் இறுதியில், ‘உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்தால் கேட்கலாம்’ என்று நேர்காணல் செய்பவர்கள் கூறுவார்கள். அப்போது நீங்கள் அவர்களிடம் தயங்காமல் கேள்வி கேட்கலாம். நீங்கள் கேட்கும் கேள்விகள் உங்களைப் பற்றிய அபிப்ராயத்தை அதிகப்படுத்த வேண்டுமே தவிர, உங்களைப் பற்றி நெகட்டிவ்வாக நினைக்க வைத்துவிடக் கூடாது’’ என்று முடித்தார் பாலமுருகன். இவர் சொல்கிறபடி நடப்போமா..?