நம்மில் பெரும்பாலானவர்களுக்கு முழுமுதற்கொள்கையே உழைத்து, பணம் பொருள் சம்பாதிப்பது; சேர்த்துவைப்பது. அதற்காக நம்மூர் பஸ் ஸ்டாண்ட் பூக்கார அக்கா தொடங்கி சர்வதேச நிறுவனத் தலைமை நிர்வாகி வரை... தொடக்கப்பள்ளி ஆசிரியரிலிருந்து தலைமைச் செயலக அதிகாரி வரை அனைவருமே ஒவ்வொரு தினத்தையும் பரபரப்பாகக் கடக்க வேண்டியிருக்கிறது.

‘வேலை உங்களை எந்தளவுக்கு விரட்டுகிறது?’ என்று பணியாளர்கள், அலுவலர்கள் எனப் பல தரப்பினரிடமும் ஒரு கேள்வியை முன்வைத்தோம். அவர்களில் பலர் தங்கள் பணி நெருக்கடிக்கு இடையிலும் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லவும், உணர்வுகளைக் கொட்டித் தீர்க்கவும் தயாராகவே இருந்தார்கள்.

கோயம்புத்தூர் தனியார் தொழிற்சாலை ஒன்றில் சூப்பர்வைசராக இருக்கும் சிவக்குமார், “மென்ட்டல் வொர்க்கைவிட உடல் வேலைதான் அதிகம் ஸ்ட்ரெஸ் தருது. மூளை சார்ந்த பணி செய்யும் இடத்துல பாட்டு, டான்ஸ், விளையாட்டு மாதிரி ரிலாக்சேஷன்ஸுக்கான வசதிகள் இருக்கு. ஆனா, ஆலைகள்ல அதுக்கான வாய்ப்பு சுத்தமா இல்லை. சில ஆலைகள்ல மட்டும்தான் ஊழியர்களின் மனநிலையைப் புரிஞ்சுக்கிறாங்க. ஒண்ணு மட்டும் சொல்லணும்... வேலைகள்ல ஏற்படும் பிரஷர் அப்படியே வீட்டுல எதிரொலிக்கிறதைத் தவிர்க்கவே முடியலை” என்றார்.

வீட்டு உபயோகப் பொருள்களை விற்கும் ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஆள் சேர்த்துத்தரும் பணியில் இருக்கிறார், சென்னையைச் சேர்ந்த திலீபன். “டார்கெட்தான் தனியார் நிறுவனங்கள்ல பெரிய பிரஷர். நாம சேர்த்துவிடும் ஆள்களும் வேலைப்பளு தாங்காம விட்டுட்டுப் போயிடுவாங்க. அதுக்கும் எங்களுக்குத்தான் திட்டு விழும். ‘இந்த வேலைக்கு ஏன் வந்தோம்’னு நினைக்கத் தோணும். வேலை மட்டும்தான் மனசுல ஓடிட்டேயிருக்கும். ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க ஆபீஸ் ட்ரிப், டீம் லஞ்ச்னு ஏதாச்சும் பிளான் பண்ணுவோம். எதுவும் ஒத்துவரலைன்னா, லீவு போட்டுட்டு ரிலாக்ஸாவோம்” என்கிறார் திலீபன் சிரித்துக்கொண்டே.

மார்க்கெட்டிங்கில் துறையிலிருக்கும் அஸ்வின், “பாசிட்டிவ் எனர்ஜியும், ஸ்மார்ட் வொர்க்கும்தான் ஸ்ட்ரெஸ் ரிலீஃப் ஃபார்முலா. வடிவேலு சொல்றது மாதிரி பிளான் பண்ணி, பக்கா ஐடியாவோடு வொர்க் பண்ணணும். `நாம இன்னைக்கு செய்ய நினைச்சதைச் செஞ்சிடுவோம்’னு நமக்கு நம்ம மேல முதல்ல நம்பிக்கை வரணும். பொதுவா மார்க்கெட்டிங் ஃபீல்டுல ஒரு ட்ரிக் யூஸ் பண்ணுவாங்க. அது, புகழ்போதை. மத்தவங்க முன்னாடிப் புகழ்வாங்க. ‘இப்போ வந்த பையன் எல்லாத்தையும் நீட்டா முடிச்சுட்டான் பாருங்க’ம்பாங்க. அப்படிச் சொல்லும்போது அவனுக்கு அந்தப் புகழ் உற்சாகத்தையும், மற்றவர்களுக்கு வேகத்தையும் தரும். `கம்பேரிஸன்’ என்ற ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பொதுவாக், நாம செய்யம் வேலையில இருக்கிற எல்லாத்தையும் தெளிவு பண்ணிக்கிட்டா ரிலாக்ஸ்டா இருக்கலாம்’’ என்றார்.

வங்கியில் பணியாற்றிவிட்டு, இல்லற வாழ்க்கைக்காக வேலையைவிட்டவர் கோவையைச் சேர்ந்த சுதா. “வேலைக்குள்ள 200% எங்களை ஒப்படைச்சிடணும். அப்போதான் 80% சக்சஸாவது கிடைக்கும். வருடக் கடைசி அப்ரைசல், இன்க்ரிமென்ட்டுக்காகத்தான் முழு வருட உழைப்பும். இவ்வளவையும் தாங்கிகிட்டு, கஸ்டமர்ஸ்கிட்ட பரிவோட பேசி அவங்களையும் சரியாகக் கையாளணும். முகத்துல சிரிப்பு இருக்கும், உடம்பு மெஷினா ஓடிட்டிருக்கும்” என்று தான் பட்ட அவஸ்தைகளைச் சொன்னார்.

இப்படி நம்மில் பலரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் சாப்பிட்டுவிடுகிறது பணி வாழ்க்கை. சில வேலைகள், அலுவலகத்தைவிட்டு வெளியே வந்துவிட்டால், அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது என்கிற மாதிரி இருக்கும். வேறு சில வேலைகள், அலுவலகத்தைவிட்டு வெளியே வந்துவிட்டாலும் அதைப் பற்றியே தூக்கத்திலும் நினைத்துக் கவலைப்படுகிற மாதிரி இருக்கும். ஆண்ட்ராய்டு போன்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில், அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சென்ற பிறகும் அந்த வேலைகள் துரத்துவதைச் சமாளிக்க முடியாமல் பலரின் குடும்ப வாழ்க்கையில் சில கீறல்கள் விழுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

வேலை, டார்கெட், அடுத்த வேலை, அடுத்த டார்கெட் என இன்றைக்குப் பல பணியாளர்களின் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும் போது, ‘இன்றைக்கு நாம் என்ன செய்தோம், கடந்த வாரத்தில் என்ன செய்தோம்’ என்ற கேள்வியைக் கேட்டால், அதற்குத் தெளிவான எந்த பதிலும் கிடைப்பதில்லை. பல வேலைகளைச் செய்து முடித்திருந்தாலும், எந்த வேலையையும் அனுபவித்துச் செய்தோம் என்ற திருப்தி இல்லாமலேயே வாழ வேண்டிய கட்டாயத்தில்தான் இன்றைக்குப் பலரும் இருக்கிறார்கள்.

இந்த மாதிரியான பரபரப்பான வாழ்க்கை தரும் பதற்றத்திலிருந்து மீண்டு வருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்... வாழ்க்கை, வேலை இரண்டிலும் இருக்கும் அழுத்தத்தை எப்படிச் சமாளிப்பது என மனநல மருத்துவர் அசோகனிடம் கேட்டோம். இந்தப் பிரச்னை குறித்து அதற்கான தீர்வுகள் குறித்தும் விரிவாக எடுத்துச் சொன்னார்.

“முப்பது ஆண்டுகளில் மன உளைச்சலின் பல்வேறு பரிணாமங்களைக் கண்டுவருகிறோம். சினிமாவில்தான் ஒரே பாடலில் ஒய்யார வாழ்க்கை ஹீரோக்களுக்கு அமையும். ஆனால், நிஜம் இதிலிருந்து முற்றிலும் வேறு மாதிரியானது. இதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நம்மில் பலருக்கு எதையும் எதிர்கொள்ளும் சக்தி குறைந்துகொண்டே வருகிறது. பிசினஸ் உலகத்தில்கூட ஒரு நல்ல ரிலேஷன்ஷிப்பை மெயின்டெயின் செய்பவர்கள், ரிலேஷன்ஷிப்பையே பிசினஸாகப் பார்க்கிறார்கள். அதிகாரம் வேண்டும், பொறுப்பு வேண்டாம் என்ற பலவீனத் தலைவர்கள் எல்லா நிலைகளிலும் உருவாகிவருவது வருத்தம் தரும் உண்மை. இன்றைக்கு, `உழைப்பு மட்டுமே போதாது, வேலை குறித்த பெருமை வேண்டும்’ என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், நல்ல தலைமை, கலாசாரம், ஒழுங்குமுறை எல்லாம்தான் நல்ல சூழலை வேலை செய்யும் இடத்திலும் நம் வாழ்க்கையிலும் கொண்டுவரும்.

பணிச்சூழலுக்கேற்ப உங்களை வளைத்துக் கொள்வதால், மன உளைச்சல், நரம்பு பாதிப்பு, சோர்வு எனப் பல உடல் சிக்கல்கள் நேரலாம். சோகம், கோபம், மகிழ்ச்சி என எந்த உணர்வும் அதிகமாவது உடலுக்கும் மனதுக்கும் ஆபத்தானதே. சரி, அதீத வொர்க் டென்ஷனில் அதைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

இந்தச் சுலபமான வழியைக் கொஞ்சம் பின்பற்றிப் பாருங்கள். `1, 2, 3...’ என எண்ணிக்கொண்டே மூச்சை உள்ளே இழுத்துப் பிடித்து, `4, 5, 6...’ என எண்ணி மூச்சை நிறுத்தி, பிறகு `7, 8, 9...’ என எண்ணிக்கொண்டே மூச்சை வெளிவிட வேண்டும். இதனால் மனம் சமநிலை அடையும் என்பதை நீங்கள் ஒன்றுக்கு இரண்டு முறை செய்து பார்த்தாலே உங்களுக்குத் தெரிந்துவிடும்.

மல்டி டாஸ்குகளை எப்போதும் ஏற்காதீர்கள். ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் விருப்பத்துக்குரியவை மட்டுமே வாழ்வின் கடைசிவரை துணை நிற்கும். எதையும் திட்டமிட்டுச் செய்யுங்கள். நூறு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய வேலை என்றால், அதில் பத்து மணி நேரத்தைத் திட்டமிடலுக்கு ஒதுக்குங்கள்.

மல்டி டாஸ்குகளை எப்போதும் ஏற்காதீர்கள். ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் விருப்பத்துக்குரியவை மட்டுமே வாழ்வின் கடைசிவரை துணை நிற்கும்.

வாழ்க்கை என்பது புளூடூத் மாதிரி. கனெக்ட் மோடு அல்லது சர்ச்சிங் மோடு வித் லிமிடடு வாரன்டி... அவ்வளவுதான். இலை, நதியின் போக்கில் போகிறது. நதி, நிலத்தின் போக்கில் போகிறது. வாழ்க்கையின் போக்கைப் புரிந்துகொண்டு அதன்படி செல்லுங்கள். வாழ்வு பற்றிய புகார்களைக் குறையுங்கள், சிக்கல்களைத் தீர்க்கும் வழிகளைத் தேடி அடையுங்கள்.

யார், எதை, எப்படிச் சந்தைப்படுத்துகிறார்கள் என்ற வணிக உலகப் போட்டிக்குள், நீங்கள் உங்கள் வாழ்க்கையைச் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இந்தப் போட்டி நிறுவனங்கள், தனிநபர்கள் என யாரையுமே விட்டு வைக்கவில்லை. எல்லோரையும் ஒருவித பரபரப்போடும் அவசரத் தோடும் ஓடி ஓடி உழைக்க வைக்கிறது. வாழ்க்கைக்காகத் தான் வேலை. வேலை பார்ப் பதற்காக மட்டுமே நீங்கள் வாழவில்லை. வேலையில் தொலைந்து போய்விடாமல், உங்கள் வாழ்வில் அவ்வப்போது ஏதாவது சுவாரஸ்யம் சேர்த்துக் கொள்ளுங்கள்.விளையாட்டு, சினிமா, புத்தகம், உறவுகள், நண்பர்கள், பயணம், சேவை என வேலை தரும் டென்ஷனை யெல்லாம் துடைத்துப் போட்டுவிட்டு உங்களை மீட்டெடுங்கள்.

அப்போதுதான் திருப்தி கரமான வாழ்க்கையை நீங்கள் வாழ்வீர்கள்” அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் மருத்துவர் அசோகன்.

வேலையிலும் வாழ்க்கை யிலும் டென்ஷனைக் குறைத்து விட்டால், நிறைய சாதிக்கலாம்; மகிழ்ச்சியாக இருக்கலாம்!