Published:Updated:

2K kids: திருநெல்வேலினா சினிமாவில் ஏன் இப்படியே காட்டுறீங்க?!

திருநெல்வேலி
பிரீமியம் ஸ்டோரி
திருநெல்வேலி

அருண் குமார்.ச - படங்கள்: மதன்சுந்தர்

2K kids: திருநெல்வேலினா சினிமாவில் ஏன் இப்படியே காட்டுறீங்க?!

அருண் குமார்.ச - படங்கள்: மதன்சுந்தர்

Published:Updated:
திருநெல்வேலி
பிரீமியம் ஸ்டோரி
திருநெல்வேலி

காரைக்குடினா அழகழகான வீடுகள், மதுரைனா வட்டார வழக்கு, கோயம்புத்தூர்னா பச்சை பசேல் நிலம்னு தமிழ் சினிமா ஒவ்வோர் ஊருக்கும் ரசிகர்கள்கிட்ட ‘அது அப்படித்தான் இருக்கும்’னு ஒரு மைண்ட் மேப்பை உருவாக்கி வெச்சிருக்கு. அதனாலதான் திருநெல் வேலினாலே அல்வா, அருவா இந்த ரெண்டையும் தாண்டி இன்றைய இயக்குநர்கள் ரொம்ப யோசிக்கிறதே இல்ல ஃபிரெண்ட்ஸ். சில படங்கள்ல திருநெல்வேலியைக் காட்டும்போது, ‘என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க...’னு தோணுது. திருநெல்வேலியில நீங்க படத்துல பார்க்குற ரீல் வெர்சஸ் ரியல் என்னன்னு பார்க்கலாமா?

2K kids: திருநெல்வேலினா சினிமாவில் ஏன் இப்படியே காட்டுறீங்க?!
2K kids: திருநெல்வேலினா சினிமாவில் ஏன் இப்படியே காட்டுறீங்க?!

‘எடுடா அருவாள!’

திருநெல்வேலினு சொன்னாலே, அது ஏதோ ரத்தம் விளையுற பூமி மாதிரி அடிக்கடி புரொஜெக்ட் பண்ணுது கோடம்பாக்கம். எங்க ஊருல காலையில பல்லு விளக்குனதும் எல்லாரும் அருவாள எடுத்துட்டு நேரா சண்டைக்குப் போற மாதிரி, எங்க தெருக்கள்ல சண்டைய தவிர எதுவுமே நடக்காத மாதிரி... ஏன் பாஸு? இப்படியே காட்டினா, வெளியூர்ல இருந்து இங்க யாராச்சும் பொழப்புக்கு வருவாங்களா? இன்னொரு விஷயம் தெரியுமா... கூகுள்ல ‘ரௌடி டிஸ்ட்ரிக்ட் இன் தமிழ்நாடு’ தேடுனா ‘திருநெல்வேலி’னு வருது மக்கா. இந்தக் கொடுமைய யாருதான் கேக்குறது?!

நெல் ஆடிய வயல் எங்கே?!

மணிரத்னம் சார் மாதிரி அம்பாசமுத்திரத்தை சிலர் அழகழகா காட்டி யிருக்காங்கதான். ஆனா, பல படங்கள்ல எங்க ஊரை ஏதோ பாலைவனம் மாதிரிதான் காட்டுறாங்க. குறிஞ்சிக்கு குற்றாலம், முல்லைக்கு களக்காடு, மருதத்துக்கு தாமிரபரணி ஆற்றின் மூலம் பாசனம் பெறும் அம்பாசமுத்திரம், நெய்தலுக்கு உவரி, பாலைக்கு சாத்தான்குளம்னு ஐந்திணையும் அடங்குன ஊர்லே இது!

2K kids: திருநெல்வேலினா சினிமாவில் ஏன் இப்படியே காட்டுறீங்க?!

பாளையங்கோட்டை பெருமை தெரியுமா?!

‘தமிழகத்தின் ஆக்ஸ்ஃபோர்டு’ என்ற பெருமைக்குரிய ஊரு எது தெரியுமா? சாட்சாத் பாளையங்கோட்டைதான். காரணம், அந்தளவுக்கு இங்க பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள்னு நிறைஞ்சிருக்கு. திருநெல்வேலி மாவட்டத்துக்குத் தலைநகர்னு நம்ம பாளையங்கோட்டையைச் சொல்லலாம். ஆனா, பாளையங் கோட்டைனாலே ஜெயிலுனு சித்திரிச்சு வெச்சிருக்குற இந்த சினிமாவை என்ன பண்ணலாம் ஃபிரெண்ட்ஸ்? நாளைய இயக்குநர்களே... நீங்களாச்சும் நோட் பண்ணிக்கோங்க எங்க ஊரு பெருமைய எல்லாம்.

நாங்களும் சிட்டிதான்!

வில்லேஜ் ஸ்கிரிப்ட்னா போதும்... விடுடா வண்டிய நெல்லைக்குக்குனு கிளம்பி வந்துடுறாங்க. இங்க இருக்குற கிராமங்கள்லதான் ஷூட்டிங் எடுக்குறாங்க. ‘திருநெல்வேலி கிராமம்’னு ஸ்கிரீன்ல காட்டிடுறாங்க. ஹலோ... நாங்க மாநகராட்சிங்க. மாணவர்களுக்குக் குறைவில்லாம கல்வி நிலையங்கள், அறிவியல் மையம், தியேட்டர், பார்க், நூலகம், மைதானம், ஐடி சென்டர், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்னு நாங்க முன்னேறிட்டு இருக்கோம். நீங்க எங்களைக் கிராமமாவே இன்னும் டீல் பண்ணிட்டு இருக்கீங்க... வெரி பேட்!

2K kids: திருநெல்வேலினா சினிமாவில் ஏன் இப்படியே காட்டுறீங்க?!
2K kids: திருநெல்வேலினா சினிமாவில் ஏன் இப்படியே காட்டுறீங்க?!

திருநெல்வேலி பொண்ணுங்கள என்னனு நினைச்சீங்க?

விக்ரம் ‘சாமி’ படத்துல, ‘திருநெல்வேலி பொண்ணுங்க குடை புடிச்சிட்டு வர்ற ஸ்டைல பார்த்தா அருவா புடிச்சிட்டு வர்ற மாதிரி இருக்கும்’னு சொல்லுவாரு. வெளி மாவட்டங்களுக்குப் படிக்க, வேலைபார்க்க, கல்யாணமாகிப் போற பொண்ணுங்க எல்லாம், தங்களுக்கு இந்த டயலாக் ஒரு கெத்து கொடுக்கும்னு சொல்லுவாங்க. ஆனா, எங்க பொண்ணுங்க தைரியத்தைப் பாராட்டினவங்க, அவங்க படிச்சு முன்னேறினாங்க, தொழில் செஞ்சு வெற்றியாளர் ஆனாங்கனு காட்டினா அதைவிட கெத்தா இருக்கும். ‘அது மட்டுமா...? நெல்லை பொண்ணுங்க அழகை பத்தி எங்ககிட்ட கேளுங்க... கவிதை புத்தகமே போடுற அளவுக்கு எழுதித் தர்றோம்’னு சொல்ற எங்க பாய்ஸோட மைண்ட் வாய்ஸ் கேக்குதா?!