Published:Updated:

ஆதரவற்ற குழந்தைகளுக்கு புது உடைகள்; கடைக்கே அழைத்துச்சென்று வாங்கிக் கொடுத்த இளைஞர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தீபாவளி உடையைத் தேர்வு செய்யும் சிறுமிகள்
தீபாவளி உடையைத் தேர்வு செய்யும் சிறுமிகள்

6 வயதுக் குழந்தைகள் முதல் 18 வயதுக்கு உள்பட்டவர்கள் வரை துணிக்கடையில் ஆர்வத்துடன் துணிகளைத் தேர்வு செய்தனர். சிறிய குழந்தைகளுக்கு அவர்களுடன் வந்த பெரிய குழந்தைகள் துணிகளைத் தேர்வு செய்ய உதவினார்கள்.

தீபாவளி என்றதும் குழந்தைகளின் நினைவுக்கு வருவது புத்தாடை, பட்டாசு மற்றும் பலகாரங்களாகத்தான் இருக்கும். அதனால் நெல்லையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்குத் தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுப்பதை இளைஞர்கள் சிலர் ஆண்டுதோறும் செய்து வருகிறார்கள்.

துணி தேர்வு செய்யும் சிறுமிகள்
துணி தேர்வு செய்யும் சிறுமிகள்
இந்தியாவில் 30 லட்சம் ஆதரவற்ற குழந்தைகள்... ஆனால், தத்தெடுப்பதிலோ ஒரு கோடி சிக்கல்கள் ஏன்?

ஆதரவற்ற குழந்தைகளை நகரின் பிரமாண்டமான துணிக்கடைக்கு அழைத்துச் சென்று தங்களுக்குப் பிடித்தமான துணிகளை அவர்களே தேர்வு செய்து கொள்ள வைக்கிறார்கள். பல வண்ணங்களில் விதவிதமாக இருக்கும் துணிகளில் தங்களுக்குப் பிடித்தமானதைக் குழந்தைகளே தேர்வு செய்து கொள்கிறார்கள்.

நெல்லை சந்திப்புப் பகுதியில் அரசின் உதவியுடன் செயல்படும் `சரணாலயம்’ இல்லத்தில் குழந்தைத் தொழிலாளர்கள், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், பள்ளிக்குப் பயந்து வீடுகளை விட்டு வெளியேறிய குழந்தைகள் ஆகியோருக்கு கவுன்சலிங் கொடுத்துத் தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன.

சிறுவர்களுக்கான உடை தேர்வு
சிறுவர்களுக்கான உடை தேர்வு

அந்த இல்லத்தில் வாழும் 47 குழந்தைகளுக்குத் தீபாவளி பண்டிகையில் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில், அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளையைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து நகரின் மையப்பகுதியில் உள்ள துணிக்கடைக்கு அவர்களை அழைத்துச் சென்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் என 47 பேரும் அந்தக் கடையில் இருந்த துணி வகைகளைப் பார்த்து ஆனந்தத்துடன் தங்களுக்குத் தேவையானதைத் தேர்வு செய்தனர். 6 வயதுக் குழந்தைகள் முதல் 18 வயதுக்கு உள்பட்டவர்கள் வரை துணிக்கடையில் ஆர்வத்துடன் துணிகளைத் தேர்வு செய்தனர். சிறிய குழந்தைகளுக்கு அவர்களுடன் வந்த பெரிய குழந்தைகள் துணிகளைத் தேர்வு செய்ய உதவினார்கள்.

மகிழ்ச்சியில் சரணாலயம் இல்லவாசிகள்
மகிழ்ச்சியில் சரணாலயம் இல்லவாசிகள்

`சரணாலயம்' இயக்குநர் தினகரன் மற்றும் அன்னை தெரசா அறக்கட்டளையைச் சேர்ந்த இளைஞர்களான மகேஷ், இளையராஜா, சாலமோன் ஆகியோர் குழந்தைகளை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். துணிகளைத் தேர்வு செய்த குழந்தைகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

துணிக்கடையில் தங்களுக்கான தீபாவளி உடையைத் தேர்வு செய்த மகிழ்ச்சியில் இருந்த குழந்தைகளிடம் பேசியபோது, ``நாங்க எங்க வீட்ல இருந்தப்போ தீபாவளி பண்டிகைக்கு புதுத் துணிகள் கிடைக்கும். சூழ்நிலை காரணமா குடும்பத்தை பிரிஞ்சிருக்கும் எங்களுக்கு நாங்களே துணிகளை எடுத்துக்க முடிஞ்சது தீபாவளியைத் தித்திப்பாக்கி இருக்கு” என்றார்கள்.

அன்னை தெரசா அமைப்பு நிர்வாகி மகேஷ்
அன்னை தெரசா அமைப்பு நிர்வாகி மகேஷ்

அன்னை தெரசா அமைப்பைச் சேர்ந்த மகேஷ் கூறுகையில், ``தீபாவளி பண்டிகையின்போது `சரணாலயம்' இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு நண்பர்களாகச் சேர்ந்து செயல்படும் எங்களின் அமைப்பு சார்பாகக் கடந்த சில வருடங்களாகத் துணிகளை எடுத்துக் கொடுத்து வருகிறோம். நாம் துணிகளை எடுத்துக் கொடுப்பதை விடவும் அந்தக் குழந்தைகளையே தேர்வு செய்யச் சொன்னால் என்ன என்று தோன்றியதால் கடைக்கு நேரடியாக அழைத்துச் சென்றோம்.

துணிக்கடையில் உள்ள துணிகளின் வகைகளைப் பார்த்து குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். தங்களுக்குத் தேவையான துணிகளை அவர்கள் தேர்வு செய்து மகிழ்ந்தார்கள். தீபாவளி தினத்தில் அவர்களின் `சரணாலயம்' இல்லத்துக்குச் சென்று இனிப்பு வகைகளுடன் தீபாவளி கொண்டாட இருக்கிறோம்” என்றார்.

துணிக்கடையில் உடை தேர்வு செய்யும் சிறுமி
துணிக்கடையில் உடை தேர்வு செய்யும் சிறுமி
``ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு புடவை, லெஹெங்கா இலவசம்!'' - உதவும் கேரள மனிதரின் உடை வங்கி

சமூகத்தால் ஏதோவொரு வகையில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்தக் குழந்தைகளுக்கு தீபாவளிப் புத்தாடை ஷாப்பிங் மகிழ்ச்சியைக் கொடுத்த இளைஞர்களைப் பலரும் பாராட்டுகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு