Published:Updated:

“6,000 ரூபாய் பணம் தந்தார்!” - தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த பா.ஜ.க பிரமுகர்

பாஸ்கர் கைது
பிரீமியம் ஸ்டோரி
பாஸ்கர் கைது

திருவாரூரில் பிரியாணிக்கடை நடத்திவரும் எனக்குத் திருவாரூர் மாவட்ட பா.ஜ.க கல்வியாளர் பிரிவுச் செயலர் ரமேஷ் ஏற்கெனவே அறிமுகமானவர்

“6,000 ரூபாய் பணம் தந்தார்!” - தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த பா.ஜ.க பிரமுகர்

திருவாரூரில் பிரியாணிக்கடை நடத்திவரும் எனக்குத் திருவாரூர் மாவட்ட பா.ஜ.க கல்வியாளர் பிரிவுச் செயலர் ரமேஷ் ஏற்கெனவே அறிமுகமானவர்

Published:Updated:
பாஸ்கர் கைது
பிரீமியம் ஸ்டோரி
பாஸ்கர் கைது

‘தேர்வு அறையில் ஆள் மாறாட்டம்’ செய்த புகாரில், திருவாரூர் பா.ஜ.க-வின் மாவட்டத் தலைவர் கைதாகியிருப்பது அரசியல் அரங்கை அதிரவைத்திருக்கிறது!

தமிழ்நாடு பா.ஜ.க-வின் திருவாரூர் மாவட்டத் தலைவராகப் பதவி வகித்துவருபவர் பாஸ்கர். இவர், தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ பொலிட்டிகல் சயின்ஸ் படித்துவருகிறார். இந்நிலையில், திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டத்துக்கான தேர்வு, ஆகஸ்டு 13-ம் தேதி நடைபெற்றது. அப்போது தேர்வு எழுத வந்திருந்த இளைஞர் ஒருவரின் நடவடிக்கை, தேர்வு கண்காணிப்பாளருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், இளைஞரது உண்மையான பெயர் திவாகர் மாதவன் என்பதும், பா.ஜ.க. திருவாரூர் மாவட்டத் தலைவர் பாஸ்கருக்கு பதிலாக அவர் தேர்வு எழுத வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

“6,000 ரூபாய் பணம் தந்தார்!” - தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த பா.ஜ.க பிரமுகர்

புகாரின் பேரில், திவாகர் மாதவனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ‘‘திருவாரூரில் பிரியாணிக்கடை நடத்திவரும் எனக்குத் திருவாரூர் மாவட்ட பா.ஜ.க கல்வியாளர் பிரிவுச் செயலர் ரமேஷ் ஏற்கெனவே அறிமுகமானவர். அவர்தான் என்னை, திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் பாஸ்கருக்கு பதிலாகத் தேர்வு எழுத ஏற்பாடு செய்தார். இதற்காக 6,000 ரூபாய் பணமும் தந்தார்’’ என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, பா.ஜ.க நிர்வாகி ரமேஷ் கைதுசெய்யப்பட்டார். மாவட்ட பா.ஜ.க தலைவர் பாஸ்கர், திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

குற்றச்சாட்டு குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளரான கருப்பு முருகானந்தத்திடம் கேட்டபோது, ‘‘எங்கள் கட்சியினர்மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இப்படியொரு குற்றச்சாட்டை ஆளுங்கட்சியினர் கிளப்பியிருக்கிறார்கள். நான் பாஸ்கரிடம் பேசியபோது, ‘தனக்கும் இந்தச் சம்பவத்துக்கும் துளிகூடத் தொடர்பு இல்லை’ எனத் தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வுகளில், ஏற்கெனவே நான்கு தாள்களை பாஸ்கர் எழுதவில்லை. இந்த நிலையில், ஐந்தாவது தாளுக்கு மட்டும் ஏன் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வேண்டும்?

பாஸ்கர்
பாஸ்கர்

தி.மு.க-வினரின் தவறுகளைக் கண்டித்து திருவாரூரில் எங்கள் கட்சியினர் மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே, எங்கள் கட்சியின் நிர்வாகிகளை மிரட்டி ஒடுக்குவதற்காகவும், மக்கள் மத்தியில் கட்சிப் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதற் காகவும் வேண்டுமென்றே இப்படி ஒரு நாடகத்தை தி.மு.க-வினர் அரங்கேற்றியிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்’’ என்றார் மீசையைத் துடைத்தவாறே.

ஒரே நாடகமா இருக்கே!