புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சரான கல்யாண சுந்தரத்திடம் 3 கோடி ரூபாயை அபேஸ் செய்த குற்றச் சாட்டில் சிக்கி யிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ்.பி ஒருவர். பின்னணியை விசாரித்தால், ‘அடேங்கப்பா’ ரக தகவல்கள் வெளிவருகின்றன!

என்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் காரைக்காலில் நிலம் வாங்குவதற்காக, சென்னையைச் சேர்ந்த ஒருவரிடம் 3 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார். அவரும் மே 11-ம் தேதி சென்னைக்கு வந்து பணத்தை வாங்கிக் கொள்ளும்படி கூறியிருக்கிறார். அதன்படி, பணம் வாங்குவதற்காக கல்யாணசுந்தரம் தன் உறவினரான திருவள்ளூரில் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக இருந்த (தற்போது மயிலம் காவலர் பயிற்சிப் பள்ளியின் டி.எஸ்.பி) கண்ணபிரான் மற்றும் புதுச்சேரி சியாச்செம் கிரிக்கெட் கிளப்பின் உரிமையாளரான தாமோதரனின் மகன் ரோகித் ஆகியோரை சென்னைக்குச் அழைத்துச் சென்றிருக்கிறார்.

இந்தநிலையில்தான் 3 கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டதாக கண்ணபிரான்மீது சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கல்யாண சுந்தரம் புகார் அளித்துள்ளார். அதேசமயம் ஜூன் 6-ம் தேதி கல்யாணசுந்தரம்மீது புதுச்சேரி வில்லியனூர் காவல்நிலையத்தில் கண்ணபிரான் அளித்த புகாரின் பேரில் கல்யாணசுந்தரம் மற்றும் அவர் தரப்பினர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

என்னதான் நடந்தது? கல்யாணசுந்தரத்திடம் பேசினோம். ‘‘அன்று கண்ணபிரான் காரில் 3 கோடி ரூபாயை ஏற்றிவிட்டு, நானும் ரோகித்தும் பின்னால் ஒரு காரில் சென்றோம். சிறிது நேரத்தில் கண்ணபிரானின் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது. அவர் வீட்டுக்குச் சென்றபோது, ‘போலீஸ் துரத்தியதால் பணப்பெட்டியைக் கீழே தள்ளிவிட்டு விட்டேன்’ என்றார். ‘அந்த இடத்தைக் காட்டுங்கள்’ என்று கேட்டபோது சென்னை முழுக்க அலையவைத்தார். பிறகு பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதாக என்னிடம் உறுதிமொழிக் கடிதம் எழுதிக்கொடுத்தார்.

ஜூன் 6-ம் தேதி, ‘பேசி முடிச்சுக்கலாம்’ என்று அவரின் வீட்டுக்கு அழைத்தார். ஆனால், அவரே ஆட்களை வைத்து சி.சி.டி.வி கேமராக்களை உடைத்துவிட்டு, என்மீது புகார் கொடுத்துவிட்டார். போலீஸாரும் எந்த விளக்கத்தையும் கேட்காமல் வழக்கு பதிவு செய்துவிட்டனர்’’ என்றதுடன், பணத்தைத் தந்து விடுவதாக கண்ணபிரான் எழுதிக் கொடுத்த கடிதத்தையும், எழுதிக் கொடுக்கும் வீடியோவையும் கொடுத்தார்.

கண்ணபிரானிடம் பேசினோம். ‘‘அவர் சொல்வது பொய்க் குற்றச்சாட்டு. இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போதே என் வீட்டுக்கு வந்து என் மனைவி மற்றும் பிள்ளைகளின் தலையை வெட்டிப் போட்டுவிடுவேன் என்று மிரட்டினார். அதனால்தான் புகார் கொடுத்தேன்’’ என்றவரிடம், கடிதம் மற்றும் வீடியோ காட்சிகள் குறித்துக் கேட்டதற்குச் சரியான பதில் இல்லை.

காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, ‘‘விளையாட்டுத்துறை தொடர்புடைய பிரமுகரின் பணம் அது. ஆனால், கணக்கு காட்ட முடியாததால், வெளியே சொல்ல முடியாமல் அவர் தவிக்கிறார்” என்றார்கள்.

பணம்... எதுவும் செய்யும்!