Published:Updated:

கூடுதல் வருமானம்... சைடு பிசினஸ் செய்து சம்பாதிக்கத் தயாரா?

கூடுதல் வருமானம்...
பிரீமியம் ஸ்டோரி
News
கூடுதல் வருமானம்...

நாணயம் புக் செல்ஃப்

கூடுதல் வருமானம்... 
சைடு பிசினஸ் செய்து சம்பாதிக்கத் தயாரா?

ம்பாதிக்கிற வருமானம் போதவில்லை என்கிற மனக்குறை பலருக்கும் உண்டு. வேலைக்குப் போகக் கொஞ்சம் நேரம் இருக்கிறது; பணம் பண்ணுகிற பிசினஸ் ஐடியாவும் இருக்கிறது என்கிறவர்களுக்கு சைடு பிசினஸ் இன்னும் அதிக வருமானத்தை நிச்சயம் ஏற்படுத்தித் தரும். நேரம் உண்டு, தைரியமும் உண்டு, ஆனால், பிசினஸுக்கான ஐடியாதான் இல்லை என்கிறீர்களா? உங்களுக்காகத்தான் நாம் இந்த வாரம் பார்க்கவிருக்கும் ‘சைடு ஹஸுல்’ என்கிற புத்தகம். கிரிஸ் குயில்பேயு என்பவர் எழுதிய இந்தப் புத்தகம், நாம் பார்க்கும் முழுநேர வேலையை விட்டு விடாமலேயே சைடு பிசினஸ் ஒன்றை உருவாக்கிக்கொள்வது எப்படி என்பதைப் பற்றி விளக்கமாக எடுத்துச்சொல்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மீன் தொட்டி ரிவ்யூ தந்த 350 டாலர்

‘‘கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துவந்த ஒரு பிரிட்டிஷ் நபர் வார இறுதியில் பொழுதுபோக்காக இணைய பிளாக்கில் மீன்தொட்டிகள் குறித்த ரிவ்யூக்களை எழுதினாராம். அந்த ரிவ்யூக்களின் இறுதியில் அமேசானில் விற்கப்படும் மீன் தொட்டிகளின் லிங்க்குகளைக் கொடுத்திருந்தார். இவருடைய ரிவ்யூக்களைப் படித்தவர்கள் அந்த லிங்கை க்ளிக் செய்தால், ஒரு சிறுதொகை கிடைக்கும் என்று அவருக்குத் தெரியும். ஆனாலும், என்ன பெரிதாகக் கிடைத்துவிடப்போகிறது என்று நினைத்து, அதை மறந்தே போய்விட்டார். சிலபல வாரங்களுக்குப் பின், அவருக்கு 350 டாலருக்கான செக் தபாலில் வர, மனிதர் ஆடிப்போனாராம். அவர் அப்போது எழுதிய ரிவ்யூக்கள் பல வருடங்களுக்குப் பிறகும் அவருக்கு மாதம் 700 டாலர் அளவிற்கான பணத்தைக் கொண்டுவந்து சேர்த்ததுதான் ஹைலைட்.

கூடுதல் வருமானம்... 
சைடு பிசினஸ் செய்து சம்பாதிக்கத் தயாரா?

இதேபோல, மற்றுமொரு சம்பவம். அரசாங்கப் பணியாளர் நண்பர் ஒருவரின் திருமணத்தை போட்டோ எடுக்கப்போக, அனைவரும் அந்தப் போட்டோக்கள் நன்றாக இருக்கின்றன என்று சொல்லி தங்கள் வீட்டு விசேஷங்களுக்கும் தொடர்ந்து கூப்பிட, மாதம் 3,500 டாலர் வரை போட்டோகிராபியிலிருந்து வருமானம் வர ஆரம்பித்ததாம். இதுபோல, பலரும் பல விஷயங்களை எதேச்சையாகச் செய்யப்போக, அதுவே நல்லதொரு உபரி வருமானத்தைக் கொடுக்க ஆரம்பித்தது’’ என்று பல்வேறு உதாரணங்களைக் கூறி, இந்தப் புத்தகத்தை ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எது சரியான நிலம், சரியான விதை?

பணம் மரத்தில் காய்ப்பதில்லை என்று பெற்றோர்கள் குழந்தைகளிடம் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதில் பாதிதான் சரி. ஏனென்றால், ஏற்கெனவே இருக்கும் மரங்களில் பணம் காய்க்க வாய்ப்பேயில்லை. அதே சமயம், சரியான மண்ணில் சரியான விதையை விதைத்தால் பணம் காய்க்கவே செய்யும். இந்தப் புத்தகத்தின் ஒவ்வோர் அத்தியாயமும் சரியான நிலத்தில் விதைக்கப்பட்ட சரியான விதைகளின் கதையைச் சொல்கிறது. சரியான நிலம் எது மற்றும் சரியான விதைகள் எவை என்பதைக் கண்டறிவது எப்படி என்பதையும் சொல்கிறது இந்தப் புத்தகம்.

எப்படித் தயாராவது?

“சைடு பிசினஸை ஆரம்பிக்க முதலில் லாபகரமான ஐடியாக்களை உருவாக்க வேண்டும். பின்னர் அப்படி உருவாக்கப் பட்ட ஐடியாக்களிலிருந்து அந்தச் சமயத்தில் வெற்றி பெறக்கூடிய ஐடியாக் களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கூடுதல் வருமானம்... 
சைடு பிசினஸ் செய்து சம்பாதிக்கத் தயாரா?

மேலும், சைடு பிசினஸ் என்பது உங்களுடைய ஆக்‌ஷனிலிருந்து உருவாவது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்னதான் ஐடியாக்கள் சூப்பரானவையாக இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தப் புத்தகம் இவை அனைத்திற்குமான வழிவகைகளை விளக்கமாகச் சொல்கிறது. அதிலும் சைடு பிசினஸ் செய்ய எது வேண்டும், எது வேண்டாம் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

சரியான மனப்பாங்கு என்பது சைடு பிசினஸை ஆரம்பிக்க மிக முக்கியமானதாக இருக்கிறது. அதிலும் புதுவிஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் அவற்றை முயற்சிசெய்து பார்க்கவும் தேவையான மனப்பாங்கு உங்களுக்கு இருக்கவேண்டும். அதே போல், செயல்படுவதற்கான அளவில்லாத விருப்பம் இருக்கவேண்டும்.

எதெல்லாம் தேவையில்லை...?

தேவையில்லாதவை என்று பட்டியலிட்டால்... பெரிய அளவிலான பணமோ, நேரமோ உங்களுக்குத் தேவைப்படாது. மேலும், சைடு பிசினஸ் நடத்துவதற்கு எம்.பி.ஏ டிகிரி எல்லாம் தேவையில்லை. பல சைடு பிசினஸ்களுக்கு, பணியாளர்கள், அசிஸ்டென்டுகள், பிசினஸ் பார்ட்னர்கள் என்றெல்லாம் தேவைப்படாது. அதேபோல், ஒரு பிசினஸை ஆரம்பிக்கத் தேவையான முன்னனுபவமெல்லாம் தேவை யில்லை. சில சமயம், உங்களிடம் இருக்கும் அதிகமான பணம், நேரம், படிப்பு எல்லாம் உங்கள் சைடு பிசினஸின் வெற்றிக்கு ஓர் இடைஞ்சலாகக்கூட இருந்துவிடும் வாய்ப்புள்ளது” என்று எச்சரிக்கிறார் ஆசிரியர்.

27 நாள் திட்டம்...

இந்தப் புத்தகம் சைடு பிசினஸை உருவாக்கிக் கொள்வதற்கான 27 நாள் (ஐந்து வாரங்களாகப் பிரிக்கப்பட்ட) திட்டத்தை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறது. முதல் வாரத்தில், ஐடியாக்களால் ஆன ஓர் ஆயுதக்கிடங்கை உருவாக்கச் சொல் கிறது. எதிர்காலம் எப்படி இருக்கும், மரத்தில் பணத்தைக் காய்க்கச் செய்வது எப்படி, சிந்தித்து, வாதித்து, கடன் வாங்கி அல்லது திருடி ஐடியாக் களை உருவாக்குவது எப்படி, ஒவ்வொரு ஐடியாவிலும் இருக்கின்ற தடைகள் மற்றும் வாய்ப்புகளைச் சீர்தூக்கிப் பார்ப்பது மற்றும் எவ்வளவு லாபம் பார்க்க முடியும் என்பதை முன்கூட்டியே கணிப்பது போன்றவற்றைச் செய்ய வேண்டும் என்கிறது.

இரண்டாவது வாரத்தில் உதித்த ஐடியாக்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்கும் வாரமாகும். ஒரு டிடெக்டிவைப்போல் செயல்பட வேண்டிய காலம் இது. உங்களுடைய சிறந்த வாடிக்கையாளருடன் அமர்ந்து காபி சாப்பிடுவதைப் போன்ற கற்பனையைச் செய்துபார்க்க வேண்டும். அப்போது அவருக்கு உங்களுடைய ஐடியாவை ஆஃபராக்கிச் சொன்னால் எப்படியிருக்கும் என்று சிந்தியுங்கள். அதைச் செய் வதற்கான கதையை நீங்கள் உருவாக்குங்கள் என்கிறார் ஆசிரியர்.

மூன்றாவது வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஐடியாவை நடைமுறைப் படுத்த முயல்வதாகும். என்ன விலை வைக்கலாம் நம்முடைய பொருள்/சேவைக்கு என்ற முடிவை எடுப்பது, சைடு பிசினஸிற்குத் தேவையான விஷயங்களை வாங்குவதற்குப் பட்டிய லிடுவது, என்னென்ன விஷயங்களை எப்போது செய்யவேண்டும் என்றும் முடிவு செய்யவேண்டிய காலம் இது. இந்த வாரம் கூடுதலாக 10% நேரத்தை மட்டுமே செலவிட வேண்டியிருக்கும்.

நான்காவது வாரத்தில் உங்களுடைய சைடு பிசினஸை ஊருக்குச் சொல்லவேண்டும். பத்து பேரிடம் சென்று, சப்போர்ட் பண்ணச் சொல்லி, மீண்டும் மீண்டும் சோதித்துப் பார்ப்பது என்பது இந்த வாரத்தில்தான். முதல் சம்பாத்தியத்தைச் செய்யவேண்டிய வாரம் இது.

ஐந்தாவது வாரத்தில் என்ன நடக்கிறது என்பதை டிராக் செய்து பார்க்க வேண்டும். அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைத் திட்டமிடுதல், எது வளர்ச்சிக்கு உதவுமோ, அதைச் செய்யவும் எது தேவையில்லையோ, அதை விட்டுவிடவும் வேண்டிய காலகட்டம் இது. செய்யும் விஷயத்தில் பணம் பண்ணும் வாய்ப்பு எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறது என்பதைக் கண்டறியவேண்டிய காலமும் இது. தேவையில்லாதவற்றை உங்கள் மனதிலிருந்து அறவே அகற்றிவிடவேண்டிய காலம் இது. எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கவேண்டிய காலம் இது என்கிறார் ஆசிரியர்.

கூடுதல் வருமானம்... 
சைடு பிசினஸ் செய்து சம்பாதிக்கத் தயாரா?

புத்தகத்தின் பெயர்: Side Hustle: Build a Side Business and Make Extra Money – Without Quitting Your Day Job

ஆசிரியர்: ChrisGuillebeau; பதிப்பகம்: Macmillan

இந்தப் புத்தகம் ஐந்து வாரங்களில் செய்யவேண்டிய வற்றை விளக்கமாகவும் பல்வேறு நிஜவாழ்க்கை உதாரணங்களுடன் தெளி வாகவும் சொல்லியுள்ளது. இதில் சொன்னவற்றைக் கடைப்பிடிப்பதன்மூலம் உருவாக்கப்படும் உங்களுடைய சைடு பிசினஸ் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் தொடர்ந்து பயணிக்கும் என்ற உறுதியை அளிக்கிறார் ஆசிரியர்.

சைடு பிசினஸ் செய்து இன்னும் அதிகம் சம்பாதிக்க நினைப்பவர்கள் இந்தப் புத்தகத்தை அவசியம் ஒருமுறை படிக்கலாம்!