Published:Updated:

உலா - ஆர்மீனியா: ஆடு மேய்ப்பவர் பெயரில் அழகான ஊர்!

ஆர்மீனியா
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்மீனியா

சுமிதா ரமேஷ் (துபாயிலிருந்து)

ஸாக்ட்ஸார் (Tsaghkadzar)

ர்மீனியாவின் தலைநகரத்திலிருந்து ஒரு மணி நேரப் பயணம்... 50 கிலோமீட்டரில் இந்த நகர் வருகிறது. ஸ்ஸாக் குன் யாட்ஸ் மலைத்தொடர்களின் பிள்ளையாக உள்ள இந்த நகரில் போகும் வழியெங்கும் வண்ணவண்ண பூக்கள் பொக்கேவோடு வரவேற்பதுபோல நமக்கு ஷவர் பொழிகிறது.

ரஷ்யப் பேரரசின்கீழ் இருந்த பகுதி பெர்ஷியன் ஆக்கிரமிப்பால், அரேபிய இஸ்லாமிய கலாசாரத்தால் பாதிக்கப்பட்டு, பின் சோவியத் யூனியன் காலத்தில் ஸ்பா, ஹெர்பலுக்கான நகரமாகவே தன்னை அலங்கரித்துக் கொண்டது. இங்குதான் சுற்றிலும் மலைகள் சூழ kecharis monastery என்ற மடம் உள்ளது. பழங்கால கிறிஸ்தவத்தை பறை சாற்றிக்கொண்டு பழைமை மாறாத சர்ச், செப்பல் எனும் பிரேயர் செய்யுமிடம், கூடவே அரசர்களது கல்லறைகள் எல்லாவற்றையும் ஒரே ஒரே வளாகத்திலேயே நமக்குக் காட்டி விடுகிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
மலை, மழை, குளிர், சலசலத்து ஓடும் நதி... இதற்கு நடுவே பசுமையான நகரம்!

நார்தென் ஆக்ஸிஸ் சர்ச்சுக் குள் நுழையும் இடத்தில் முக்கிய தலைவர்கள், இளவரசர்கள், மத குருமார்கள் என முக்கியமானவர்களின் கல்லறைகள் உள்ளன. அவர்களின் மீது கால்வைத்தே உள்ளே பிரவேசிக்க முடிகிறது, அது தவறில்லை என்கிறார்கள்.

ஆர்மீனியர்களின் அடை யாளமாகிய க்ராஸ் (சிலுவை), திராட்சைக் கொடிகளால் பின்னப்பட்ட சின்னங்கள் ஆங்காங்கே தெறிக்கின்றன.

ஆர்மீனியா
ஆர்மீனியா

அங்கு இன்னொரு ஸ்பெஷல்... சூரியக் கடிகாரம். சுவரின் நடுவில் ஒரு கம்பி சுற்றி அரை ஆரஞ்சுச் சுளை போன்ற வடிவம் சூரியனின் கதிர் கம்பியில் பட்டு, கம்பி துப்பும் நிழல் எந்தக் கோட்டில்படுகிறதோ அதைவைத்து நேரம் அறிந்தார்களாம்!

அங்கிருந்து மூன்று கிலோ மீட்டரில் alphine meadows. teghenis என்ற மலைச்சரிவு சுற்றிலும் பூக்கள் சிரிக்க வரவேற்கிறது.

இங்கு `ரோப் வே' உள்ளது. பள்ளத் தாக்கின் ஒரு முனையிலிருந்து நம்மை மேலே தூக்கியபடி பயணிக்கும் அது அடுத்த முனை வரை செல்கிறது. நாலு பேர் அமர நடுவில் ஒரு தடுப்பு மட்டுமே... ஆல் மோஸ்ட் ஆகாயத்தில் பறக்கும் உணர்வு!

கீழும் சுற்றிலும் பூக்கள் பசுமை, குசுகுசுவென பேசிக்கொள்ளும் பூச்சிகள் என டிவைன். இந்தப் பகுதி அதிக பனிப்பொழிவு பெறும் பகுதி. குளிர்காலத்தில் இங்குதான் பனிச்சறுக்கு விளையாடுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லேக் செவான்

இது ஐரோப்பா, ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழமான நன்னீர் ஏரி. கடல் போன்ற பெரிய ஏரி. தீவு போன்று நடுவில் நிலப்பகுதி. அங்கு ஒரு சிறிய மலை. அதன் மேல் ஒரு மடம்.

நாட்டின் முக்கியமான கலாசாரத் தலம் இது. அருகிலுள்ள அராரட் சமவெளிப்பகுதி விவசாயத்துக்கு இந்த ஏரி உதவுகிறது. இங்கு சோவியத் யூனியன் காலத்திலிருந்து எடுக்கப்பட்டு வரும் நீர் மின்சாரம் இந்நாட்டின் பொருளாதார காரணிகளில் ஒன்றாகவும் உள்ளது. நீல போர்வை போர்த்திய பசும் மலைகள், பூக்களின் சொர்க்கமாக இருப்பதால் சுற்றுலா இடமாக - முக்கியமான அடையாளமாகவே இந்தப் பகுதி உள்ளது.

 சுமிதா ரமேஷ்
சுமிதா ரமேஷ்

இந்த ஏரியைத்தான் Lake Sevan என்கிறார்கள். Sevanaank என்ற அந்த பகுதியே ஜில் ஜில்! 28 ஆறுகளும் சில ஓடைகளும் சேர்ந்துவர இரண்டு சுரங்கங்கள் மூலம் தண்ணீர்வரத்தை அதிகப்படுத்தி, மடைமாற்றி முறையாக விவசாயத்துக்குப் பயன்படுத்துகிறார்கள்.

இதெல்லாம் ஸ்டாலின் காலத்தி லேயே 1930-களில் திட்டமிட்டுச் செய் திருக்கிறார்கள். இப்போதோ பாவம்... அடுத்தகட்ட வளர்ச்சி பெறமுடியாமல், எப்போதும் துருக்கி மிரட்ட... தன் பகுதிகளை அஸர்பைஜானிடமும் இழந்திருக்கிறது இந்த தேசம்.

ஆர்மீனியா
ஆர்மீனியா

சிறிய தீவுப்பகுதியாக இருந்ததை நிலப்பரப்புடன் இணைத்ததால் டூரிஸ்ட் ஸ்பாட்டாகும் முன்பு கட்டப்பட்ட இந்த சர்ச், அங்கேயே தங்கி பிரசாரம், வழிபாட்டில் ஈடுபட்ட கிறிஸ்தவ துறவிகளின் வாழுமிடமாக இருந்திருக்கிறது.ஏழாம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை அதன் பழைமை மாறாமல் பாதுகாக்கின்றனர்.

28 ஆறுகளும் சில ஓடைகளும் சேர்ந்துவர இரண்டு சுரங்கங்கள் மூலம் தண்ணீர் வரத்தை அதிகப்படுத்தி, மடைமாற்றி முறையாக விவசாயத்துக்குப் பயன்படுத்துகிறார்கள்.

Dilijan (Hork)

இது ஆர்மீனியாவின் ஸ்விட்சர்லாந்து. மலைச்சிகரங்களும் மேகங்களும் கூடலில் இருக்க, டிஸ்டர்ப் செய்யாமல் மலை மேலே பயணிக்கலாம்.

இது, இயற்கையால் ஸ்பா நகரமாகவும் ஆர்மீனியர்களால் நம் ஊட்டி, பொள்ளாச்சி போன்ற படப்பிடிப்புத் தலமாகவும் உள்ளது.இந்தப் பகுதிகளில் தானாக வளர்ந்த ரோஜாச் செடிகள் வழியெங்கும் வெல்கம் சொல்கின்றன.

ஆர்மீனியா
ஆர்மீனியா

டிலி என்ற ஆடு மேய்ப்பவன் அவனது பாஸ் மகளை லவ் பண்ண, எஜமான் கோபப்பட்டு, டிலியைக் கொல்ல, அந்தப் பகுதியே சோகம், இருள் பூத்துப்போக பையனின் அம்மா... அழுதபடியே Dili... Jan (ஆர்மீனியர் செல்லமாக அழைக்கும் பெயராம்) என்று கூவியபடியே சுற்றி வந்தாராம். அதனால்தான் ஊருக்கு இந்தப் பெயர். எல்லா ஊர்களிலும் இப்படியொரு பழங்கதை சொல்றாங்க!

மலை, மழை, குளிர், சலசலத்து ஓடும் நதி... இதற்கு நடுவே பசுமையான நகரம்.

குறைவான மக்கள்தொகைதான். பூகம்பம், அந்நியர் படையெடுப்புகளால் சிதைந்துப் போன மிகப்பெரிய சர்ச். அதுவும் மொனஸ்ட்ரி என்கிற மடம்தான்!

உலா - ஆர்மீனியா: ஆடு மேய்ப்பவர் பெயரில் அழகான ஊர்!

Haghartsin Monastery... இங்கு தவத்தில் சிறந்த குருமார்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்கிறார்கள். வழிபாடு, பிரசாரம், கல்வியில் ஈடுபட்டிருக்கிறவர்கள் பலர் அமர்ந்து சாப்பிட்ட பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட ஸ்டைலில் சேர், டேபிள்களுடன் அப்படியே பழைமை மாறாமல் (எங்கேயுமே பெயின்ட் கூட அடிக்கலைங்க!)  பாதுகாக்கின்றனர்.

போர்க்காலங்களில் உள்ளேயே அனைத்தையும் செய்துகொள்ளும் வசதிகளுடன் (கிச்சன், பிரெட் பேக்கிங், படுக்கையறை) வெண்டிலேஷனுக்கு தரையில் துவாரங் களுடனும், மேலே சூரிய ஒளி சரியாக எட்டிப்பார்க்கும் வண்ணம் கூரையுடனும் அற்புதமான கட்டட வடிவங்கள் பிரமிக்க வைக்கின்றன.

நிலநடுக்கத்தால் குலைந்துபோன பகுதிகளைப் பார்வையிட அங்கு வந்த ஷார்ஜா அரபு மன்னர் புனரமைப்புக்கான செலவை தானே ஏற்றுக்கொண்டு பெரும் பொருட்செலவில் நிர்மாணித்த தாகச் சொல்கின்றனர். அப்படியே பழைமையைப் பறைசாற்றுகிறது மத நல்லிணக்கம்!

ஆர்மீனியா
ஆர்மீனியா

சுற்றுலாத்தலமாகவும் மாற்றப்பட்ட இந்த ஸ்பாட் அமைதியைக் கொட்டித்தருகிறது. இங்கு தலைநகரிலிருந்து செல்ல நல்ல சாலை வசதி, ரயில் வசதி இருக்கிறது. பக்கத்து இஸ்லாமிய (எதிரி) நாடான அஸர்பைஜானின் வடகிழக்கு பார்டரும் இதுதான். யெரவானி லிருந்து இந்த வட பகுதிகளுக்கு செல்லும் வழியில் பூக்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் துலிப் மலர்கள் ஸ்பெஷல் அட்ராக்‌ஷன். சிறுசிறு பெட்டிகளில் தேனீ வளர்த்து சுத்தமான தேன் சேகரித்து சாலையோரங்களில் விற்கிறார்கள். எரிமலைகளாக இருந்து குளிர்ந்த மலைகளில் வெளிப்பட்ட கற்கள் பெரும் கண்ணாடிப் பாறைகளாக டாலடிக்கின்றன.

லவ்லி சீன்!

சுற்றுலாவுக்கும் சுத்தத்துக்கும் மதிப்பு தருகிற ஆர்மீனியாவில் அடுத்து பார்த்த இடங்களும் அற்புதமே. அவை அடுத்த இதழில்!