Published:Updated:

நான் என்ன கொலையா பண்ணிட்டேன்? - கேட்கிறார் ‘மணல்’ காம்ரேட்

மணல் டிராக்டர்
பிரீமியம் ஸ்டோரி
மணல் டிராக்டர்

சின்னச் சந்தில் லாரி போக முடியாது என்பதால், டிராக்டர் மூலம் மணலை வேறு இடத்துக்கு மாற்றும்போது சிறிய விபத்து நடந்திருக்கிறது.

நான் என்ன கொலையா பண்ணிட்டேன்? - கேட்கிறார் ‘மணல்’ காம்ரேட்

சின்னச் சந்தில் லாரி போக முடியாது என்பதால், டிராக்டர் மூலம் மணலை வேறு இடத்துக்கு மாற்றும்போது சிறிய விபத்து நடந்திருக்கிறது.

Published:Updated:
மணல் டிராக்டர்
பிரீமியம் ஸ்டோரி
மணல் டிராக்டர்

நாகப்பட்டினம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள், ஜூலை 9-ம் தேதி விழிப்புணர்வு பேரணி ஒன்றில் பங்கேற்றனர். பேரணி சென்ற அதே சாலையில், மணல் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்று 8-ம் வகுப்பு மாணவியான திரிஷா மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.

டிரைவர் தப்பி ஓடிவிடவே... டிராக்டரைப் பறிமுதல் செய்த வெளிப்பாளையம் காவல்துறை, ஓட்டுநர் மீதும், டிராக்டர் உரிமையாளரான மாவட்ட கவுன்சிலரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியுமான சரபோஜி மீதும் வழக்கு பதிவுசெய்தது.

நான் என்ன கொலையா பண்ணிட்டேன்? - கேட்கிறார் ‘மணல்’ காம்ரேட்

அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து நம்மிடம் பேசிய நாகை மாவட்ட கடைமடை விவசாய சங்கத் தலைவர் தமிழ்செல்வன், “சரபோஜி மீது போலீஸார் மணல் கடத்தல் வழக்கு போட்டும் அவரைக் கைதுசெய்யவில்லை. தற்போதுவரை தேடப்படும் குற்றவாளியாகவே சரபோஜி இருந்துவருகிறார். ஆனால், சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி முன்னிலையில் நடைபெற்ற விவசாய ஆலோசனைக் கூட்டத்தில் போலீஸாரால் தேடப்பட்டுவரும் சரபோஜியும் கலந்துகொண்டார். மேலும் அந்தக் கூட்டத்தில் அவரை முதல் ஆளாகப் பேசவும் அனுமதித்திருக்கிறார்கள். அப்படியானால், மணல் கொள்ளைக்கு அரசே துணை போகிறதா?” என்றார் கொந்தளிப்பாக.

விபத்தில் சிக்கிய திரிஷாவின் தந்தை மதியழகன், “கால் நசுங்குன நிலைமையில என் பொண்ணை ஆஸ்பத்திரியில சேர்த்ததும் அங்கே வந்த சரபோஜியோட ஆதரவாளர்கள், ‘பணத்தை வாங்கிக்கிட்டு வழக்கை வாபஸ் வாங்கு’னு மிரட்டினாங்க. நான் மறுத்துட்டேன். என் பொண்ணு ஆஸ்பத்திரியில இருந்தா, வழக்குல சரபோஜிக்கு ஜாமீன் கிடைக்குறது சிரமம்கிறதால, என் பொண்ணுக்கு முழுசா சிகிச்சை கொடுக்காமலேயே டிஸ்சார்ஜ் பண்ண வெச்சுட்டாங்க. அதனால என் பொண்ணு கால் வீங்கிப்போய் நடக்க முடியாம இருக்கா” என்றார் கலங்கிய கண்களுடன்.

நான் என்ன கொலையா பண்ணிட்டேன்? - கேட்கிறார் ‘மணல்’ காம்ரேட்

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு சரபோஜியிடம் பேசியபோது, ‘‘திருவையாறு அரசு குவாரியிலிருந்து ‘பர்மிட்’ போட்டுத்தான் மண் எடுக்கிறோம். சின்னச் சந்தில் லாரி போக முடியாது என்பதால், டிராக்டர் மூலம் மணலை வேறு இடத்துக்கு மாற்றும்போது சிறிய விபத்து நடந்திருக்கிறது. நான் வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினராக இருப்பதால், அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் பேசினேன். போலீஸார் வலைவிரித்துத் தேடும் அளவுக்கு நான் என்ன கொலையா பண்ணிவிட்டேன்?’’ என்றார் ஆவேசமாக.

தமிழ்செல்வன்
தமிழ்செல்வன்

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தியாகராஜ னிடம் கேட்டபோது, ‘‘விபத்து ஏற்படுத்திய டிராக்டரின் ஓட்டுநர் நீதிகண்ணன் மீதும், மணல் கடத்தல் தொடர்பாக டிராக்டர் உரிமையாளர் சரபோஜி மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். இருவரையும் விரைவில் கைதுசெய்வோம்” என்பதோடு முடித்துக்கொண்டார்.

நம்புங்க மக்களே... சட்டத்தின் முன் அனைவரும் சமம்!