Published:Updated:

டிக் டாக் செயலி... தொடரும் விபரீத சம்பவங்கள்!

டிக் டாக் செயலி
பிரீமியம் ஸ்டோரி
News
டிக் டாக் செயலி

எதிர்வினையாக யாரோ ஒருவர் அந்த ஊர் பெண்களை அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

சம்பவம் 1

2019, ஜூன் 11-ம் தேதி அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வங்காரம் கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான அனிதா, தான் விஷம் குடிப்பதை டிக் டாக்கில் வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளிநாட்டில் வசித்த கணவர், அனிதாவின் தீவிர டிக் டாக் வீடியோ செயல்பாடுகளைக் கண்டித்ததாலேயே இந்த விளைவு.

முத்துக்குமார் - ஐசக் மோகன்லால்
முத்துக்குமார் - ஐசக் மோகன்லால்

சம்பவம் 2

2019, நவம்பரில் மதுரையைச் சேர்ந்த இரு பெண்கள் டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்டனர். இதன்மூலம் தேனியைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் ஆணுடன் டிக் டாக் நட்பு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இந்த இரு குரூப்புக்குமிடையே பிரச்னை எழவே, தேனியைச் சேர்ந்த பெண் இவர்கள் இருவரின் டிக் டாக் வீடியோக்களை எடிட் செய்து பாலியல் தொழில் செய்பவர்களாகப் பதிவிட்டார். விஷயம் காவல்துறை வரை சென்றுவிட்டது.

சம்பவம் 3

தேனி மாவட்டம் நாகலாபுரத்தில் பெண் ஒருவர் தன் சகோதரியுடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ வெளியிட்டுள் ளார். இதற்கு எதிர்வினையாக யாரோ ஒருவர் அந்த ஊர் பெண்களை அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். ஆத்திரமடைந்த ஊர்க்காரர்கள், காவல் நிலையத்தில் திரண்டு புகார் அளித்தனர். தனிநபர் பிரச்னை ஊர்ப் பிரச்னையாகிவிட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சம்பவம் 4

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே டிக் டாக்கில் நடனமாடி நான்கு லட்சம் ஃபாலோயர்களைப் பெற்ற கண்ணன் என்கிற 19 வயது இளைஞரை, காவல்துறை சமீபத்தில் கைதுசெய்துள்ளது. தனக்கு லைக் இட்ட பள்ளி, கல்லூரி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி, அத்துமீறி, அதை வீடியோவாகப் பதிவுசெய்து மிரட்டிப் பணம் பறித்ததாக அவர்மீது குற்றச்சாட்டு.

இவை உதாரணங்களே... சம்பவங்கள் இன்னும் ஏராளம்!

டிக் டாக் செயலி
டிக் டாக் செயலி

2017-ம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது டிக் டாக் செயலி. கலை ஆர்வம், நகைச்சுவை உணர்வு, தனித்திறமை உள்ள பலர், டிக் டாக்கை தங்கள் திறமையை வெளிப்படுத்தும் ஒரு களமாகப் பயன்படுத்தி மீடியா வாய்ப்புகள் பெற்றுள்ளனர். இன்னொரு பக்கம், எந்த ஒரு நவீன வடிவமும் சமூகம் ஏற்படுத்திவைத்திருக்கும் கட்டமைப்பைக் கடந்து செல்லும்போது விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதற்கும் டிக் டாக் உதாரணமாக இருக்கிறது. பெண்களின் எல்லை மீறும் வீடியோக்கள், ஆண்களின் சாதி, மதப் பெருமை, வெறுப்புப் பேச்சு வீடியோக்கள் என தினம் தினம் இவை சமூகப் பதற்றத்தை ஏற்படுத்திவருகின்றன. வீடியோக்கள் வெளியிடுபவர்கள் இப்படியென்றால், அவற்றைப் பார்ப்பவர்களும் அதற்கு அடிமையாகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த வருடம் சென்னை உயர் நீதிமன்றக் கிளையில் (மதுரை), ‘டிக் டாக் செயலியை இந்தியாவில் தடைசெய்ய வேண்டும்’ என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் வழக்கு தொடர்ந்தார். தடையும் விதிக்கப்பட்டது. சில நாள்களில், சென்னை உயர் நீதிமன்றக் கிளை (மதுரை) நிபந்தனைகளுடன் அந்தத் தடையை விலக்கிக்கொண்டது.

இன்ஃபோகிராபிக்ஸ்
இன்ஃபோகிராபிக்ஸ்
இன்ஃபோகிராபிக்ஸ்
இன்ஃபோகிராபிக்ஸ்

டிக் டாக் தடை கோரி வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் முத்துக்குமாரிடம் பேசினோம். ‘‘சென்னை உயர் நீதிமன்ற கிளையின் (மதுரை) உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டிக் டாக் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அமர்வு, ‘டிக் டாக் செயலி மீதான தடை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்கும்’ என அறிவித்தது. தொடர்ந்து, உயர் நீதிமன்றக் கிளையில் (மதுரை), ‘இனி அப்லோடு செய்யப்படும் வீடியோக்கள் கண்காணிக்கப்படும். லட்சக்கணக்கான ஆபாச வீடியோக்கள் அழிக்கப்பட்டு விட்டன. ஆபாச வீடியோக்கள் பதிவேற்றப்பட்டால் உடனே நீக்கப்படும். 18 வயதுக்கும் குறைவானவர்கள் வீடியோ அப்லோடு செய்ய முடியாது. புகார்களைத் தெரிவிக்க மண்டல அலுவலகங்கள் அமைக்கப்படும்’ என்றெல்லாம் உத்தரவாதம் கொடுத்து, செயலியைப் பதிவிறக்க தடைநீக்கம் பெற்றது டிக் டாக் நிர்வாகம். ஆனால், இவை எவையும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்த விளைவுகளைப் பற்றி மீண்டும் உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன்’’ என்றார்.

டிக் டாக் குறித்து வரும் எதிர்மறையான கருத்துகள் பற்றி, டிக் டாக் நிறுவனத்துக்காக ஆஜரான வழக்கறிஞர் ஐசக் மோகன்லாலிடம் பேசினோம். ‘‘நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் மக்களில் ஒருசிலர் செய்யும் தவறுகளுக்கு, டெக்னாலஜியை உருவாக்கிய நிறுவனம் எப்படி பொறுப்பாக முடியும்? டிக் டாக் மூலம் பல திறமைசாலிகள் நல்ல நிலைக்கு வந்துள்ளார்கள்.

இன்ஃபோகிராபிக்ஸ்
இன்ஃபோகிராபிக்ஸ்
இன்ஃபோகிராபிக்ஸ்
இன்ஃபோகிராபிக்ஸ்

தனிப்பட்ட முறையில் பகிரப்படும் வீடியோக்களை சிலர் டிக் டாக்கில் பதிவேற்றம் செய்ததால்தான் பிரச்னைகள் ஏற்பட்டன. இதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத்தான் சில உறுதிமொழிகளை நீதிமன்றத்தில் தெரிவித்தோம். அவற்றை டிக் டாக் நிறுவனம் பின்பற்றிவருகிறது. எல்லா துறைகளிலும் மோசமான சிலர் இருப்பது போல் சிலர் டிக்டாக்கை மிஸ்யூஸ் செய்கிறார்கள். அவர்கள்தான் குற்றவாளிகள்’’ என்றார்.

டிக் டாக் செயலியின் எதிர்காலத்தில், இந்திய இளைஞர்களின் எதிர்காலமும் சிக்குண்டு இருக்கிறது.