Published:Updated:

ஏமாற்றும் தொண்டு நிறுவனங்கள்...

தேன் கூடு
பிரீமியம் ஸ்டோரி
தேன் கூடு

பரிதவிக்கும் பழங்குடி மக்கள்!

ஏமாற்றும் தொண்டு நிறுவனங்கள்...

பரிதவிக்கும் பழங்குடி மக்கள்!

Published:Updated:
தேன் கூடு
பிரீமியம் ஸ்டோரி
தேன் கூடு

வ்வோர் ஆண்டும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதற்காக, மத்திய - மாநில அரசுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குகின்றன. ஆனால், சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்று வரை அவர்கள் வாழ்க்கை கொஞ்சம்கூட மேம்பட்டதாகத் தெரியவில்லை. அரசு விழாக்களில் பாரம்பர்ய உடையணிந்து நடனமாட வைப்பது, இசைக் கருவிகளை இசைக்க வைப்பது, பாடல்கள் பாட வைப்பது எனப் பழங்குடி மக்களைக் காட்சிப்பொருளாகவே மாற்றி வைத்துள்ளனர்.

தேன் சேகரிக்கும் பழங்குடியினர்...
தேன் சேகரிக்கும் பழங்குடியினர்...

நீலகிரி மலைப்பகுதியில் கோத்தர், தோடர், இருளர், குரும்பர், பனியர், காட்டு நாயக்கர் என ஆறு இனங்களைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வோர் இன மக்களும் ஒவ்வொரு வகையான பழக்கவழக்கங்களையும் பாரம்பர்யத்தையும் கொண்டுள்ளனர். அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்தும் வருகிறார்கள். இவர்களில், சில குடும்பங்கள் மட்டும் கல்வி கற்று ஓரளவுக்கு முன்னுக்கு வந்திருந்தாலும், பெரும்பாலான பழங்குடி மக்கள் அன்றாடப் பிழைப்புக்கே வழியில்லாமல்தான் இருக்கிறார்கள். கைவினைப் பொருட்கள், வனத்தில் கிடைக்கும் பொருட்களைச் சேகரித்து, விற்று பிழைப்பு நடத்துகிறார்கள். இவர்களிடம் குறைவான விலைக்குப் பொருள்களை வாங்கி, வெளிச் சந்தையில் விற்றுப் பல மடங்கு லாபம் சம்பாதிக்கும் நகரவாசிகளும் இருக்கின்றனர். இதனால், காட்டை மட்டுமே நம்பி வாழ்ந்த இந்தப் பழங்குடி மக்கள், வேறு தொழில்களுக்குச் செல்வதற்கான நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

பழங்குடி மக்களில், தேன் எடுக்கும் இனத்தினரின் பாடு சொல்லி மாளாது. இருளர், குரும்பர் ஆகிய இனங்களைச் சேர்ந்தவர்கள் தேன் சேகரிப்பதைப் பரம்பரைத் தொழிலாகக் கொண் டுள்ளனர். நாள்கணக்கில் காடு, மலைகளில் திரிந்து உயிரைப் பணயம்வைத்துச் சேகரித்துவரும் தேனை, மிகக்குறைந்த விலைக்கு வாங்கும் சில தனியார் நிறுவனங்கள், கொள்ளை லாபம் அடைகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்துப் பேசிய குரும்பர் இனத்தைச் சேர்ந்த ஆறுமுகன், ‘‘நாங்கள் பரம்பரையாகத் தேன் சேகரிக்கும் தொழிலைச் செய்து வருகிறோம். எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. எல்லா நாள்களிலும் தேன் எடுக்க முடியாது. குறிப்பிட்ட சில நாள்களில் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் தேனை மட்டும்தான் எடுப்போம். கொம்புத்தேன், மலைத்தேன், பெரிய தேன் எனத் தேனில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு வகை தேன் கிடைக்கும். குறிஞ்சி பூக்கும் சமயத் தில் லேசான நீல நிறத்தில் குறிஞ்சித்தேன் கிடைக் கும். நாவல் காய்க்கும் சமயத்தில் மஞ்சள் நிறத் தில் மணமுள்ள நாவல் தேன் கிடைக்கும்.

பத்து, இருபது பேர் ஒன்றாகச் சேர்ந்து காட்டுக்குள் நாள்கணக்கில் தங்கிக் கூட் டைக் கண்டுபிடித்துத் தேனைச் சேகரிப் போம். மர உச்சி, பாறைச்சரிவில் உள்ள பொந்துகள் என மிக ஆபத்தான இடங் களில் தேன்கூடுகள் இருக்கும். பத்து கிலோ தேன் எடுக்க பத்து பேர் ஒரு வாரம் அலைய வேண்டிவரும். பூச்சிக் கடி வாங்கி நாங்கள் சேகரித்துவரும் தேனை, மிகக்குறைந்த விலைக்குத்தான் கொள்முதல் செய்கிறார்கள். அதனால், ஆண்டாண்டு காலமாக நாங்கள் செய்துவந்த பரம்பரைத் தொழிலை விட்டுவிட்டு கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம்’’ என்றார்.

பழங்குடியின செயற்பாட்டாளர் வீரப்பன் ‘‘தொண்டு நிறுவனம் என்ற பெயரில் அமைப்புகளை வைத்திருக்கும் சிலர், தேன் எடுக்கும் பழங்குடியினருக்கு உதவுவதுபோலப் பணத்தைக் கொடுத் துக் கடனாளி ஆக்குகிறார்கள். பிறகு அவர்களை மிரட்டிக் குறைந்த விலைக்குத் தேனைக் கொள்முதல்செய்து பாட்டில்களில் அடைத்து லேபிள்களை ஒட்டி வெளி மார்க்கெட் டில் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். பழங்குடி மக்களிடம் ஒரு கிலோ தேனை 200 முதல் 300 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி, வெளியில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். பழங்குடிகளின் ஓவியம், கைவினைப்பொருட்கள் போன்றவற்றை யும் இதேபோலக் குறைந்த விலைக்கு வாங்கி வெளியில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். உண்மையில் பழங்குடி மக்களுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை’’ என்றார்.

பழங்குடி மக்களின் உரிமைகளை மீட்கப் போராடிவருகிறார், குரும்பர் இனத்தைச் சேர்ந்த ஷோபனா. அவர், ‘‘பழங்குடிகளின் உற்பத்திப் பொருட் களுக்கு முறையான சந்தை இல்லை. இதுகுறித்துப் பல ஆண்டுகள் வலியுறுத்தி யும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அரசு சார்பில், பழங்குடிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு முறையான சந்தை இருந்தால், எங்களின் வாழ்வு முன்னேற உதவியாக இருக்கும்’’ என்றார்.

வீரப்பன், ஷோபனா
வீரப்பன், ஷோபனா

ஊட்டியில் உள்ள மத்திய அரசின் பழங்குடி யினர் ஆய்வு மைய இயக்குநர் சுப்பிரமணியத்திடம் பேசியபோது, ‘‘பழங்குடிகள் சேகரிக்கும் சிறு வனப்பொருட்களை முறையான விலையில் விற்பனை செய்வதற்கானச் சந்தை ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் தொடங்கப்படும்’’ என்றார்.

பழங்குடியின மக்களின் துயரங்கள் தீருவது எப்போது?