Published:Updated:

‘நாம இருக்குற நிலையில’னு அப்பா சொன்னதேயில்ல!

சௌந்தர்யா
பிரீமியம் ஸ்டோரி
சௌந்தர்யா

- ஜூடோவில் தேசிய அளவில் தங்கம் வென்ற பழங்குடி, மாற்றுத்திறன் மாணவி

‘நாம இருக்குற நிலையில’னு அப்பா சொன்னதேயில்ல!

- ஜூடோவில் தேசிய அளவில் தங்கம் வென்ற பழங்குடி, மாற்றுத்திறன் மாணவி

Published:Updated:
சௌந்தர்யா
பிரீமியம் ஸ்டோரி
சௌந்தர்யா

‘`எனக்கு வாய் பேச முடியலைன்னாலும், என்னை பத்தி மத்தவங்கள பேச வச்சிருக்கேன். எனக்கு காது கேட் காம இருந்தாலும் என்னை பத்தி மத்தவங்களை கேட்க வச்சிருக்கேன். அதுக்கு நான் எடுத்த விடாமுயற்சி நிறைய நிறைய’’ - கண்கள், கைகளால் சைகை மொழியில் சௌந்தர்யா பேசுவதை, நமக்கு அழகாக மொழியாக்கித் தருகிறார் அவர் தோழி சரண்யா. பழங்குடியின, மாற்றுத் திறனாளி மாணவியான சௌந்தர்யா, ஜூடோ வீராங் கனை. சமீபத்தில், அகில இந்திய ஜூடோ போட்டியில் தங்கம் வென்று சாதித்திருக்கும் தங்கம். இயல்பு வாழ்க் கையே சவாலாக இருக்கும் சூழலிலும், வான் நோக்கி ஏணியை வைக்கலாம் என்ற தன்னம்பிக்கை தரும் தளிர்.

சேலம் மாவட்டம், ஏற்காடு குண்டூர் பழங்குடியின கிராமத்தை சேர்ந்த சிவனேசன் - மலர்க்கொடி தம்பதியின் மூத்த மகள் செளந்தர்யா. சேலம், அயோத்தியாப்பட்டினத் தில் உள்ள தமிழக விழி இழந்தோர் சங்கத்தினர் நடத்தும் விடுதியில் தங்கி, உடையான்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் ஒன் படித்து வருகிறார். இந்த இருபாலர் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கென தனிப்பட்ட ஆசிரியர்கள் இல்லாதபோதும், பள்ளி நிர்வாகம், சக மாணவர்களின் ஆதரவை பற்றிக்கொண்டு, செளந்தர்யா தன் கல்வியைத் தொடர்ந்து வருவதே வியப்பு. இந்நிலையில், சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த விழித்திறன் மற்றும் பேச்சுத்திறன் மாற்றுத்திறனாளர்களுக்கான அகில இந்திய ஜூடோ போட்டி வரை சென்று, தங்கத்துடன் திரும்பியிருப்பது பாராட்டுக்குரியது.

‘நாம இருக்குற நிலையில’னு அப்பா சொன்னதேயில்ல!

சௌந்தர்யாவிடம் நாம் பேசியபோது, நம் கேள்விகளை அவருக்கும், அவர் பதில்களை நமக்கும் அழகாகக் கடத்திய தன் தோழி சரண்யாவின் கைகளை அவ்வப்போது கோத்து சௌந்தர்யா தெரிவித்த அன்பு, அழகு. ``சின்ன வயசுலயே எங்க அப்பா, அம்மா ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுட்டாங்க. எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கு நல்லா பேச வரும். எங்க ஊருல இருக்குற பள்ளிக்கூடத்துல ஒன்பதாம் வகுப்புப் படிக்குறா. அப்பா சேலத்துல கட்டட வேலைக்குப் போறாங்க. அம்மா ஏற்காடு எஸ்டேட்ல காபி கொட்டை எடுக்குற வேலைக்குப் போறாங்க. நான் நாலாவது படிச்சப்போ, தற்காப்புக் கலையான ஜூடோ பத்தி தெரியவந்தது. என் கோச் மாதேஷ்தான் எனக்கு அதுல ஊக்கம் கொடுத்து, இந்தளவுக்குக் கொண்டுவந்திருக்கார். அவர் தினமும் மாலை ஹாஸ்டலுக்கு வந்து எனக்காக பயிற்சி கொடுப்பார். என் குறையையெல்லாம் மீறி நானும் ஒரு வெற்றியைப் பார்க்க ஜூடோதான் வழினு மனசுல நல்லா பதியவெச்சுக்கிட் டேன். அதுக்கான உழைப்பு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, பயிற்சினு எல்லாத்தையும் கொடுத்தேன்’’ என்றவர், போட்டி அனுபவங்களை பகிர்ந்தார்.

‘நாம இருக்குற நிலையில’னு அப்பா சொன்னதேயில்ல!

``முதன்முதல்ல கோரக்பூர்ல நடந்த போட்டியில தங்கம் ஜெயிச்சேன். அதுதான் என் முதல் வெற்றி. அதுக்கப் புறம் கோச் என்னை அழைச்சுக்கிட்டுப் போன எந்தப் போட்டியிலயும் முதல் மூணு பரிசுல ஒண்ணு வாங்காம வந்த தில்ல. அப்பாவும், அம்மாவும், `நாம இருக்குற நிலையில, நீ இருக்குற நிலையில இதுலாம் தேவையா’னு ஒருநாளும் நினைச்சதில்ல. ’எங்க வேணாலும் போ, விளையாடு’னு தைரியம் கொடுத்து அனுப்பிவைப்பாங்க. அதுக்கு செலவுக்கு அப்பாகிட்ட பணம் கேட்கும்போதெல் லாம், எனக்குத் தெரியும் அது அவர்கிட்ட இருக்காதுனு. ஆனா ஒரு தடவைகூட அவர் கஷ்டத்தை என்கிட்ட சொன்னதே இல்ல. எப்படியாச்சும் பணத்தை ரெடி பண்ணிக் கொடுத்துட்டு, ‘ஒருநாள் பெரிய ஆளா வரணும்’னு தலையை தடவிக்கொடுப்பார். அவரை இன்னும் பெருமைப்படுத்தணும்’’ - கண்களில் ஒளி கூடுகிறது சௌந்தர்யாவுக்கு.

‘நாம இருக்குற நிலையில’னு அப்பா சொன்னதேயில்ல!

செளந்தர்யா பெற்றோரிடம் பேசினோம். “எங்க பொண்ணுக்கு காது கேட்க, வாய் பேச முடியாதுனு தெரியவந்தப்போ, நானும் மனைவி யும் ஒரு முடிவு எடுத்தோம். ‘நம்மள அப்பா, அம்மா சுமையா நினைக் கிறாங்க’னு ஒரு நாளும் குழந்தை நினைச்சிடக் கூடாதுங் கறதுல உறுதியா இருந்தோம். அவ நல்லா படிக்கணும்னு சின்ன வயசுலயே டவுன் ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டோம். அங்க அவள மாதிரி இருக்குற மத்த குழந்தைகளோட வளரும் போது, தன்னை நினைச்சு அவ கவலைப்பட மாட்டானு நாங்க நம்பினது நடந்துச்சு. அவ ஜூடோல பரிசுகள் எல்லாம் வாங்குற அளவுக்கு விளையாடுறானு கோச் சொன்னப்போ, பட்ட பாடு, படுற பாடு எல்லாம் பறந்துபோச்சு. இந்த ஒலகம் பெரிய சந்தோஷத்தை எங்க கையில கொண்டுவந்து கொடுத்த மாதிரி இருந்துச்சு. `பழங்குடியின மாற்றுத்திறன் மாணவி சாதனை’னு செய்தியில கேக்கறப்பவெல்லாம் கண்ணீரும் சந்தோஷமுமா சிலிர்த்துப்போவோம்’’ என்றார்.

‘நாம இருக்குற நிலையில’னு அப்பா சொன்னதேயில்ல!

``நாங்க இதுவரை கடவுள்கிட்ட, ஏன் எங்களுக்கு இப்படி புள்ளையைக் கொடுத்தனு முறையிட்ட தேயில்ல. இப்போ, இந்தப் புள்ளையைக் கொடுத்தது எங்க பாக்கியம் சாமினு சொல்ல வெச்சிருக்கா எங்க பொண்ணு. அவ இன்னும் பெருசா சாதிப்பா’’ - நம்பிக்கையும் நெகிழ்ச்சியுமாகச் சொல்கிறார்கள் சௌந்தர்யாவின் பெற்றோர்.