Published:Updated:

துருக்கி: சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சரிந்த கட்டடங்கள்! - சாலையில் தஞ்சம் புகுந்த மக்கள்

துருக்கி நிலநடுக்கம்
துருக்கி நிலநடுக்கம்

உண்மையான பாதிப்பு நிலவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இடிந்து விழுந்த கட்டடங்களுக்கு இடையே பலர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

துருக்கி நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7-ஆகப் பதிவானது. ஏகியன் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், துருக்கியின் மேற்குப் பகுதிகள் குலுங்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்மிர் நகரில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. கடுமையான நிலநடுக்கம் காரணமாக மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.

உண்மையான பாதிப்பு நிலவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இடிந்து விழுந்த கட்டடங்களுக்கு இடையே பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிறிய அளவில் சுனாமி பாதிப்பும் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கடல்நீர் மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்திருக்கிறது. மீட்புப் பணிகளில்தான் பாதிப்பு நிலவரம் தெரியவரும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு