Published:Updated:

ட்விட்டர் சர்வே : தீபாவளிக்கு எவ்வளவு செலவு செய்யப்போகிறீர்கள்?

ட்விட்டர் சர்வே
பிரீமியம் ஸ்டோரி
News
ட்விட்டர் சர்வே

ட்விட்டர் சர்வே

ன்னும் ஒரு மாதத்தில் தீபாவளி வரவிருக்கிறது. முக்கியமான பல செலவுகளை நாம் இந்தப் பண்டிகையின்போதுதான் செய்வோம். ஆனால், தற்போது பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதாகச் சொல்லப் படுவதால், இந்தத் தீபாவளிக்கு நீங்கள் எவ்வளவு செலவு செய்யப்போகிறீர்கள் என்கிற கேள்வியை நாணயம் விகடன் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) கேட்டு, சர்வே நடத்தினோம்.

ட்விட்டர் சர்வே : தீபாவளிக்கு எவ்வளவு செலவு செய்யப்போகிறீர்கள்?

இந்த சர்வேயில் 74% பேர் ரூ.5,000 - ரூ.10,000 வரை செலவு செய்யப்போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இன்றைக்கு நான்கு பேர்கொண்ட நடுத்தரக் குடும்ப உறுப்பினர்களுக்குத் துணிமணிகள் எடுக்க வேண்டும் என்றால், 6,000 ரூபாய்க்கு மேலே செலவாகக்கூடும். தவிர, குடும்பத்துக்குத் தேவை யான இதரப் பொருள்களை வாங்கவேண்டும் என்றால், குறைந்தபட்சம் ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை செலவாகக்கூடும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ட்விட்டர் சர்வே : தீபாவளிக்கு எவ்வளவு செலவு செய்யப்போகிறீர்கள்?

இந்த சர்வேயில் 15% பேர், ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை செலவு செய்யப்போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதன்மூலம் பலரின் கையில் போதிய அளவு பணம் இல்லை என்பது தெளிவாகிறது. 11% பேர் மட்டுமே ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை செலவு செய்யப்போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் உயர்நடுத்தர பொருளாதாரப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். வீட்டுக்குத் தேவையான பொருள்கள், புதிய டிவி, செல்போன் என ஏதாவது ஒரு பொருளை வாங்கத் திட்டிமிருக்கலாம்.

தீபாவளிச் செலவுகளைச் சமாளிக்க, பணப் பற்றாக்குறை உள்ளவர்கள், கடன் வலையில் எளிதில் சிக்குவதற்கு வாய்ப்புண்டு. அவசியமான தேவைக்குக் குறைந்த வட்டியில் கடன் வாங்கி, அதை விரைவில் அடைத்துவிடத் திட்டமிட வேண்டும். அதைவிடுத்து, கெளரவத்துக்காகக் கடன் வாங்கி, பொருள்களை வாங்க வேண்டுமா என்று யோசித்துப் பார்ப்பது நல்லது.

- ஆகாஷ்