Published:Updated:

ட்விட்டர் சர்வே: சந்தை ஏற்றம்... முதலீடு செய்கிறீர்களா?

ட்விட்டர் சர்வே
பிரீமியம் ஸ்டோரி
News
ட்விட்டர் சர்வே

ட்விட்டர் சர்வே

டந்த சில மாதங்களாக இறக்கத்தில் இருந்த பங்குச் சந்தை, தற்போது நல்ல ஏற்றம் கண்டிருக்கிறது. கடந்த 20-ம் தேதி வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 36100 புள்ளிகளாக இருந்த பங்குச் சந்தை, இன்று (செப். 27) 38900 புள்ளிகளுக்குப் பக்கத்தில் வர்த்தகம் ஆகிறது. குறுகிய காலத்திலேயே பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்ந்திருப் பதைப் பார்த்து, பங்குச் சந்தை என்பதே ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்பதைப் பலரும் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

ட்விட்டர் சர்வே: சந்தை ஏற்றம்... முதலீடு செய்கிறீர்களா?

இந்த நிலையில் சந்தை, இறக்கத்துக்குப்பின் மீண்டும் உயரத் தொடங்கியிருப்பதால், மீண்டும் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறீர்களா என்கிற கேள்வியை நாணயம் விகடன் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) கேட்டிருந்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ட்விட்டர் சர்வே: சந்தை ஏற்றம்... முதலீடு செய்கிறீர்களா?

இந்த சர்வேயில் 28% பேர் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறேன் என்றும், 26% பேர் இனி முதலீடு செய்வேன் என்றும் சொல்லியிருக்கிறார்கள். பங்குச் சந்தை எப்படிச் செயல்படும் என்பதைப் புரிந்துகொண்டதன் விளைவாகவே இவர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சி, நிறுவனங்களின் தொழில் எனப் பல விஷயங்களை ஆராய்ந்து முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் பங்குச் சந்தை கைகொடுக்கும்.

ட்விட்டர் சர்வே: சந்தை ஏற்றம்... முதலீடு செய்கிறீர்களா?

இந்த சர்வேயில் 46% பேர் பங்குச் சந்தையில் முதலீடு செய்யவே மாட்டேன் என்று சொல்லி யிருக்கிறார்கள். ரியல் எஸ்டேட், தங்கம் என முதலீட்டுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும் இந்தக் காலத்தில், இப்படிச் சொல்வது சரியான முடிவல்ல. பங்குச் சந்தை குறித்து விஷயம் தெரியாதவர்கள், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு களில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்யலாம்.பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம், வரிச் சலுகை எனப் பல விஷயங்களை வைத்துப் பார்த்தால், பங்குச் சந்தை முதலீட்டைத் தவிர்க்க முடியாது என்பதே உண்மை!

- ஆகாஷ்