கடந்த சில மாதங்களாகச் சந்தை இறக்கத்தில் இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் போர்ட் ஃபோலியோவும் நஷ்டத்தில் இருக்கிறது. இந்த நிலையில், உங்கள் போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி இருக்கிறீர்களா என நாணயம் விகடன் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) சர்வே ஒன்றை நடத்தினோம்.

இதில் சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 15% பேர் மட்டுமே, தங்களின் போர்ட் ஃபோலியோவை மறுபரிசீலனை செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். முதலீட்டு விஷயங்களில் இவர்கள் கைதேர்ந்தவர் களாக இருக்கலாம். தவிர, போர்ட்ஃபோலியோவை நீண்ட காலமாக உன்னிப்பாகக் கவனித்து வருபவர்களாகவும் இருக்கலாம்.

64% பேர் போர்ட்ஃபோலியோவை இன்னும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். சந்தை ஏறுமுகமாக இருந்தாலும் சரி, இறங்குமுகமாக இருந்தாலும் ஆண்டுக்கொருமுறை நம் போர்ட்ஃபோலியோவில் உள்ள ஃபண்டுகள் அனைத்தும் சரியாகத்தான் செயல்படுகிறதா என்பதை ஆராய்வது அவசியம். ஆனால், சந்தை இறக்கம் கண்டிருக்கும் இந்தச் சமயத்தில் இவ்வளவு பேர் போர்ட்ஃபோலியோ மறுபரிசீலனை செய்யாதது புதிராக உள்ளது.

22% பேர் போர்ட்ஃபோலியோவை மறு பரிசீலனை செய்வது குறித்து இனிதான் யோசிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை இதுவரை மறுபரிசீலனை செய்யவில்லை அல்லது இனிதான் செய்யவேண்டும் என்கிறவர்கள் தாங்கள் வைத்திருக்கும் ஃபண்டுகளைக் குறிப்பிட்டு, finplan@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் போர்ட்ஃபோலியோ மறுபரிசீலனை செய்யப்பட்டு, அது நாணயம் விகடனில் வெளியிடப்படும்.

- ஆகாஷ்