இன்றைய இன்டர்நெட் உலகில் பெரும் பிரச்னையாக மாறியிருக்கின்றன டிக்டாக் மற்றும் ஹலோ சமூக வலைதளங்கள். சீனாவின் பைட்டான்ஸ் என்கிற நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த இரு சமூக வலைதளங்களும் இந்தியாவில் படுபிரபலமாக இருக்கின்றன.

இந்த வலைதளங்கள்மூலம் வெறுப்பினைப் பரப்பும் விஷயங்களும் குழந்தைகளைப் பாலியல்ரீதியாகப் பயன்படுத்தும் காட்சிகளும் வைரலாகி வருவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுப்பது என மத்திய, மாநில அரசாங்கங்கள் தீவிரமாக யோசித்து வருகின்றன. இந்த இரு வலைதளங்களையும் தடை செய்வதே ஒரே தீர்வு எனத் தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்கள் யோசித்து வருகின்றன. இன்னும் சில மாநிலங்களும் இதே ரீதியில் திட்டமிட்டு வரும் நிலையில், இந்த இரு வலைதளங்களையும் இந்தியா முழுக்க மத்திய அரசாங்கம் தடை செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இந்த நிலையில், டிக்டாக், ஹலோ ஆகிய சமூக வலைதளங்களை என்ன செய்ய லாம் என நாணயம் டிவிட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) ஒரு கேள்வி கேட்டு, சர்வே நடத்தினோம். இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 63% பேர், இந்த இரு வலைதளங்களையும் முடக்க வேண்டும் என்று சொல்லியிருக் கின்றனர். 9% பேர் இந்த இரு வலைதளங் களையும் முடக்கக்கூடாது என்று சொல்லியிருக்கின்றனர்.

ஆனால், 28% பேர் இந்த இரு வலைதளங் களையும் நிபந்தனையுடன் செயல்பட அனுமதிக்கலாம் என்று சொல்லியிருக் கின்றனர். இது ஆரோக்கியமான சிந்தனை என்றாலும், சமூக வலைதளங் களைக் கண்காணிப்பது மிகப் பெரிய வேலை. என்னதான் நிபந்தனை விதித்தாலும் அந்த நிபந்தனைகளைத் தாண்டி, பல விஷயங்கள் இந்த வலை தளங்களில் பதிவேற்றப்படவே நிறைய வாய்ப்புள்ளது என்பதால், நிபந்தனை யுடன் கூடிய செயல்பாடு என்பதற்கான சாத்தியம் குறைவுதான்.

இந்த விஷயத்தில் மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கங்களும் நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!

- ஆகாஷ்