பிரீமியம் ஸ்டோரி

லக அளவிலான வறுமைக் குறியீட்டில் நம் நாடு 102-வது இடத்தை அடைந்திருக்கிறது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் நிலவும் வறுமை நிலையை ஆராய்ந்து, ஒவ்வோர் ஆண்டும் அறிக்கையைக் கூட்டாக வெளியிட்டுவருகின்றன அயர்லாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த இரு நிறுவனங்கள். இந்த ஆண்டு 117 நாடுகளில் வறுமை நிலையை ஆய்வு செய்ததில், நம் நாடு 102-வது இடத்தில் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. நம் பக்கத்து நாடுகளான நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளைவிட நம் நாடு வறுமை விஷயத்தில் பின்தங்கியிருப்பதாகச் சொல்லியிருப்பது நம்மை அதிரவைக்கிறது.

`நம் நாடு வறுமைக் குறியீட்டில் பின்தங்கியிருக்க என்ன காரணம்?’ என்று ட்விட்டரில் நாணயம் விகடன் சார்பாகக் (https://twitter.com/NaanayamVikatan) கேள்வி கேட்டு, அதற்கு மூன்று பதில்களைத் தந்து, வாசகர்களின் கருத்துகளைக் கேட்டிருந்தோம். இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள், `அரசின் தவறான கொள்கைதான் இதற்குக் காரணம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். நியாயவிலைக் கடைகள் மூலம் சாதாரண மக்களுக்கும் சென்று சேர வேண்டிய உணவுப் பொருள்கள், சரியாகக் கிடைக்காமலிருப்பதே இந்தக் கருத்துக்கு நல்லதோர் உதாரணம்.

ட்விட்டர் சர்வே
ட்விட்டர் சர்வே

`மக்களின் சோம்பேறித்தனமும், பெருகும் சமூக ஏற்ற இறக்கமும் காரணம்’ எனச் சிலர் சொல்லியிருப்பதிலும் உண்மை இருக்கவே செய்கிறது. வறுமையை ஒழிப்பதில் மத்திய, மாநில அரசுகள் இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்பது மட்டும் நிச்சயம்!

- ஆகாஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு