Published:Updated:

ட்விட்டர் அமைத்து வைத்த மேடை!

ட்விட்டர் அமைத்து வைத்த மேடை!
பிரீமியம் ஸ்டோரி
ட்விட்டர் அமைத்து வைத்த மேடை!

‘இனமெனப் பிரிந்தது போதும், மதமெனப் பிரிந்தது போதும், ஒன்றிய உயிரினம் ஒன்றே தீர்வாகும்!’

ட்விட்டர் அமைத்து வைத்த மேடை!

‘இனமெனப் பிரிந்தது போதும், மதமெனப் பிரிந்தது போதும், ஒன்றிய உயிரினம் ஒன்றே தீர்வாகும்!’

Published:Updated:
ட்விட்டர் அமைத்து வைத்த மேடை!
பிரீமியம் ஸ்டோரி
ட்விட்டர் அமைத்து வைத்த மேடை!

சில விஷயங்கள் எப்படி ட்விட்டரில் டிரெண்ட் ஆகுமென்றே கணிக்க முடியாது. டைனோசரிலிருந்து மண்புழு வரை... அவ்வளவு ஏன், ஒன்றிய அமீபா வரை உயிரினங்கள் வரிசைகட்டி ட்விட்டரில் அக்கவுன்ட் ஆரம்பித்ததுதான் சமீபத்திய டிஜிட்டல் டிரெண்ட்.

அவ்வப்போது வாயைக் கொடுத்து வகையாய் மாட்டிக்கொள்ளும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு வேண்டிய ஒருத்தர், ‘ஒன்றிய’ பிரச்னையை மையமாக வைத்து ஒரு கருத்தைப் பதிவிட்டார். ‘இவனுங்க பேசுற பேச்சைப் பார்த்தா டைனோசரே தமிழ்ல தான் பேசுச்சுன்னு சொல்வானுங்கபோல’ என்ற ஒற்றை ட்வீட்டில் ஒரண்டையை ஆரம்பித்து வைத்தார்.

அதற்கு அர்ஜுன் சம்பத்தைத் திட்டி எதிர்வினையாற்றியது டைனோசர் என்ற அக்கவுன்ட். உடனே உதவிக்கு மடகாஸ்கர் யானை வரை வந்தன. அதற்கு முன் அந்த டைனோசர் ஐடி நல்லபிள்ளையாக, ‘தடுப்பூசி போடுங்க மக்களே... முடிஞ்ச வரைக்கும் வீட்டுல இருங்க... முகக்கவசம் யூஸ் பண்ணுங்க... அலட்சியமா இருக்காதீங்க ப்ளீஸ். நீங்களும் எங்க இனம் மாதிரி அழிஞ்சிடாதீங்க!’ என #ஒன்றிய உயிரினங்கள் ஹேஷ்டேக்கில் கருத்து சொல்லி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.டைனோசரால் அர்ஜுன் சம்பத் ட்விட்டரில் தாக்கப்பட்ட செய்தி ‘சந்து’ எனப்படும் ட்விட்டர் வெளி எங்கும் திக்கெட்டும் தீயெனப் பரவியது.மளமளவென காட்டுக்குள்ளிருந்து எல்லா உயிரினங்களும் வெளியே வர ஆரம்பித்தன.

‘இனமெனப் பிரிந்தது போதும், மதமெனப் பிரிந்தது போதும், ஒன்றிய உயிரினம் ஒன்றே தீர்வாகும்!’ என்ற வாசகங்களோடு #ஒன்றிய உயிரினங்கள் என்ற டேக்கில் எல்லாம் கருத்து சொல்ல ஆரம்பித்தன.

பதிலுக்கு எங்ககிட்டயும் சீப்பு இருக்கு என, ‘தேசியப் பறவை’ போன்ற அக்கவுன்டில் பதிலடி கொடுக்கத் தொடங்கினர் பா.ஜ.க ஐ.டி விங்க். ஆனால், ஒன்றிய உயிரினங்கள் நூற்றுக்கணக்கில் ஒன்றுகூடிவிட்டதால் வழக்கம்போல் தாமரை மல்லாந்துவிட்டது.

ஒவ்வொரு விலங்கிடமும் நார்மல் நெட்டிசன் ஐடிகள் போய் கேள்வி கேட்டால் நச்சென அந்த உயிரினமாகவே மாறி பதில் சொன்னது செம டைமிங்காய் இருந்தது.

“மனுஷனுக்கு பிரியாணி ஆசை இருக்கிற வரைக்கும் எனக்கு எண்டு கார்டே கெடையாது!” என்று வந்த ஆட்டுக்குட்டியிடம், “ஆட்டுக்குட்டி சார், உங்களுக்கு எதுக்கு தாடி இருக்கு..? ஒரு பழமொழி இருக்கே அது உண்மையா? ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லைன்னு சொல்றாங்களே... அது சரியா..?” என்று கேள்வி கேட்டதும், “மோடி தாடி வச்சிருக்காரே...எதுக்காச்சும் தேவை இருக்கா. நான் குட்டியோண்டு ஸ்டைலுக்காக வச்சிருக்கறது பொறுக்கல உனக்கு!” என டக்கென பதில் வந்து விழுந்தது.

நல்லபாம்பு, தனக்கு ஸ்விக்கியில் முட்டையும் பாலும் ஆர்டர் போடச் சொல்லி ‘கடவுள்’ என்ற பெயர் கொண்ட ஐடிக்கு மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தது. கடவுள் டபாய்க்க, ‘கழுத்துல தான் இருக்கேன். காதுலயே போட்ருவேன்!’ என மிரட்டியது.

“வணக்கம் முன்னாள் முதல்வரே!” என மண்புழுவைப் பார்த்து வரையாடு சலாம் வைக்க, “யோவ், அது நான் இல்லையா!” எனச் செல்லமாகக் கடிந்துகொண்டது மண்புழு.

அரசியல் ட்வீட்டுகளையும் தாண்டி சில ட்வீட்டுகள் சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்தன. உதாரணத்துக்குச் சில...

“ஆமை புகுந்த வீடு உருப்படாது.”

# ‘நான் எப்படா உங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சேன்... ஃபிராடு பசங்களா’ என குமுறியிருந்தது ஆமை.

கிங்காங்கெல்லாம் டைரி எழுதவே ஆரம்பித்துவிட்டது.

“நேற்று, இரவு உணவை முடித்துவிட்டு பேன் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படியே அசந்து தூங்கிவிட்டேன். இந்த ஒன்றிய அரசு எப்பொழுது பேன் பார்ப்பதை அரசு வேலையாக அறிவிக்குமோ, அப்போதான் பேன் பாக்க ஆள் கிடைக்கும். கிர்க் கிர்க் கிர்க்!” என லந்து பண்ணுகிறது.

ட்விட்டர் அமைத்து வைத்த மேடை!

“ஆடு நனையுதேன்னு நாங்க அழறதும் இல்ல... எங்களுக்கும் அதுக்கு எந்தச் சம்பந்தமும் இல்ல!” எனப் பரிதாப வாக்குமூலம் கொடுக்குறது சாட்சாத் ‘உள்ளூர் ஓநாய்’தான்!

மெல்ல மெல்ல ‘ஒன்றிய’ பிரச்னையை விட்டு, வேறொரு ஆக்கிரமிப்பு மேட்டருக்கு வந்தன உயிரினங்கள்.

சிங்கக்குட்டிக்கு உடனே மூக்கு வியர்த்துவிட்டது. ‘தமிழ்நாட்டின் ஒரு அங்குலம் வனப்பகுதியைக்கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடது!’ என்ற ஒரு பொதுநல வழக்கின் சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு காட்டுக்கு ராஜாவாய் நன்றி சொல்லி, ‘எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றத்துக்கும், அதைச் செயல்படுத்தப் போகும் தமிழ்நாடு அரசுக்கும் நன்றிகள்!’ என ட்வீட் போட்டிருந்தது.

“உங்க இனத்தை அழிந்துவரும் இனம் லிஸ்ட்ல கொண்டுவந்ததில் சீமான் அண்ணனுக்கு ரொம்ப முக்கியப் பங்கு இருக்கு பங்காளி!” என ஆமையிடம் ‘ஒன்றிய உடும்பு’ ஆறுதல் சொன்னதைப் பார்த்தபோதே சிரிப்பில் நமக்குப் புரையேறியது.

“கட்டை விரலோ தலையோ கறியாக எவனும் கேட்டால் பட்டை உரியும். சுடுகாட்டில் அவன் கட்டை எரியும்!” என சீமானுக்கே மிரட்டல் விடுத்ததெல்லாம் தனிப்பெரும் காமெடி!

‘இது நல்லாருக்கே’ என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் “வணக்கம் நண்பர்களே... செய்திகள் வாசிப்பது சிங்கக் கூட்டத்தின் தலைவர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் நாங்கள் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். எங்களில் நிலா என்ற எங்கள் தோழி உயிரிழந்து விட்டார். மேலும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. என்ன செய்வதெனத் தெரியவில்லை” என சிங்கமாக மாறி ட்வீட் செய்திருந்தார். கீழே பாமக பாய்ஸ், ‘டாக்டரய்யா என்னா தமாஷா பேசுறாருய்யா!’ எனக் கைதட்டிக்கொண்டிருந்தார்கள்.

நல்லவேளை ‘இது பாமகவுக்குக் கிடைத்த வெற்றி!’ என டாக்டர் ராமதாஸ் எதுவும் சொல்லி ஒன்றிய விலங்கினங்களை வெறியேற்றவில்லை.

ட்விட்டர் அமைத்து வைத்த மேடை!

‘ஒன்றிய உயிரினங்கள்’ டிரெண்டிங்கை ஆரம்பித்து, விலங்கின ஐடிக்களில் முதலாவதாய்த் தோன்றிய டைனோசரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

“தனியார் நிறுவனத்துல பொறியாளரா வேலை செய்கிறேன். டெல்டா பகுதி விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். நாம சொல்ல வர்ற விஷயம், அது காமெடி, கருத்து, கவிதை, அரசியல், விழிப்புணர்வு எதுவா வேணும்னாலும்‌ இருக்கலாம். ஆனா அத ஒரு சாதாரண மனுஷனா‌ இருந்து சொல்லும்போது மக்கள்கிட்ட முழுசா போயி சேர்றது இல்ல. கற்பனைக் கதாபாத்திரங்கள் அதிகமா விரும்பப்படுது. இதுக்கு ட்விட்டர்ல நிறைய பதிவர்கள் உதாரணம். அது மாதிரிதான் இந்த டைனோசர்.

கடந்த காலத்துல எல்லாருக்கும் ஒரு மறக்கமுடியாத செல்லப் பெயர் இருக்கும். எனக்கு டைனோசர். ஒரு அரசியல் கட்சியோட பதிவு, தமிழ் மொழிய தாழ்த்திப் பேசுறமாதிரி இருந்தது. அதுக்கு பதில் கொடுக்க டைனோசர உபயோகப்படுத்தினேன். அரசியல் பேச எனக்கு இன்னொரு பிரபலமான ஐடி இருந்தாலும், 30 followers மட்டும் இருந்த இந்த டைனோசர் பதில் சொல்றதுதான் சரியா இருக்கும்னு தோணுச்சு.அந்த பதில், ட்விட்டர்ல நல்ல ரீச் கொடுத்துச்சு.”

‘எல்லாம் சரி, நீங்க தி.மு.க ஐ.டி விங்காமே’ என்றால், “சமுக வலைதளங்கள்ல மூடநம்பிக்கை, சாதி/மதவெறி, பாசிசம், மொழித் திணிப்பு இதுக்கு எதிரா சண்ட செய்யுற எல்லாரும் தி.மு.க ஐ.டி விங்கா இருக்கணும்னு அவசியமில்ல. ஒன்றிய உயிரினங்கள்ல கட்சி சார்பு இல்லாத நிறைய பேர் இருக்காங்க. தி.மு.க தப்பு பண்ணும்போதும் என் கருத்துகளைச் சொல்வேன்’’ என்கிறார் அவர்.