Published:Updated:

`ஒரே மாதிரி சோதனை பண்ணுங்க' - கோவையில் சாலையில் உருண்ட குடிமகன்கள்

கோவையில் போக்குவரத்துப் போலீஸாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு பேர் சாலையில் படுத்து உருண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுபோதையில் சாலையில் உருண்ட குடிகன்கள்
மதுபோதையில் சாலையில் உருண்ட குடிகன்கள்
மதுபோதையில் சாலையில் உருண்ட குடிகன்கள்
மதுபோதையில் சாலையில் உருண்ட குடிகன்கள்

கோவை சாய்பாபா காலனி பகுதியில், போக்குவரத்துப் பிரிவு காவல் துறையினர் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பழனி மற்றும் புரோட்டா மாஸ்டர் மூர்த்தி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் அங்கு வந்துள்ளனர். இதனால், காவலர்கள் அவர்கள் வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதற்கு பழனி மற்றும் மூர்த்தி இருவருமே எதிர்ப்பு தெரிவித்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டன் கணக்கில் போதை பொருள்கள்; அதிவேக நீர்மூழ்கிக் கப்பல் - அதிரடி காட்டிய கடற்படை வீரர் # ActionVideo

``சோதனை என்றால் அனைவரையும் ஒரே மாதிரி செய்ய வேண்டும். இதை வீடியோ எடுங்க. கேஸ் போடுங்கள். நாளைக்கு நியூஸ் பேப்பர்ல வரணும். வரவைப்போம்” என்று வாக்குவாதம் செய்தபடியே, சாலையின் நடுவே படுத்து போராட்டம் நடத்தினர். இதனால், போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ள சாய்பாபா காலனி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தின்போது பழனி, மூர்த்தி இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனர். இதையடுத்து, இருவர் மீதும் மதுபோதையில் வாகனம் இயக்கிய பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீஸார், அவர்கள் வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.