Published:Updated:

பள்ளி சிறுவர்களுக்கு தீண்டாமை கொடுமை நடந்த கடைக்கு சீல்! - உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது

தீண்டாமை கொடுமை குறித்து விசாரணை

பள்ளிக் குழந்தைகளுக்கு தீண்டாமை கொடுமை நடந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், சர்ச்சைக்குரிய கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அத்துடன், கடைக்காரரும் அவரின் நண்பரும் கைதானார்கள்.

பள்ளி சிறுவர்களுக்கு தீண்டாமை கொடுமை நடந்த கடைக்கு சீல்! - உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது

பள்ளிக் குழந்தைகளுக்கு தீண்டாமை கொடுமை நடந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், சர்ச்சைக்குரிய கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அத்துடன், கடைக்காரரும் அவரின் நண்பரும் கைதானார்கள்.

Published:Updated:
தீண்டாமை கொடுமை குறித்து விசாரணை

தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் பயிலும் அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இன மாணவர்களுக்கு அருகில் இருக்கும் கடையில் தின்பண்டம் கொடுக்க மறுக்கப்பட்டது. இதை கடைக்காரரே வீடியோவாக எடுத்து வெளியிட்டார்,

சீல் வைக்கப்பட்ட கடை
சீல் வைக்கப்பட்ட கடை

ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் பள்ளிச் சிறுவர்களுக்கு தின்பண்டம் கொடுக்க மறுத்து தீண்டாமை கொடுமை செய்த விவகாரம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இது தொடர்பான வீடியோ வைரலானதால் அதிகாரிகள் தாமாக முன்வந்து விசாரணை நடத்தினார்கள். தென் மண்டல காவல்துறைத் தலைவர் ஆஸ்ரா கர்க் உத்தரவுப்படி தென்காசி மாவட்ட எஸ்.பி-யான கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பள்ளிச் சிறுவர்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதுடன் பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் விசாரித்தார்கள். அத்துடன், வருவாய்த்துறை சார்பாக சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ சுப்புலட்சுமி தலைமையில் விசாரணை நடந்தது. அதில், கடையில் தீண்டாமை கொடுமை நடந்தது உறுதிசெய்யப்பட்டது. அதனால் சர்ச்சைக்குரிய கடைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கைதான கடை உரிமையாளர் மகேஸ்வரன்
கைதான கடை உரிமையாளர் மகேஸ்வரன்

பள்ளிக் குழந்தைகளிடம் சாதிய பாகுபாடு காட்டியதுடன் தின்பண்டம் கொடுக்க மறுத்த கடையின் உரிமையாளர் மகேஸ்வரன் என்பவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மகேஸ்வரன் தலைமறைவாகி விட்டார். அவரை தனிப்படையினர் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், சிவகாசியில் பதுங்கியிருந்த அவர் கைதானார். அத்துடன்,பிரச்னைக்கு காரணமானவரான அதே கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

தீண்டாமை கொடுமை காரணமாக கைதான இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையைத் தொடர்ந்து முருகன், குமார், சுதா ஆகிய மூவர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர். கிராமத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.