Published:Updated:

“டாய்லெட்டைப் பயன்படுத்தினால் அறுத்துடுவோம்” - அரசு ஊழியருக்கு நேர்ந்த தீண்டாமைக் கொடுமை!

விருதுநகர்
பிரீமியம் ஸ்டோரி
விருதுநகர்

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அர்ச்சனா நியமிக்கப்பட்டுள்ளார்

“டாய்லெட்டைப் பயன்படுத்தினால் அறுத்துடுவோம்” - அரசு ஊழியருக்கு நேர்ந்த தீண்டாமைக் கொடுமை!

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அர்ச்சனா நியமிக்கப்பட்டுள்ளார்

Published:Updated:
விருதுநகர்
பிரீமியம் ஸ்டோரி
விருதுநகர்

அரசு அலுவலகத்திலேயே தீண்டாமைக் கொடுமை செய்ததாக ஆறு பேர் மீது வன்கொடுமை வழக்கு பதியப்பட்டிருப்பது அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மாரியப்பன். பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர், விருதுநகர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிகிறார். சாதியப் பாகுபாடு காரணமாக, ‘அலுவலகக் குடிநீர் கேனில் தண்ணீர் குடிக்கக் கூடாது, டாய்லெட்டைப் பயன்படுத்தக் கூடாது’ என சக ஊழியர்களே கடந்த நான்கு வருடங்களாக மாரியப்பனை டார்ச்சர் செய்திருக்கிறார்கள்.

மாரியப்பன்
மாரியப்பன்

இது குறித்து நம்மிடம் பேசிய மாரியப்பன், “அலுவலகக் கண்காணிப்பாளர் இளங்கோவன், ‘நீ குறவன்தானே, நீயெல்லாம் எங்ககூட வேலை செய்யக் கூடாது. எங்கேயாவது மாறுதல் வாங்கிட்டுப் போயிரு’னு மிரட்டினார். கம்ப்யூட்டரைத் தொட விடமாட்டாங்க. வாட்டர் கேனில் தண்ணி குடிக்க விடமாட்டாங்க. பாத்ரூம் போனால் wகூட, ‘நீயெல்லாம் இந்த டாய்லெட்டைப் பயன்படுத்தக் கூடாது. மீறிப்போனா உறுப்பை அறுத்துருவோம்’னு அருவருப்பா மிரட்டுவாங்க. இந்தக் கொடுமையையெல்லாம் உயரதிகாரிகளிடம் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எஸ்.சி., எஸ்.டி ஆணையத்துக்கும் புகார் அனுப்பினேன். போலீஸில் புகார் செய்து, அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடைசியா, ‘சமூக நீதி’ என்ற சட்ட ஆலோசனை மையம் மூலம் சட்டப் போராட்டம் நடத்திய பிறகே, போலீஸ் புகாரைப் பதிவுசெய்துள்ளது’’ என்கிறார் வேதனையுடன்.

மாரியப்பன் புகார் தொடர்பாக விருதுநகர் பொதுப்பணித்துறை அலுவலகக் கண்காணிப்பாளர் இளங்கோவன் உட்பட அலுவலர்கள் கதிரேசன், கணேஷ் முனியராஜ், ராஜேஸ், முத்துமுருகானந்தம், தர்மேந்திரா ஆகிய ஆறு பேர் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

“டாய்லெட்டைப் பயன்படுத்தினால் அறுத்துடுவோம்” - அரசு ஊழியருக்கு நேர்ந்த தீண்டாமைக் கொடுமை!

‘சமூக நீதி’ அமைப்பின் இயக்குநர் ஆறுமுகமோ, “தீண்டாமைக் கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்வரை ஓய மாட்டோம்” என்று படபடத்தார்.

இந்த விவகாரம் பற்றி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் பேசும்போது, “இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அர்ச்சனா நியமிக்கப்பட்டுள்ளார்” என்றார். விருதுநகர் பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் செல்வராஜ் மற்றும் மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத் தலைமைப் பொறியாளர் ரகுநாதன் ஆகியோரைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, ‘‘வழக்கு விசாரணையில் இருப்பதால், எதுவும் பேச விரும்பவில்லை’’ என்றனர் சுருக்கமாக.

தீண்டாமைக் கொடுமைகள் தொடராவண்ணம் உறுதிமிக்க நடவடிக்கை எடுப்பதுதான் ‘திராவிட மாடல் ஆட்சி’யைப் பறைசாற்றும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism