Published:Updated:

கந்துவட்டிப் புகார்... கைமாறிய பத்திரங்கள்... சர்ச்சையை கிளப்பும் திருச்சி விவகாரம்!

லால்குடி
பிரீமியம் ஸ்டோரி
லால்குடி

20 வருஷமா நான் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யறேன். நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வட்டிக்குப் பணம் கொடுத்துக்கிட்டு இருந்தேன்

கந்துவட்டிப் புகார்... கைமாறிய பத்திரங்கள்... சர்ச்சையை கிளப்பும் திருச்சி விவகாரம்!

20 வருஷமா நான் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யறேன். நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வட்டிக்குப் பணம் கொடுத்துக்கிட்டு இருந்தேன்

Published:Updated:
லால்குடி
பிரீமியம் ஸ்டோரி
லால்குடி

திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த விஸ்வநாதன், ரியல் எஸ்டேட் மற்றும் வட்டித் தொழில் செய்துவந்திருக் கிறார். பலரும் விஸ்வநாதனிடம் வட்டிக்குக் கடன் பெற்று வந்துள்ளனர். ஆனால், ‘‘கந்துவட்டிக்கு வாங்கிய பணத்தை வட்டியோடு சேர்த்து, பல மடங்காகத் திருப்பிக் கொடுத்தும் எங்களுடைய சொத்து ஆவணங்களைத் திருப்பிக் கொடுக்காமல் அபகரித்துவிட்டார்” என விஸ்வநாதன் மீது அடுத்தடுத்து புகார்கள் கிளம்பியதையடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டார்.

விஸ்வநாதன் மீது புகார் கொடுத்துள்ள ஜேம்ஸ் இதுகுறித்து நம்மிடம் பேசியபோது, “தொழில் விஷயமாக விஸ்வநாதனிடம் என்னுடைய நிலம், வீட்டை எழுதிக்கொடுத்து 25 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். 19.5 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, ‘மிச்சப் பணத்தையும் கொடுக்குறேன் என் சொத்தைத் திரும்ப என் பேருக்கே எழுதிக் கொடுத்துடுங்க’ என்று கேட்டேன். ஆனால், ‘உன் சொத்தைத் திரும்பத் தர முடியாது’ என்று சொல்லி, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள என் சொத்தை அபகரிச்சுட்டாரு” எனக் கலங்கினார்.

கந்துவட்டிப் புகார்... கைமாறிய பத்திரங்கள்... சர்ச்சையை கிளப்பும் திருச்சி விவகாரம்!

லால்குடியைச் சேர்ந்த விஜி, “2014-ல் விஸ்வநாதனிடம் 5 லட்ச ரூபாய் கடனுக்காக, என் அப்பா ஒரு ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்தாரு. ஒரே வருஷத்துல 4 லட்ச ரூபாயைத் திருப்பிக் கொடுத்துட்டோம். மிச்சப் பணத்தைத் தர்றோம்னு சொல்லியும், சொத்துப் பத்திரத்தைத் திரும்பத் தர மறுத்திட்டார்” என்றார்.

தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள விஸ்வநாதனிடம் புகார்கள் குறித்துக் கேட்டோம். “. இப்ப செய்யறதில்லை. தங்களோட தேவைக்காக நிலத்தையும், சொத்தையும் விக்கணும்னு என்கிட்ட வந்தவங்ககிட்ட, பணம் கொடுத்து அதிகாரபூர்வமாகப் பத்திரம் கிரயம் செஞ்சுக்கிட்டேன். அவ்ளோதான். இப்போ வந்து ‘வாங்குன பணத்தைத் தர்றேன், சொத்தைத் திரும்பக் கொடு’னு சொன்னா எப்படி... என்மீது புகார் கொடுத்துள்ள கவுன்சிலர் ஆறுமுகம், அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே 4.75 ஏக்கரை எனக்குக் கிரயம் செஞ்சு கொடுத்து, பணத்தையும் வாங்கிக்கிட் டாரு. இப்ப பொய்ப்புகார் சொல்றாரு” என்றார்.

ஜேம்ஸ் - விஜி
ஜேம்ஸ் - விஜி

விஸ்வநாதனின் குற்றச்சாட்டு குறித்து லால்குடி நகராட்சி கவுன்சிலர் ஆறுமுகத்திடம் கேட்டோம். “விஸ்வநாதன்கிட்ட நான் வாங்குன 75 லட்சத்துக்கு வட்டி, அசலைக் கட்டியுமே எனக்குத் தெரியாம என்னோட நிலம் 1.1 ஏக்கரை வித்துட்டாரு. நான் கவுன்சிலர் ஆகுறதுக்கு முன்னாடி 2019-லயே இந்தப் பிரச்னை சம்பந்தமாக வழக்கு போட்டுட்டேன். அப்படியிருக்க, நான் பொய்ப் புகார் சொல்வதாக எப்படிச் சொல்ல முடியும்?” என்றார்.

இந்த விவகாரம் குறித்து லால்குடி காவல் நிலைய ஆய்வாளர் பிரபு, டி.எஸ்.பி சீதாராமன் ஆகியோரிடம் பேசியபோது, “விஸ்வநாதனைக் கைதுசெய்யும்போது அவரது வீட்டிலிருந்து ஆவணங்கள் சிலவற்றைக் கைப்பற்றினோம். அவற்றை ஆய்வு செய்துவருகிறோம். ஆனால், 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பதெல்லாம் தவறான தகவல்” என்றனர்.

நிறைய குழப்பங்கள் இருக்கும் இந்த விவகாரத்தில், உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்!