Published:Updated:

மனநலம் பாதித்தவர்களுக்கு மறுவாழ்வு; நீளும் ஊத்தங்கரை போலீஸாரின் அன்புக்கரம் - மக்கள் பாராட்டு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்
மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்

மனநலம் பாதிக்கப்பட்ட 7 பேரை மீட்டு பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத்த ஊத்தங்கரை போலீஸாரின் மனிதாபிமான செயல் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு அடைக்கலம் ஏற்படுத்திக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரைப் போலீஸார். உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில் சாலையோரமும், பேருந்துநிலையம் போன்ற பொது இடங்களிலும் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் முதியவர்களை, ஊத்தங்கரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான காவலர்கள் மீட்டு விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்துக்குக் கொண்டுச்சென்று சேர்க்கிறார்கள்.

ஊத்தங்கரை
ஊத்தங்கரை

இந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட 7 பேரை மீட்ட ஊத்தங்கரைப் போலீஸார் குளிக்கவைத்து சுத்தம் செய்தனர். முடித்திருத்தம் செய்து, அவர்கள் அணிந்திருக்கும் கிழிந்த ஆடைகளையும் அகற்றிவிட்டு நல்ல ஆடைகளை அணிவித்துவிட்டனர். கொரோனா பரிசோதனைக்குப் பின்னர், தருமபுரி மீட்பு அறக்கட்டளை, ஊத்தங்கரை அரிமா சங்கம், புனித அந்தோணியார் ஆலயம் ஆகியோருடன் இணைந்து விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்துக்குப் பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.

கொற்கை அகழாய்வு: 9 அடுக்கு செங்கல் கட்டுமானத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட 2 அடுக்கு கொள்கலன்!

மீட்கப்பட்டவர்கள் உட்பட ஆதரவற்ற மேலும் 80 பேருக்கும் புத்தாடைகளை வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார் இன்ஸ்பெக்டர் லட்சுமி. இந்த நிகழ்ச்சியில், ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் லட்சுமியுடன், தருமபுரி மீட்பு அறக்கட்டளை பாலச்சந்திரன், ஆயுதப்படை எஸ்.ஐ பிரபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயகாந்தன், சிவகுமார் மற்றும் பெண் காவலர்கள் கலைச்செல்வி, சின்ன அழகி ஆகியோர் உடனிருந்தனர்.

மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்
மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்

கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் இந்தச் சேவையில் ஈடுபட்ட காவல்துறையினரின் சேவை பாராட்டுக்குரியது. இக்கட்டான இந்தச் சூழ்நிலையிலும், ஊத்தங்கரைப் போலீஸாரின் மனிதாபிமான சேவைதொடர்ந்து வருகிறது. விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் அப்படியே விட்டுவிடாமல், அங்கு அவர்களைப் பராமரித்துக்கொள்ளும் முறையையும் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். ஊத்தங்கரை போலீஸாரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டிவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு