Published:Updated:

‘வொர்கேஷன்’ - மாற்றி யோசித்த உத்தரகாண்ட்

இது புதுசு
பிரீமியம் ஸ்டோரி
இது புதுசு

இது புதுசு

‘வொர்கேஷன்’ - மாற்றி யோசித்த உத்தரகாண்ட்

இது புதுசு

Published:Updated:
இது புதுசு
பிரீமியம் ஸ்டோரி
இது புதுசு

கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்ட முக்கியமான துறை சுற்றுலா. இன்னொருபுறம் கொரோனாவால் பல அலுவலகங்கள் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ எனப்படும் வீட்டிலிருந்தே பணி செய்வதை ஊக்கப்படுத்துகின்றன. இந்த இரண்டையும் இணைத்து மலைகள் சூழ் மாநிலமான உத்தரகாண்ட், புதிய திட்டமொன்றை அறிவித்து அப்ளாஸ் அள்ளிவருகிறது.

‘வொர்கேஷன்’ (Workcation) என்பதுதான் உத்தரகாண்ட் சுற்றுலாத்துறை அறிவித்திருக்கும் அந்தத் திட்டம். இமயமலை அடிவாரத்தில், இயற்கையை ரசித்தபடியே உங்கள் அலுவலக வேலையைப் பார்க்கலாம். `இதுபோன்ற அசாதாரணச் சூழலில், மக்களுக்கு இது நல்ல மனமாற்றத்தைக் கொடுக்கும். பாதுகாப்பான சூழலில் அலுவலக வேலையை இயற்கையோடு இணைந்து செய்யலாம்’ என்கிறது உத்தரகாண்ட் அரசு. வேலை நேரம் தவிர, ஓய்வு நேரங்களில் மலையேற்றம், படகு சவாரி, காடுகளில் பயணம் எனப் பல்வேறு வசதிகளையும் செய்திருக்கிறது அந்த மாநில அரசு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
‘வொர்கேஷன்’ - மாற்றி யோசித்த உத்தரகாண்ட்

வேலை பார்க்க 24 மணி நேர மின்சார வசதி, அதிவேக இணைய இணைப்புடன்கூடிய ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள், ஹோம் ஸ்டே போன்றவை கொரோனா விதிகள் பின்பற்றப்பட்டு தயார்நிலையில் இருக்கின்றன. இமயமலைச் சாரலில் அமைந்திருக்கும் ஜிம் கார்பெட் (Jim Corbett), லேண்ட்ஸ்டௌன் (Lansdowne), முசௌரி (Mussoorie), கௌசானி (Kausani), டேராடூன் (Dehradun), நைனிடால் (Nainital), அல்மோரா (Almora) உள்ளிட்ட இடங்களில் ஒன்றை வொர்கேஷன் இடமாகத் தேர்வு செய்துகொள்ளலாம். இந்தத் திட்டத்துக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. வெகேஷனுக்காகத் தங்கள் மாநிலத்துக்கு வருபவர்களை ஊக்குவிக்கும் வகையில், மூன்று நாள்களுக்கு மேல் தங்குபவர்களுக்கு அரசு சார்பில் 3,000 ரூபாய் சலுகை அளிக்கும் திட்டத்தையும் உத்தரகாண்ட் அரசு அறிவித்திருக்கிறது. வொர்கேஷன் பேக்கேஜ்கள் ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்குகின்றன!

கூடுதல் தகவல்களுக்கும், பதிவுசெய்துகொள்ளவும் கீழ்க்காணும் இணையதளங்கள் உதவும்.

https://www.homestaysofindia.com/uttarakhand-workation/

https://www.thrillophilia.com/states/uttarakhand/tags/workation