Published:Updated:

கனவுகளை ஏன் தொலைக்கணும், போராடுவோமே... வல்லமை தாராயோ - ஷாலி நிவேகாஸ்

வல்லமை தாராயோ
பிரீமியம் ஸ்டோரி
News
வல்லமை தாராயோ

புதியன புகுவோம்

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸ் `வல்லமை தாராயோ’. விஜயதசமி தினத்திலிருந்து திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 7.00 மணிக்கு யூடியூபில் (youtube.com/VikatanTV) மட்டும் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கும் இந்த சீரிஸ் ஒரு பெண்ணின் வாழ்க்கையையும், அவளின் உணர்வுகளையும் மையப் படுத்தியது. சீரிஸின் நாயகி ஷாலி நிவேகாஸிடம் பேசினோம்.

``ரசிகர்கள் மாதிரியே நானும் எதிர் பார்ப்புகளுடன் காத்திருக்கேன். என் வாழ்க்கையில் இந்த டெய்லி சீரிஸ் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகுது’’ என்று கண்கள் விரியப் பேசுகிறார் ஷாலி.

``நான் பக்கா சென்னை பொண்ணு. படிச்சது இன்ஜினீயரிங். பொண்ணுங்க முழங்கால்வரைக்கும் முடி வெச்சுருக்கணும். பெரிய பொட்டு வெச்சுக்கணும்னு எதிர்பார்க்கும் டிரெடிஷனல் குடும்பத்துப் பொண்ணு. நான் கிளாஸிகல் டான்சர். கராத்தேயில் பிரௌன் பெல்ட் ஹோல்டர். சின்ன வயசிலிருந்தே நடிப்பு என் கனவா இருந்துச்சு. வீட்டுல சொன்னப்போ, அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. ஆனாலும் நிறைய போராடினேன். ‘நீ உனக்குன்னு ஒரு கரியரை செட் பண்ணி, அதில் உன்னை நிரூபிச்சுட்டு, அப்புறம் உன் நடிப்பாசையை நிறைவேத்திக்கோ’ன்னு சொல்லிட்டாங்க. அவங்க ஆசைக்காக பெங்களூரில் ஐ.டி நிறுவனத்தில் சில வருஷங்கள் வேலை பார்த்துட்டுதான் மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன்”

கனவுகளை ஏன் தொலைக்கணும், போராடுவோமே... வல்லமை தாராயோ - ஷாலி நிவேகாஸ்

- ஷார்ட் பயோ பகிர்ந்த ஷாலி, `வல்லமை தாராயோ’ என்ட்ரி பற்றிப் பேச ஆரம்பித்தார்...

‘`விகடன்லேருந்து டெய்லி சீரிஸுக்கான வாய்ப்பு கிடைச்சதும் பிரமிப்பா இருந்துச்சு. டெய்லி சீரிஸுங்கிறது புது கான்செப்ட்.

ஒரு பெண்ணை மையப்படுத்திய கதைக்களம் இந்த சீரிஸின் இன்னொரு தனித்துவம். கோலங்கள், தெய்வமகள், நாயகினு விகடன் டெலிவிஸ்டாஸின் சீரியல்கள் எல்லாமே மக்களால் ரொம்ப ரசிச்சுப் பார்க்கப்பட்டவை. அந்த சீரியல்களில் வரும் கதாபாத்திரங்களை மக்கள் அவங்க வீட்டுப் பொண்ணுங்களாகவே பார்த்திருக்காங்க. அன்பைக் கொட்டிக்கொடுத்திருக்காங்க. எனக்கும் அப்படி ஒரு வாய்ப்பும் அன்பும் மக்கள்கிட்ட இருந்து கிடைக்கப்போகுதுனு நினைச்சாலே சந்தோஷமா இருக்கு. என் குடும்பம், ஃபிரெண்ட்ஸ்னு எல்லாருமே டபுள் ஹேப்பியா இருக்காங்க. சமீபத்தில் வெளியான புரொமோ பார்த்துட்டு அம்மாவும் அப்பாவும் என்னை வாழ்த்தினாங்க. புரொமோ பார்த்த மத்தவங்களும் வாழ்த்திட்டிருக்காங்க. நிச்சயம் எல்லா பெண்களுக்கும் இந்த சீரிஸ் பிடிக்கும்’’

- ஷாலியின் கண்களில் நம்பிக்கை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``இந்த சீரிஸுக்காக எனக்கு முன்னாடி நிறைய பேரை ஆடிஷன் பண்ணியிருந்தாங்க. ஆனா, என் முகம் அபிராமி கேரக்டருக்குப் பொருத்தமாக இருந்ததால் இயக்குநர் உடனே ஓ.கே சொல்லிட்டார். ஒரு பெண் பிறந்ததிலிருந்து இறப்பதுவரை எல்லா இடங் களிலும் சமூகத்துக்காக, குடும்பத்துக்காகன்னு தன்னு டைய ஆசைகளையெல்லாம் விட்டுக்கொடுத்து வாழ வேண்டியிருக்கும். அப்படியான கட்டுப்பாடுகளை உடைச்சு தன் கனவுக்காகப் பயணிக்கும் பெண் சந்திக்கும் சிக்கல்களும், அவற்றை அவள் கையாளும் விதமும் தான் மையக்கதை. மொத்தம் 80 எபிசோடுகள். ஒவ்வோர் எபிசோடையும் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையோடு கனெக்ட் பண்ணிப் பார்க்க முடியும். இதைப் பார்க்குற எல்லோருக்கும், கனவுகளை ஏன் தொலைக்கணும், போராடு வோமே என்ற உணர்வு நிச்சயம் வரும்’’

- ஷாலியின் விவரிப்பில் நமக்குள்ளும் அதே உணர்வு.

‘`மேக்கப்பில் ஆரம்பிச்சு, டிரஸ்ஸிங், சூழல், கேரடக்டர் கள்னு சின்ன சின்ன விஷயத்தையும் இயல்பா காட்ட மொத்த டீமும் நிறைய மெனக்கிடுறாங்க. உங்க குடும்பக் கதையை ஒரு படமா பார்க்கும் ஃபீல் நிச்சயம் கிடைக்கும். மிஸ் பண்ணாமப் பாருங்க. அபிராமியை உங்களுக்கும் பிடிக்கும்” என்று விடைபெறுகிறார் ஷாலி நிவேகாஸ்.

ஆல் தி பெஸ்ட் அபிராமி.

மேக்கப்: சபாஷ் | ஹேர் ஸ்டைலிங்: கோபி | ஆடை உதவி: mvbridal couture | ஆபரணங்கள்: ஜெ.சி.எஸ். ஜுவல் கிரியேஷன்ஸ்