Published:Updated:

“தமிழ்த்தாய் வாழ்த்தா... என்ன சாங் அது?”

யாஷிகா ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
யாஷிகா ஆனந்த்

இந்த வாரம் எனக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கீங்களா... பரவாயில்லை கேளுங்க. நானும் எந்த அளவுக்கு அப்டேட்டா இருக்கேன்னு பார்க்கலாம்” என்று உற்சாகமானார்

“தமிழ்த்தாய் வாழ்த்தா... என்ன சாங் அது?”

இந்த வாரம் எனக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கீங்களா... பரவாயில்லை கேளுங்க. நானும் எந்த அளவுக்கு அப்டேட்டா இருக்கேன்னு பார்க்கலாம்” என்று உற்சாகமானார்

Published:Updated:
யாஷிகா ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
யாஷிகா ஆனந்த்

“என்னை மாட்டிவிட்டுடாதீங்க ப்ரோ. தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லிடுவேன்” என்றபடி கேள்விகளை எதிர்கொண்டார் ரமேஷ் திலக்

“போன்ல... அதுவும் டூ மினிட்ஸ்ல என்ன பேட்டி? நான் சொல்றது எதுவும் தப்புத் தப்பா வரக்கூடாது” என கன்டிஷனோடு பேசத் தொடங்கினார் யாஷிகா ஆனந்த்.

‘பா.ஜ.க பத்தி ஒரு கேள்வியாச்சும் இருக்கும்னு நினைக்கிறேன், அதிலயும் ‘குறும்புக் கேள்வி’ன்னு வேற சொல்றீங்க. நிச்சயம் நாங்க இருப்போம்... கேளுங்க’’ என எதிர்கொள்ளத் தயாரானார் வானதி சீனிவாசன்.

“இந்த வாரம் எனக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கீங்களா... பரவாயில்லை கேளுங்க. நானும் எந்த அளவுக்கு அப்டேட்டா இருக்கேன்னு பார்க்கலாம்” என்று உற்சாகமானார் திண்டுக்கல் ஐ.லியோனி.

வானதி சீனிவாசன்.
வானதி சீனிவாசன்.

தி.மு.க-வில் பொதுச்செயலாளராகவும், பொருளாளராகவும் புதிதாகப் பொறுப்பேற்ற இருவர் யார்?

சரியான பதில்: துரைமுருகன்- பொதுச்செயலாளர், டி.ஆர்.பாலு-பொருளாளர்.

ரமேஷ் திலக்: “மிஸ்டர் துரைமுருகன் - பொருளாளர். அப்புறம், தெரியலயே!”

யாஷிகா ஆனந்த்: “பொலிடிகல்ல பெரிசா இன்ட்ரஸ்ட் இருந்ததில்லை. எலெக்‌ஷன் டைம்ல யாரு ஜெயிக்கிறாங்கன்னு பார்க்க மட்டும் ஆர்வம் இருக்கும். மத்தபடி சீப் மினிஸ்டர் யாரு, அமைச்சர் யாருங்கிற விவரமெல்லாம் எனக்குத் தெரியாது. ஸோ, பாலிட்டிக்ஸ் கேள்விக்கு நோ ஆன்சர்.”

“தமிழ்த்தாய் வாழ்த்தா... என்ன சாங் அது?”

வானதி சீனிவாசன்: “பொதுச்செயலாளராக துரைமுருகன். பொருளாளராக டி.ஆர். பாலு.”

லியோனி: “ஓ என்கிட்டயேவா... சரி, பதில் சொல்றேன். பொதுச்செயலாளராகத் துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும்! பொறுப்பேற்றிருக்காங்க.”

‘நீராரும் கடலுடுத்த’ பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாகத் தமிழக அரசு அங்கீகரித்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?

யாஷிகா ஆனந்த்.
யாஷிகா ஆனந்த்.

சரியான பதில்: 50 ஆண்டுகள்.

ரமேஷ் திலக்: “தமிழ்த்தாய் வாழ்த்தை நான் ஸ்கூல்ல இருந்தே பாடிக்கிட்டிருக்கேன். நான் ஸ்கூல் முடிச்சே பல வருஷமாகுது. அப்போ கண்டிப்பா அதிக வருஷமாதான் இருக்கும். உத்தேசமா ஒரு முப்பது வருஷம் இருக்குமா?”

யாஷிகா ஆனந்த்: “என்ன சாங் அது.. நான் கேட்டதே இல்லைங்க.”

வானதி சீனிவாசன்: “வருஷம் ஞாபகமில்லை. எழுதியது மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. ஆனா அந்தப் பாட்டை முழுசா வைக்கலை. கட் பண்ணித்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க.”

லியோனி: “நீராரும் கடலுடுத்த’ பாடலுடைய ராகம், இசையமைச்சது யார், பாடுனது யார்னு நான் ஒவ்வொரு மேடையிலும் சொல்லிக்கிட்டே இருப்பேன். அதைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக 1970-ல அறிவிச்சாங்க. அப்போ 50 வருடம் ஆகுது.”

“தமிழ்த்தாய் வாழ்த்தா... என்ன சாங் அது?”

‘மத்திய அரசை விமர்சிப்பதால் என்னை பி.ஜே.பி. ஐ.டி. விங் அச்சுறுத்துகிறது’ என்று சொன்ன பா.ஜ.க-காரர் யார்?

சரியான பதில்: சுப்பிரமணியன் சுவாமி.

ரமேஷ் திலக்: “பா.ஜ.க-வுல இருந்துகிட்டே அவரைச் செய்றாங்களா... தெரியலையே! மார்க்கண்டேய கட்ஜுவா?”

யாஷிகா ஆனந்த்: “இதுவும் பாலிட்டிக்ஸ் கேள்விதானே?”

வானதி சீனிவாசன்: “சுப்பிரமணியன் சாமி.”

லியோனி: “ஞாபகமில்லையே. பா.ஜ.கவுடைய செய்திகளை அவங்க கொடுக்கக்கூடிய அறிக்கைகளில் மட்டும்தான் படிப்பேன். கரு.நாகராஜனா? எனக்குத் தெரியலையே!

ரமேஷ் திலக்
ரமேஷ் திலக்

” போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய கன்னட நடிகை பெயர் என்ன?

சரியான பதில்: ராகினி திவேதி

ரமேஷ் திலக்: “சத்தியமா ஐடியா இல்லை.”

யாஷிகா ஆனந்த்: “ரியா சக்ரபோர்த்தி.”

வானதி சீனிவாசன்: “கேரளாவுலதான் தங்கக் கடத்தல்ல ஒருத்தர் அரெஸ்ட் ஆனாங்க. கன்னட நடிகை பத்தித் தெரியலையே.

லியோனி: “ராகினி நிவேதியோ திவேதியோன்னு நினைக்கிறேன். சரி, ராகினின்னு வெச்சுக்குவோம்.

“தமிழ்த்தாய் வாழ்த்தா... என்ன சாங் அது?”

”நடுவரைப் பந்தால் தாக்கிய குற்றச்சாட்டில் அமெரிக்க ஓப்பன் தொடரிலிருந்து விலக்கப்பட்ட டென்னிஸ் வீரர் யார்?

திண்டுக்கல் ஐ.லியோனி.
திண்டுக்கல் ஐ.லியோனி.

சரியான பதில்: நோவாக் ஜோகோவிச்

ரமேஷ் திலக்: “இது கன்பார்மா தெரியும். நம்ம ஜோகோவிச்தான்!”

“தமிழ்த்தாய் வாழ்த்தா... என்ன சாங் அது?”

யாஷிகா ஆனந்த்: “ஸ்போர்ட்ஸ்ல கிரிக்கெட் பத்தி மட்டும்தான் தெரியும். மத்த கேம்னா ஸாரிங்க.”

வானதி சீனிவாசன்: “தெரியலையேங்க!”

லியோனி: “கோபத்தால் கோப்பையை இழந்த மாபெரும் வீரர்னு அவரைப் பத்தி ட்வீட் பண்ணிருந்தேன், நீங்க பார்க்கலையா? ஜோகோவிச்.”