என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

2K kids: வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் - ஒரு ரவுண்டு அப்

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
பிரீமியம் ஸ்டோரி
News
வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்

ஐஸ்வர்யா.அ

மதுரையோட பல அழகுகள்ல ஒண்ணு, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம். உள்ளூர் மக்களுக்கு ஹேங் அவுட் ஸ்பாட், ஃபுட் கோர்ட்னு மனசுக்கும் வயித்துக்கும் ரொம்பப் பிடிச்ச இடம். அங்க ஒரு ரவுண்ட் போலாமா..?!

கோடை வெயில் தணிஞ்ச ஒரு சாயங்கால நேரம். தெப்பக்குள படியில உக்காந்துட்டு தன் கண்ணால வானத்தையும் பூமியையும் அளந்துட்டு இருந்தார் அந்த தாத்தா. ‘`17-ம் நூற்றாண்டுல திருமலை நாயக்கர் கட்டுன தெப்பக்குளம் இது. கிட்டத்தட்ட 300 மீட்டர் நீள, அகலத்துல அமைஞ்ச சதுர வடிவ குளம். நாலு பக்கமும் 12 நீளமான படிக்கட்டு இருக்கும் எண்ணிப் பாருங்க. குளத்து நடுவுல இருக்குற சுரங்கக் குழாய் மூலமா, வைகை நதி தண்ணி இங்க வர்ற மாதிரி இணைப்பு இருக்கும்’’னு தெப்பக்குளத்தோட வர லாற்றுப் பெருமைகளை அடுக்கினார் தாத்தா.

2K kids: வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் - ஒரு ரவுண்டு அப்
2K kids: வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் - ஒரு ரவுண்டு அப்

தை மாசம் வர்ற தெப்பத் திருவிழா, அழகர் ஆற்றுல இறங்குற சித்திரைத் திருவிழா அப்போயெல்லாம் தெப்பக்குளம் ஜேஜேனு இருக்கும். குளத்தை சுத்தி கடைவீதிகளும் கூட்டமும்னு ஒரே ரண்டக்க ரண்டக்கக் கொண்டாட்டம்தான்.

இப்பவும் குளத்தைச் சுத்தி பல கடைகள், பல பொழுதுபோக்குகள் இருக்கு. இந்த தண்ணியைச் சுத்தி தங்களோட வாழ்வாதாரத்தை அமைச்சிட்டு இருக்குற சில மனுஷங்ககிட்ட பேச்சுக் கொடுத்தோம். பெருமாள், எம்.டெக் பட்டதாரி. தன்னோட மேல்படிப்புக்காக பகுதி நேர வேலையா இங்க குழந்தைங்க ராட்டினம் சுத்தி சம்பாதிச்சிட்டு இருக்கார். ஷேக் முஹம்மத், 30 வருஷமா தன்னோட செல்லக் குதிரை அஜித்கூட இந்தக் குளத்தை சுத்திட்டிருக்கார். அஜித்கூட நாம சவாரி போகலாம், அஜித் பாட்டுக்கு அஜித் டான்ஸ் ஆடுறதையும் பார்க்கலாம்!

நேரம் ஆக ஆக, சாப்பாட்டு வாசம் வந்து நம்மள ஆட்கொள்ள, கண்ணு அந்தத் திசையை நோக்கித் திரும்ப, ‘சிவசக்தி இடியாப்பம் மற்றும் குழாப்புட்டு’ கடையில வெதுவெதுனு ஆவி பறந்துட்டு இருந்துச்சு. பக்கத்துல தென்னங்குருத்து கடையில ஒரு ஃபாரினர் பொறுமையா நின்னு, ரசிச்சு, குருத்து சாப்பிட்டு இருந்தார்.

2K kids: வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் - ஒரு ரவுண்டு அப்
2K kids: வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் - ஒரு ரவுண்டு அப்

ராட்டினத்தை சுத்திவிட்டுட்டு கொஞ்சம் இளைப்பாற வந்து உக்காந்த கவிதா அக்கா, ஆறாவது வரை படிச்சிருக்காங்க. ‘‘ராட்டினம் சுத்தித்தான் தனியாளா எங்க அப்பா அம்மாவையும், என் புள்ளைகளையும் பார்த்துக்குறேன். நான் கஷ்டப்பட்டாலும் புள்ளைங்ககிட்ட நல்லா படிக்கணும்னு சொல்லி வளர்த்து, மேல்படிப்புவரை படிக்க வெச்சிருக்கேன்’’னு சொன்னாங்க சந்தோஷத்தோட.

குளம் அனுப்பிட்டே இருக்குற சின்னச் சின்ன அலைகள், தண்ணியைத் தொட்டு வரும் ஈரக் காத்து, வானத்துல எட்டிப் பார்க்க ஆரம்பிக்கிற நிலா கீத்து, மொபைல் ப்ளே லிஸ்ட்ல ராஜா பாட்டுனு... அங்கங்க உதிரி உதிரியா பலர் மெய் மறந்து உக்காந்து தனிமையை ரசிச்சிட்டு இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் இந்தக் குளம், மன அமைதி தர்ற வரமா இருக்கு. தெப்பக்குளத்துக்கு நடுவுல ஒரு குட்டிக் காடுபோல, தீவுபோல இருக்குற நீராழி மண்டபத்துல இருக்குற மரங்கள் எல்லாம் சலசலனு அசைய, சுத்தி கிடக்குற மக்களையெல்லாம் தலைகோதிப் போகுது காத்து... ஆசீர்வாதம்போல!