Published:Updated:

மருந்தில்லா வர்ம வைத்தியம்! - தேகம் தெய்விகம்

வர்ம வைத்தியம்
பிரீமியம் ஸ்டோரி
News
வர்ம வைத்தியம்

நம் உடல் ஆரோக்கியமாக இயங்க உடலின் 108 உயிர்நிலை வர்மப் புள்ளிகளே காரணம் என்கின்றன சித்த நூல்கள்.

நோயற்ற வாழ்வே நம் எல்லோருடைய விருப்பமும். ஆனால் இன்றைய நவீன வாழ்க்கை முறை அந்த விருப்பத்தை அடைய உதவுவதில்லை. நோயற்ற வாழ்வைப் பெற முறையான வாழ்க்கை வாழ வேண்டும். ஒருவேளை, நோய் வந்தாலும் அதை மருந்தில்லா மருத்துவ முறையால் தீர்த்துக்கொள்ள முடியும். அதற்கு ஒரு சிகிச்சைமுறை உள்ளது. அதுவே வர்ம வைத்தியம்.

வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடி, நரம்புகள் மற்றும் உயிர் தங்கும் வர்மப் புள்ளிகளை மையமாகக்கொண்ட வைத்திய முறை. உலகின் முதல் வைத்திய முறை என்று போற்றப்படும் வர்மக்கலை, ஆரம்பத்தில் போர்க்கலையின் அங்கமாக நம்மிடையே இருந்துள்ளது.

மருந்தில்லா வர்ம வைத்தியம்! - தேகம் தெய்விகம்

கம்ப ராமாயணத்தில் `யுத்த காண்ட’ பகுதி யில், நீலன் என்ற வானர வீரன் அங்கைப் போர் முறையில் எதிரிகளிடம் போரிட்டான் என்ற குறிப்பு உண்டு. `அங்கைப் போர்' என்பது வர்மப் போர்க் கலையே. இந்தக் கலை பின்னர் வைத்தியக் கலையாகவும் மாறியது. போரில் அடிபட்ட வீரர்களை உடனடியாகக் குணமாக்க வர்மப் புள்ளிகளைத் தூண்டி சிகிச்சை அளிக் கப்பட்டதாம். காலப்போக்கில் வர்மம் என்ற இந்த அற்புதக் கலை நம்மிடையே அருகி விட்டது. ஆனால், தெற்காசிய நாடுகளில் இப்போதும் வேறுவேறு பெயர்களில் சிறந்து விளங்கி வருகிறது வர்மம். அவற்றில் முக்கியமானது கொரியாவிலிருந்து வந்ததாகக் கூறப்படும் ‘சுஜோக்’ வைத்திய முறை. இது, நம் சித்தர் பெருமக்களால் தொடு மற்றும் தூண்டு வர்மமாகக் கடைப்பிடிக்கப்பட்ட சிகிச்சை முறையே.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சித்தர் கலை ஆசான் மு.அரி
சித்தர் கலை ஆசான் மு.அரி

நம் உடல் ஆரோக்கியமாக இயங்க உடலின் 108 உயிர்நிலை வர்மப் புள்ளிகளே காரணம் என்கின்றன சித்த நூல்கள். உடலின் ஒவ்வோர் ஆதாரம் இயங்கவும் குறிப்பிட்ட வர்மப் புள்ளிகள் உண்டு. இந்தப் புள்ளிகளை வர்ம ஆசான் ஒருவர் தன் விரல் களின் மூலம் அழுத்தித் தடவித் தூண்டுவதன் மூலம், அந்த ஆதாரத்தைத் திறக்கவோ அல்லது தூண்டவோ முடியும். இதன் மூலம் அந்தப் பாகத்தைச் செயல்படுத்தவும் ஏதேனும் குறையிருந்தால் சரி செய்யவும் முடியும் என்கிறது வர்ம வைத்தியம்.

இப்படி, உடலில் 108 வர்மப்புள்ளிகள் இருந்தாலும் முக்கியமான புள்ளிகள் யாவும் நம் கை கால் களில் ஒருங்கிணைகின்றன. ஆகவே, பெரும் பாலும் உள்ளங்கைகளிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வர்மப் புள்ளிகளில் அதி உன்னதமானது புருவ மத்தி. ஆங்கிலத்தில் டெம்பிள் (கோயில்) எனப்படும் ஒருவரின் திலர்த காலத்தை (புருவ மத்தி) வர்ம ஆசான் பார்த்ததுமே, அந்த நபருக்கு என்னென்ன வியாதிகள் உள்ளன என்பதை ஓரளவுக்குக் கணிக்க முடியும் என்பது வர்ம விதி. அதனாலேயே திலர்த காலத்தை திலகம் வைத்து மறைக்கத் தொடங்கினோம். இப்படித்தான் நம் உள்ளங்கைகளும் நோய் தீர்க்கும் பகுதியாக விளங்குகிறது.

மருந்தில்லா வர்ம வைத்தியம்! - தேகம் தெய்விகம்

உடலின் சூட்டை நாக்குக்கு அடியில் அறிவதுபோல், சகல நாடிகளின் ஓட்டத்தை கை மணிக்கட்டில் தெரிந்தகொள்வது போல், வியாதிகளைக் குணப்படுத்த உள்ளங்கைகள் பயன்படுகின்றன. உள்ளங்கைகளில் அழுத்தம் கொடுப்பது, வண்ணம் தீட்டுவது (கலர் தெரபி), வெந்தயம், கடுகு, பச்சைப்பயறு, மிளகு, போன்ற விதைகள் வைத்து அழுத்துவது (விதை சிகிச்சை) போன்ற முறைகளால் அநேக நோய்களைக் குணப்படுத்தி வருகிறது வர்ம வைத்திய சாஸ்திரம்.

ஆதிச் சித்தனான ஈசன் முதன்முதலாக அன்னை சக்திக்கு உடலிலுள்ள வர்மம், அடங்கல் குறித்த சூட்சுமங்களை உபதேசித்து அருளினாராம். பிறகு அன்னை சக்தி சூரபத்மனை அழிக்க முருகப்பெருமான் சென்றபோது... முருகனுக்கு படுவர்மம், தொடுவர்மம், தட்டுமுறை, தடைமுறைகள் ஆகியவற்றை உபதேசித்தாராம்.

மருந்தில்லா வர்ம வைத்தியம்! - தேகம் தெய்விகம்

அசுர வதத்துக்குப் பிறகு அகத்தியரின் வேண்டுதலை ஏற்று, அவருக்கு வேளிமலை எனும் தலத்தில் வாசி, யோகம், களரி, வர்மம், சிலம்பம், அடிமுறைகள் போன்றவற்றை முருகன் கற்றுத் தந்தாராம்.

அதேநேரம் ஈசனிடமிருந்து நந்திதேவரும், நந்தியிடமிருந்து அகத்தியரும் மற்றும் திரு மூலரும் கற்றார்கள். திரு மூலரிடமிருந்து காலங்கியார், போகர், புலிப்பாணி, ராம தேவர் ஆகியோர் கற்றுக்கொண்டார்கள் என்றும் சில நூல்கள் கூறுகின்றன.

வழிவழியாக நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்ட இந்த வர்ம சிகிச்சை, மருந்தில்லா முறை ஆகும்; பக்கவிளைவுகள் அற்றது. அற்புதமானதும் ஆதிக்கலையுமான இந்த எளிய வர்மப் புள்ளி வைத்திய முறையை வாசகர்களும் அறிந்து பயன்பெற வேண்டும் எனும் நோக்கில், சிறப்பு வர்மப்புள்ளி வைத்திய விளக்க வகுப்புக்கு (ஆன்லைன் வீடியோ மூலம்) ஏற்பாடு செய்துள்ளது சக்தி விகடன். நீங்களும் இந்த வகுப்பில் முன்பதிவு செய்து கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மருந்தில்லா வர்ம வைத்தியம்! - தேகம் தெய்விகம்

ஆன்லைன் விளக்க வகுப்பு விவரம்...

சக்தி விகடனும் உலக சித்தக் கலைகள் ஆய்வு மையமும் இணைந்து நடத்தும் எளிய வர்மப்புள்ளி வைத்திய விளக்க வகுப்பு, வரும் 15.11.2020 ஞாயிறன்று (காலை 7 முதல் 8:30 மணி வரை) ஆன்லைன் வகுப்பாக நடைபெறும் (முன்பதிவு கட்டணம் ரூ.500).

வர்ம வைத்திய முறை ஆசான் கம்பம் பாண்டியராஜன், உலக சித்தக் கலைகள் ஆய்வு மையத்தின் தலைவர் மு.அரி ஆகியோர் பயிற்சி விளக்கம் வழங்கவுள்ளார்கள்.

இந்த வகுப்பு, பாரம்பர்யமான வர்மப்புள்ளி வைத்தியத்தின் சிறப்புகள் குறித்த தகவல் அறிதலுக்காக மட்டுமே. இந்த சிகிச்சை முறைகளைத் தகுந்த குருவின் மூலமே கற்கவேண்டும்.

சிகிச்சை முறைகள் உங்களுக்கு ஏற்றவையா என்பதை உறுதி செய்த பிறகே எடுத்துக்கொள்ள வேண்டும்.

முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு:

73974 30999; 97909 90404