?விதவிதமான வேடங்களில் நடித்துவிட்டார் வடிவேலு. ‘இன்னும் இந்த கேரக்டர்ல நடிக்கலையே’ என்று நீங்கள் ஃபீல் பண்ணும் கேரக்டர் எது?
விமானியாக நடிக்கவில்லையே என்ற ஏக்கம் எனக்குண்டு.
இந்திரா விஜி
கல்லூரிப் பேராசிரியர் வடிவேலு.
விஜயலக்ஷ்மி, மதுரை
ரயில் டி.டி.ஆர்
அ.ரியாஸ்
இதுவரை ஃபேன்டசி படங்களில் வடிவேலு நடிக்கவில்லை. அப்படி நடித்தார் என்றால் கற்பனைக்கு எட்டாத காமெடிகள் உறுதி.
நா.இரவீந்திரன்
யானைப்பாகன்
Borejerry
ET ஆங்கிலப்படத்தில் வரும் ஏலியனாக
பொம்மையா முருகன்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஸ்விக்கி / ஸோமேட்டோ டெலிவரி பாய்.
Jerry Darvey
‘பேசும்படம்’ மாதிரி வசனமே பேசாமல், தனது பாடி லாங்வேஜ் மூலம் கலகலக்க வைக்கிற மாதிரி ஒரு கேரக்டர்..!
Laks Veni
செல்லூர் ராஜு வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்தால் அவர் வேடத்தில் வடிவேலு பொருத்தமாக இருப்பார்.
Thiru Murugan
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS? உங்களால் ஒரு தீவை விலைக்கு வாங்க முடியும் என்றால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள்?
அந்தத் தீவைச் சொத்தாகக் காட்டி வங்கியில் லோன் வாங்கி, இன்னும் பத்துத் தீவு வாங்கிப் போட்டுட்டு, கடன் கட்டாம வெளிநாடு போய்டுவேன்.
Kavi Prasath
இந்தத் தெரு என்ன விலைன்னு கேளு
இந்த ஊரு என்ன விலைன்னு கேளு
`ஐயோ இப்ப நா ஏதாவது வாங்கி ஆகணுமேடா'ன்னு கவுண்டமணி சொல்வாருல்ல, அந்த மனநிலைக்குப் போயிருவேன்.
அருள் மொழி வர்மன்
தீவுக்கு `மினி இந்தியா' என்று பெயர் வைத்து ``புதிய இந்தியா பிறந்துவிட்டது’’ என்று பிரகடனம் செய்வேன்.
Vignesh
ரிசார்ட்டா மாத்தி எம்.எல்.ஏ-க்களுக்கு வாடகைக்கு விடுவேன்.
செளதனிஷ்
தீவை பிளாட் போட்டு `இந்தியாவுக்கு மிக அருகில்'னு விற்பேன்.
திருமயம் பெ.பாண்டியன்
நல்ல விலைக்கு ஏதாவது சாமியார்கிட்ட விக்க வேண்டியதுதான்.
பா. பிரபாகரன்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
? எடப்பாடி முதல்வரானது, ரஜினி அரசியலுக்கு வருவதெல்லாம் இருக்கட்டும். எது நடந்தால், ‘ஆச்சர்யம், அற்புதம்’ என்பீர்கள்?
மோடி சொன்னதுபோல எல்லோர் அக்கவுன்ட்டிலும் 15 லட்சம் போட்டால்...
ஜாபாலி
விராட் கோலி, ஆடுகளத்தில் எந்த ரியாக் ஷனும் காட்டாமல் அமைதியாக தோனி மாதிரி பிஹேவ் செய்தால்
பர்வீன் யூனுஸ்
பஞ்ச் டயலாக், ஹீரோயிசம் இல்லாத சினிமாக்களில் இன்றைய முன்னணி ஹீரோக்கள் நடிப்பது.
ரஹீம் கஸ்ஸாலி
‘ரஜினி-கமலைப் புறந்தள்ளி விஷால் முதல்வரானால் ஆச்சர்யம், அற்புதம்... வேறென்ன?!
S.சௌமியா, திருசெங்கோடு
சாதிமறுப்பு, சடங்குமறுப்புத் திருமணங்கள் இயல்பான நிலை என்றால் மிகவும் மகிழும் அற்புதமாகக் கொள்ளலாம்.
புகழ்

2020 புத்தாண்டு சபதங்களை பிப்ரவரி வரை கடைப்பிடித்தாலே அதிசயம்தான்.
என். உஷா தேவி, மதுரை
வைரமுத்து - இளையராஜா மீண்டும் இணைந்தால்.
பாலசுப்ரமணி
இயக்குநருக்கோ, தயாரிப்பாளருக்கோ எந்தவொரு இம்சையும் தராமல், முழு ஒத்துழைப்பு தந்து `மாநாடு' படத்தை சிம்பு முடித்துக்கொடுத்தால், அது அதிசயம்!
பாலா சரவணன், சென்னை
? உள்ளாட்சித் தேர்தல் பற்றி நாலுவரியில் நச்சுனு கவிதை சொல்லுங்க, பார்ப்போம்!
உள்ளாட்சி... உள்ளாட்சி...
என்னாச்சி..? என்னாச்சி..?
நாசமாப் போயாச்சி!
செ. செந்தில்குமார்
தேர்தலில் நிற்க முயற்சி செய்தால், அது சட்டமன்றத் தேர்தல்! தேர்தலை நிறுத்த முயற்சி செய்தால், அது உள்ளாட்சித் தேர்தல்!
Balu Marappan
தேர்தல் வரும் ஆனா வராது!
கூட்டணி அமையும் ஆனா அமையாது!
நல்லது நடக்கும் ஆனா நடக்காது!
வெற்றி கிட்டும் ஆனா வெளிச்சம் கிட்டாது!
பத்மபிரியா பாலகுரு
நடக்கும் என்பார் நடக்காது; நடக்காது என்பார் நடந்துவிடும்...
Huma
நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்தில் வராம 4 வருஷம் கழிச்சி கண்டிப்பா வருவேன் - உள்ளாட்சித் தேர்தல்
mohanram.ko
? இன்றைய அரசியல் தலைவர்கள் டி.வி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க வந்தால், யார் எந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கலாம்?
தி வால் - ஓ.பி. ரவீந்திரநாத்குமார் எம்.பி.
வி.சி. கிருஷ்ணரத்னம், சென்னை
அரசியல் அந்தாக்ஷரி - மு. க .ஸ்டாலின் - அமைச்சர் ஜெயக்குமார் இருவரும் மாறி மாறி எதிர்த்து, மன்னிக்கவும், தொகுத்து வழங்குவார்கள்.
எம்.விக்னேஷ், மதுரை
‘லக் டு இலக்கு வரை' - எடப்பாடி பழனிசாமி
பெ.பச்சையப்பன், கம்பம்
விவாத மேடை : அன்புமணி ராமதாஸ்
நா.இரவீந்திரன், திருப்பூர்
விஞ்ஞான உலகம் - எஸ்.வி.சேகர் & செல்லூர் ராஜு.
Karthik M Somasundaram
கதை கதையாம் காரணமாம் - சீமான்
சுனா.பானா
அமைச்சர் ஜெயக்குமார் - சூப்பர் சிங்கர்
அஜித், சென்னை
அமித்ஷா - பிக்பாஸ்
எம்.சேவியர் பால், கோவை
மருத்துவர் ராமதாஸ்: நீயா-நானா? (அந்தப் பக்கம் இந்தப் பக்கம்னு மாறி மாறி நிப்பாரு)
மகா, திருப்பூர்
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? 2020ல் மோடி என்னென்ன 'புதிய இந்தியா'க்களை உருவாக்குவார் என்று நினைக்கிறீர்கள்?
? ரஜினிக்குப் பிடித்தமான முறையில் போராட சில ஐடியாக்கள் ப்ளீஸ்...
? உங்கள் சின்ன வயது ரஃப் நோட்டில் பாடம் தவிர்த்து என்னவெல்லாம் கிறுக்கிவைத்திருப்பீர்கள்?
? ஆதாமையும் ஏவாளையும் நேரில் சந்தித்தால் இருவரிடமும் என்ன கேட்பீர்கள்?
? ஒரு பழைய படத்தை ரீமேக் செய்து, எடப்பாடியையும் பன்னீர்செல்வத்தையும் நடிக்கவைக்கலாம் என்றால் எந்தப் படத்தை ரீமேக்கலாம்?
உங்கள் பதில்களை
அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. ஈமெயிலில் அனுப்ப
vasagarmedai@vikatan.com