Published:Updated:

வாசகர் மேடை! - “ஹலோ எடப்பாடி பழனிசாமிங்களா...”

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

வலிமை அப்டேட் விடச் சொல்லி அஜித்குமாருக்கும் போனி கபூருக்கும் அழுத்தம் கொடுக்கச் சொல்லலாம்.

வாசகர் மேடை! - “ஹலோ எடப்பாடி பழனிசாமிங்களா...”

வலிமை அப்டேட் விடச் சொல்லி அஜித்குமாருக்கும் போனி கபூருக்கும் அழுத்தம் கொடுக்கச் சொல்லலாம்.

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

? ‘போன் செய்தால் மக்களின் குறை தீர்க்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. என்ன குறையை போன் செய்து சொல்லலாம்?

குட்காவை ஒளிச்சிட்டீங்க... எப்போ ஒழிப்பீங்க..?!

LAKSHMANAN_KL

ஒரு கூடை சேலத்து மாம்பழம் அனுப்புவீங்களா?

ஆ. மாடக்கண்ணு பாப்பான்குளம்

வெற்றிநடை போடும் தமிழகத்துக்குக் கால் ஒடஞ்சா எந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணணும்?

iam_nithankrish

வலிமை அப்டேட் விடச் சொல்லி அஜித்குமாருக்கும் போனி கபூருக்கும் அழுத்தம் கொடுக்கச் சொல்லலாம்.

saravankavi

வாசகர் மேடை! -  “ஹலோ எடப்பாடி பழனிசாமிங்களா...”

பிரபலங்கள் வீட்டுக்கு மட்டுமல்லாமல், சாமானியன் வீட்டுக்கும் பால் பாக்கெட் கெட்டுப்போனால் மாற்றிக்கொடுக்கலாம்.

RahimGazzali

ஊருக்குக் கிளம்பலாம்னு பார்த்தால், இந்த டோல்கேட் கட்டணத்தை நினைத்தாலே பயமா இருக்கு. கொஞ்சம் கருணை காட்டுங்களேன்!

poonasimedhavi

புத்தகக் கடைகள் அனைத்திலும் தேடிட்டேன். அந்த சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் கிடைக்கவேயில்லைங்க.

SeSenthilkumar

கருணாநிதி ஆட்சிக்காலத்தில் இருந்தது போல அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைப் பராமரிக்க வேண்டும்.

balasubramni1

‘பேப்பர் ரோஸ்ட் ரோடு மாதிரி போடாமல் நல்லா கல்தோசை மாதிரி ரோடு போடுங்க சார்’ என்பேன்.

kangeyan50

? தேர்தலின்போது உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று சொல்லுங்களேன்...

முதல் முறையா ஓட்டுப்போட கப்போர்டினுள் குனிந்து ஓட்டு போட்டபோது ஏதோ தலைவலிக்கு ஆவி பிடித்து நிமிர்வதுபோல் இருந்தது.

manipmp

முதன்முதலாக வாக்களிக்கச் சென்றபோது எனது வாக்கு ஏற்கெனவே செலுத்தப்பட்டிருந்தது. என் அப்பா பூத் ஆபீசருடன் சண்டைபோட்டு சேலஞ்ச் ஓட்டாக என் வாக்கைப் பதிவு செய்ய வைத்த நிகழ்ச்சி, ஒவ்வொரு தேர்தலிலும் நான் வாக்களிக்கச் செல்லும்போது என் நினைவுக்கு வரும்.

pachaiperumal23

கட்சி சார்பாக வாக்காளர் பட்டியல் சரி பார்க்க வந்தவர், எங்க வீட்டில் ‘ஓட்டுக்குப் பணம் வாங்குவதில்லை’ என்று எழுதியிருந்ததைப் பார்த்து, `அண்ணே, இந்த வீட்டுல ஒண்ணும் தேறாது' என்றபடி சென்றது நினைவில் உள்ளது.

vrsuba

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது 96-ல் நடந்த தேர்தலில் பிரசார வேன்/ ஆட்டோக்களில் மைக்கில் பேசுவதற்கு தினமும் ரூ. 200 சம்பளம் வாங்கிக்கொண்டு சென்றேன். வாழ்க்கையில் சம்பாதித்த முதல் தருணம் அது.

IamUzhavan

எந்த பூத்னு தெரியாம வேறு பூத் வரிசையில் மணிக்கணக்கில் நின்னு பன்னு வாங்கினது.

manipmp

போன சட்டமன்றத் தேர்தலில் என் முதல் ஓட்டு. ரொம்ப ஆர்வம். நான் படிச்ச ஸ்கூல்ல தான் பூத். ‘என் ஓட்டுதான் முதல்’னு அவசரமா கிளம்பிப் போனா வெளில நின்ன போலீஸ் ‘பாப்பா, இன்னைக்கு தேர்தல். ஸ்கூல்லாம் கிடையாது. வீட்டுக்குப் போ! உள்ள விட மாட்டோம்’னு சொல்ல, மொத்தக் குடும்பமும் சிரிச்சிட்டு.

imkayalsai

பஞ்சாயத்து போர்டு தேர்தலில் நான் போட்டியிட்டபோது வாக்குச்சீட்டில் என் பெயரைப் பார்த்துப் பரவசமடைந்தது.

RahimGazzali

நான் ஓட்டு போட்ட வேட்பாளர் இதுவரை வெற்றிபெற்றதே இல்லை... ஆவ்!

pesumpadam123

முதல்முறையாக வாக்களிக்கச் சென்றபோது எந்த விரலில் மை வைப்பார்கள் என்று தெரியாமல் ஐந்து விரல்களையும் நீட்டினேன். மை வைக்கும் மேடம் ஒரு லுக்கு விட்டாங்க.

bharath_selva10

1962 தேர்தல் பிரசாரத்திற்காக அறிஞர் அண்ணா குமாரபாளையம் சந்தைத் திடலில் பேசியபோது, பெரும் கூட்டத்தினிடையே அவரிடம் ஆட்டோகிராப் வாங்கியது சுவையான நிகழ்ச்சி.

RavindranKanna

முதல்முறை வாக்களித்தபோது வாக்கு மையத்தில் செல்பி எடுத்தபோது அங்கிருந்த காவலர் ஒருவர் என் செல்போனைப் பறித்துக் கொண்டுவிட்டார். அதன்பிறகு கெஞ்சிக் கூத்தாடி போனை வாங்கினேன்.

chennappan10

? கமல், ஸ்ருதி, அக்‌ஷரா மூவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

தமிழில் எழுதிய ஹிந்திக் கவிதைகள்

pachaiperumal23

அவ்வை சண்முகியும் அக்‌ஷரா ஸ்ருதியும்

Kirachand4

வாசகர் மேடை! -  “ஹலோ எடப்பாடி பழனிசாமிங்களா...”

கமல்ஹாசன் என்று எழுதி அதில் ‘சன்’ என்பதை அடித்துவிட்டு `கமல்ஹா டாட்டர்ஸ்'னு வைக்கலாம்!

SeSenthilkumar/

பியார் பிரேமா ஹாசன்

RajaAnvar_Twits

என்னுள் மையம் கொண்ட தென்றல்கள்

SowThanishka

காதல் பரிசு இரண்டு!

LAKSHMANAN_KL

ஆண்டவர் வம்சம்

Anandh_Offl

? காதல், நட்பு, தாய்ப்பாசம் - மூன்றுக்கும் உள்ள வித்தியாசங்களை சுவையான உதாரணங்களுடன் விளக்குங்கள்.

காதல்: மரோ சரித்திரா

நட்பு: ஷோலே

தாய்ப்பாசம்: எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

LAKSHMANAN_KL

காதல் - ரீசார்ஜ், நட்பு - நெட்வொர்க்,தாய்ப்பாசம் - சிம்கார்டு.

saravankavi

வாசகர் மேடை! -  “ஹலோ எடப்பாடி பழனிசாமிங்களா...”

காதல், நட்பு, தாய்ப்பாசம் மூன்றுமே overrated. Dot

roadoram

காதல்: குளோப் ஜாமூன், நட்பு: ஜிலேபி,தாய்ப்பாசம்: சர்க்கரைக் கட்டி. மூன்றும் தித்திக்கும் இனிப்புதான். ஆனால் ஃப்ளேவர் வேற!(சுவையான உதாரணம்தான கேட்டீங்க!)

RamuvelK

காதல் - ஹோட்டல் சாப்பாடு, நட்பு - கையேந்தி பவன், தாய்ப்பாசம் - வீட்டுச் சாப்பாடு.

h_umarfarook

காதல்: ஹார்மோன் கொடுக்கும் வரம், நட்பு: பள்ளி கொடுக்கும் வரம், தாய்ப் பாசம்: இறைவன் கொடுக்கும் வரம்.

balebalu

தனிநிலை (ஆய்த எழுத்து) மனிதனுக்குகாதல்: உயிர், நட்பு: மெய், தாய்ப்பாசம்: உயிர்மெய் என்றிவை உயிருக்கு நேர்!

gmuruganandi

வாசகர் மேடை! -  “ஹலோ எடப்பாடி பழனிசாமிங்களா...”

? வாசகர் கேள்வி : `கிடைக்கிறது கிடைக்காம இருக்காது; கிடைக்காம இருக்குறது கிடைக்காது’ டைப்பில் இரு வரி ஜாலி பஞ்ச் சொல்லுங்கள்.

ரியாஸ் அகமது

செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய நேரத்தில் செஞ்சு முடிக்கலைன்னா, டென்ஷன் நம்மளை வெச்சு செஞ்சிடும்..!

LAKSHMANAN_KL

நம்மள நாலு பேர்க்குப் பிடிக்காம இருந்தா, அந்த நாலு பேர்க்கும் பிடிக்காதவங்க நாலுபேர் இருப்பாங்க... நமக்கு நாலு பேர பிடிக்காம இருந்தா, அந்த நாலு பேர்க்கும் பிடிச்சவங்க நாலு பேர் இருப்பாங்க...

ranjanikovai

வாசகர் மேடையில வரலைங்கிறதுக்காக பதில் எழுதாம இருக்க முடியாது.பதில் எழுதிட்டோம்ங்கிறத்துக்காக வரணும்னு எதிர்பார்க்கமுடியாது.

poonasimedhavi

‘கா... கா...’ன்னு கத்திட்டுத் தூக்குற காக்கா இல்லடா; பொத்திக்கிட்டு நேக்காத் தூக்குற கழுகு.

HariprabuGuru

அரிக்காத எடத்துல சொரியக்கூடாது... செரிக்காத வயித்துல தின்னக்கூடாது!

AchariyaLenin

வாசகர் மேடை! -  “ஹலோ எடப்பாடி பழனிசாமிங்களா...”

? ஆளாளுக்கு சசிகலாவை சந்திக்கிறார்களே, சசிகலாவை மோடி சந்தித்தால் என்ன பேசுவார்?

? நீங்கள் தேர்தல் ஆணையரானால் புதிதாக என்ன சீர்திருத்தம் கொண்டுவருவீர்கள்?

? காலையில் நிலாவும் இரவில் சூரியனும் உதித்தால் எப்படியிருக்கும்?

? வாசகர் கேள்வி : பா.ஜ.க-வுக்குத் தாமரை. இதுபோல மத்த கட்சிகள் மலரைத் தேர்வு செய்தால் எந்தெந்தக் கட்சிக்கு என்ன மலர்கள் பொருத்தமாக இருக்கும்?

- ராஜா அன்வர்

? ‘பாட்ஷா’ கேரக்டரும் ‘வேலு நாயக்கர்’ கேரக்டரும் சந்தித்துக்கொண்டால் என்ன பேசுவார்கள்?

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism