Published:Updated:

வாசகர் மேடை: எலுமிச்சம்பழனிசாமி!

விகடன் டீம்
கார்த்திகேயன் மேடி
பிரேம் டாவின்ஸி

அமைதிப்படை சத்யராஜ் கேரக்டர்ல கார்த்தி நடித்தால்...

பிரீமியம் ஸ்டோரி

? இந்த ஹீரோ இந்த கேரக்டரில் நடிச்சா நல்லாருக்கும் என்று நீங்கள் யோசிப்பது யாரை, எந்த கேரக்டர், ஏன்?

காதலிக்க நேரமில்லை

விஜய் - நயன்தாரா, ஜெய் - அஞ்சலி

வ.சந்திரா மாணிக்கம், மதுரை

செஸ் வீரராக மாதவன் நடிக்கலாம்.

எம்.சேவியர் பால், கோவை

ஆர்யா: `கௌபாய்’

S.கருணாகரன், சென்னை

பிரபுதேவா: ஜே.பி.சந்திரபாபு

சந்திரபாபுவின் உடல் மொழி அப்படியே பிரபுதேவா அவர்களுக்குப் பொருந்திப்போகும்.

பாலசுப்ரமணி

வசந்தமாளிகை சிவாஜி பாத்திரத்தில்... சிம்பு.

புகழ்

ஆண்பாவம் படத்தை ரீமேக் செய்தால் பாண்டியன் கேரக்டருக்கு சசிகுமாரையும், பாண்டியராஜன் கேரக்டருக்கு சிவகார்த்திகேயனையும் நடிக்க வைத்தால் படம் வசூலை அள்ளும்.

ஜீவகன் மகேந்திரன்

அந்த ஏழு நாட்கள் படத்தில் சிம்பு நடிக்கலாம். ஏழு நாள்கள்தான் என்று நினைத்துக்கொண்டாவது சூட்டிங் செல்வார்.

இதயவன்

அமைதிப்படை சத்யராஜ் கேரக்டர்ல கார்த்தி நடித்தால்...

ஸ்லாங், லொள்ளு எல்லாமே பக்கா ஃபிட்.

சப்பாணி

வாசகர் மேடை
வாசகர் மேடை

விஜய் : முதல்வன் 2 - சி எம் கேரக்டர்

இப்போ இருக்கிற அரசியல் சூழ்நிலைக்குப் பக்காவா செட் ஆகும்.

Ramuvel Kanthasamy

நித்யானந்தாவாக நடிகர் சதீஷ்.

G.M.ANANDI

விஸ்வாசம் - விஜயகாந்த் - அடிதடி, கோபம், குடும்பப்பாசம் செம பொருத்தமாக இருந்திருப்பார் 15 வருடத்திற்கு முன்பு.

pudukairavi

விக்ரம் வேள்பாரியாக நடிக்கலாம். இளம்பெண்களுக்குத் தந்தையாகவும் திடமான உடல் கொண்ட தலைவனாகவும் இருக்க முடியும்.

mikekannanshajan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

? எடப்பாடி ஆட்சியின் மூன்றாண்டுகள் - சிறுகுறிப்பு வரைக.

`படம் எப்போதுதான் முடியுமோ..!’ என்ற ஆவலோடு, மக்கள் கொட்டாவி விட்டபடி காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பெ.பச்சையப்பன் கம்பம்.

உடன்பிறப்புகள்: என்னது, மூன்றாண்டு முடிஞ்சிருச்சா?

பிரபு கிரிஷ்

பிரசாந்த் கிஷோருக்குத் தமிழகத்தில் வேலை இருப்பதாக ஸ்டாலினைக் கருத வைக்கும் அளவுக்கு ஓர் ஆட்சி.

வாசகர் மேடை
வாசகர் மேடை

வி.சி. கிருஷ்ணரத்னம்

என் பணி கடன்செய்து கிடப்பதே என்று வாழும் முதல்வர் கிடைத்திருப்பதே சாதனை தானே!

ஆம், தமிழக அரசின் கடனை நான்கரை லட்சம் கோடி ரூபாயாகக் கொண்டு வந்தது எம்மாம் பெரிய சாதனை!

இளையநிலா

வடக்கு வாழ்கிறது.

வடக்கு வாழவும் வைக்கிறது.

வடக்கு வாழவும் வைக்கும் என்று ஸ்டாலினையும் நம்ப வைத்தது.

செளதனிஷ்

இரட்டை இலையின் நடுவே ஒரு தாமரை மொட்டு.

பொம்மையா முருகன்

650 ஸ்பேர் பார்ட்ஸில் ஓடாமல் எலுமிச்சம்பழத்தில் ஓடிய மூன்றாண்டுகள்.

வெண்பா

வாசகர் மேடை
வாசகர் மேடை

வெளிமாநிலத்திற்குக்கூடச் செல்லாத மந்திரிகள் வெளிநாடுகளுக்குச் சென்று வந்த நிகழ்வு.

ஃBorejerry

புள்ளை பூச்சிகளுக்குக் கொடுக்கு முளைத்தது

இந்த மூன்றாண்டுகளில்தான்.

ரஹீம் கஸ்ஸாலி

பில்டிங் வீக், பேஸ்மென்ட் ஸ்டிராங்.

பா.ஜெயக்குமார், வந்தவாசி

? உங்களுக்குத் தமிழில் பிடிக்காத வார்த்தை எது, ஏன்?

`ரொம்ப நன்றிங்க’ எனச் சொல்லிவிட்டு அடுத்த நொடியே மறப்பது!

ச.முருகன், விழுப்புரம்

சம்பளம் எவ்வளவு

வெண்பா

உனக்கென்னப்பா, கை நிறையா சம்பாதிக்குறே.

கடுப்பேற்றும் வார்த்தை.

வீணா போனவன்

போனை நோண்டாத. இதைச் சொல்லுபவர்களெல்லாம் நம்மைவிட அதிகமாக போனை நோண்டுவாங்க என்பது முரண்.

புல்லாங்குழல் @காற்றின் மொழிபெயர்ப்பு

மர்மக்காய்ச்சல்! காய்ச்சல் மரணங்களுக்கான காரணங்களைக் கண்டுபிடிக்காமல், தப்பித்துக் கொள்ள அரசு பயன்படுத்தும் சொல்.

மயக்குநன்

“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க”ன்னு சொல்ல ஆரம்பிக்கிற எல்லாமே. ஏன்னா, சொல்ற எல்லாமே கடுப்பை வரவழைப்பதாகத் தான் இருக்கும்.

சித்ரா தேவி

? ரியாலிட்டி ஷோ நடுவர்களின் அட்ராசிட்டிகளில் உங்களை எரிச்சலூட்டுவது எது?

நிகழ்ச்சியைப் பிரபலப்படுத்த அழாத சில குழந்தைகளை பேசிப் பேசி அழ வைக்கும் அந்த குரூர மனப்பான்மை.

பிரபு கிரிஷ்

தேசிய கீதம் வாசித்த மாதிரி நொடிக்கொரு தரம் எழுந்து ஸ்டாண்டிங் ஓவேஷன் கொடுப்பது.

lalinama

சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜு என்ற நினைப்போடு காட்டும் முகபாவனைகள்.

Raja Navaneetham

எங்கும் வேலை கிடைக்கவில்லை என்று நடுவராக வந்து, போட்டியாளர்களை அட்வைஸ் என்ற பெயரில் கொல்லுவது.

vigneshmos

கன்டஸ்டன்ட் லைஃப்ல பத்து வருஷத்துக்கு முன்னாடி நடந்த சோகத்தை ஞாபகப்படுத்தி அழவெச்சு இவங்களும் அழறது.

கார்த்திகா

பாலா பட ஹீரோ மாதிரி இடையில் வந்து ஆடுவது.

வெண்பா

முதல் சீசன் வின்னர், அடுத்த சீசனிலேயே அசிஸ்டன்ட் கமிஷ்னராக (நடுவர்) புரொமோட் ஆகி அலம்பல் பண்ணுவாங்க!

பிரபு கிரிஷ்

சினிமா புரொமோஷனுக்கு வந்த விருந்தினர்களை படத்தைப் பற்றிக் கடைசி வரை பேச விடாமல் அவர்களைப் புகழ்ந்தே அனுப்பிவைப்பது!

MSR

நான்கு கோட்டிங் ஆயில் மேக்கப். கேமரா குளோஸில் போகும்போது நம்மை பயமுறுத்தும் வல்லமை கொண்டது.

Pachai Perumal.A.

சமயத்துல போட்டியாளர் யார்னு தெரியாத அளவுக்கு இவங்க பண்ற பர்ஃபாமன்சு இருக்கே..!

செ. செந்தில்குமார்

? டிக்டாக் பற்றி ஒரு ஜாலி கவிதை சொல்லுங்க!

என் கவலைக் குடிசையை

டிக் டாக் சுவர் கொண்டு

மறைத்துவிட்டேன்

குஜராத் அரசைப்போல

பாலசுப்ரமணி

“சும்மாதானே இருக்கோம்” என்று பண்ண ஆரம்பித்து, “சும்மாவே இருந்திருக்கலாம்” என்று புலம்பும் நிலைக்குத் தள்ளுவதே இந்த டிக்டாக்

Krishna Moorthy

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை
வாசகர் மேடை

? விஜய் படத்தை அஜித்தும் அஜித் படத்தை விஜய்யும் ரீமேக் செய்து நடிக்கலாம் என்றால் எந்தப் படங்களை இருவரும் தேர்ந்தெடுக்கலாம்?

? ஐ.பி.எல் விளையாட தோனி சென்னை வந்துவிட்டார். அவரை வரவேற்று ஒரு நச் ஸ்லோகன் சொல்லுங்கள்.

?வாட்ஸப்பில் உங்களுக்கு வந்த மரண ரோஃபல் ஃபார்வர்ட் ஒன்றைச் சொல்லுங்கள்.

? இந்திய அரசியல்வாதிகளில் ஒருவருக்கு நோபல் பரிசு தரலாம் என்றால் யாருக்குத் தரலாம், ஏன்?

? மொபைல் போனில் புதிதாக ஒரு ஆப்ஷனைச் சேர்க்கலாம் என்றால் நீங்கள் என்ன சேர்ப்பீர்கள்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

ஈமெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு