? 2030-ல் லவ் புரொபோஸல் எப்படியிருக்கும்?
எத்தனை வருடங்கள் ஆனாலும், லவ் ப்ரோபஸல் செய்யும் போது, நம்மை ஏற்றுக்கொள்வார்களா என்னும் தயக்கத்துடன் தயங்கித்தயங்கி தான் லவ் ப்ரோபஸல் நடக்கும்
கு.ராஜசுவாதி ப்ரியா சென்னை
அவன் :
அவள் :
அவ்ளோதான் !
ட்விட்டர் போராளி
உன் போனில் இருக்கும் மைண்ட் ரீடர் ஆப்பை ஓபன் செய்து, என் முகத்துக்கு நேரா பிடி. என்ன சொல்லுது... `ஐ லவ் யூ’னு சொல்லுதா... யெஸ். ஐ லவ் யூ.
RahimGazzali
Singles appல போய்ப் பார்த்து, செலக்ட் பண்ணிக்கலாம். ஓகே ஆகிட்டா அப்புறம்
Couples appக்கு டேட்டா மாறிடும்..
Ntramesh_kpm
ஆண்: ஹலோ...
பெண்: ம்... சொல்லுங்க.
ஆண்: உங்களுக்கு ‘அமேசான்ல இருந்து பார்சல் வந்ததா?
பெண்: ஆமா. ரெண்டு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வந்தன.
ஆண்: அதை நான்தான் அனுப்பினேன். ஐ லவ் யூ.
பெண்: இவளோ காஸ்ட்லியா புரொபோஸ் பண்றீங்க... ஆனா, நீங்க யார்னே தெரியாதே!
ஆண்: ஒரு வாரமா உங்களை எல்லா சோஷியல் மீடியாவுலயும் ஃபாலோ பண்றேங்க... எனது என்ஆர்சி கோட்: #009159895666.
இடம்: 32.65’ N 29.19’ E
பெண்: சரி யோசிச்சுட்டு ஈவ்னிங் ஸ்டேட்டஸ் போடறேன்..
மரு.டார்வின் சொக்கலிங்கம்
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS? விஜய் ஹீரோ - விஜய் சேதுபதி வில்லன். ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு டயலாக் சொல்லுங்க.
விஜய்: “நீ பற்ற வைத்த நெருப்பொன்று...”
விஜய் சேதுபதி: “ப்பா....”
vannamazhai
விஜய்: நா ஒரு முடிவு பண்ணிட்டேன்னா...என் பேச்சை நானே கேட்க மாட்டேன்!
விஜய் சேதுபதி: அப்புறம் ஏன் நாங்க மட்டும் கேட்கணும்?
sheriff.sheriff.5454
விஜய் சேதுபதி: நான் ஒரு கதை சொல்ட்டா சார்?
விஜய்: நான் ஒரு குட்டி கதை சொல்றேன்...
Veenaa_ponavan
விஜய் சேதுபதி: ஒரு கதை சொல்லட்டுமா சார்?
விஜய்: அட்லியைவெச்சு மூணு படம் பண்ணவன் நான். எனக்கே கதையா?
mohanramko
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
? ஒரு மாறுதலுக்கு தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கூட்டணி வைத்தால் என்ன நடக்கும்?
இந்த நிகழ்வுக்குப் பிறகும்கூட பாஜகவோ காங்கிரஸோ இங்கே ஒரு பலம்மிக்க கட்சியாக உருவாகாது.
புகழ்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போல கலைஞர் மக்கள் முன்னேற்ற கழகம், எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம், ஸ்டாலின் மக்கள் முன்னேற்றக் கழகம், எடப்பாடி பழனிசாமி மக்கள் முன்னேற்றக் கழகம் என்று பல கட்சிகள் உருவாகும்.
saravankavi
ராமதாஸ் ரியாக்ஷன்: `இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே...’
pbukrish
`மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் கலைஞர் அம்மா நாமம் வாழ்க’னு பட்ஜெட் உரையின் போது சொல்லுவாங்க.
urs_venbaa
கமலும் ரஜினியும் கூட்டணி அமைத்து எதிர்க் கட்சியினராக இருப்பார்கள்.
VijiKumaran1
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார்கள்..
madars_paiyan
இந்தக் கூட்டணி பிடிக்காமல் உண்மையான கலைஞர், ஜெயலலிதா விசுவாசிகள் கட்சியிலிருந்து வெளியேறி, தனித்தனியே ஒரு கட்சியைத் தொடங்குவார்கள்.
RahimGazzali
இந்தக் கூட்டணி அமைந்தால் கவர்னருக்கு பயந்த காலம் மாறி, கவர்னர் இவர்களுக்கு பயப்படும் நிலை வரலாம்.
jerry.darvey
அரசு இயந்திரத்துக்கு பெட்ரோல் போடுறதா, டீசல் போடுறதான்னு குழப்பம் நேரும்.
RedManoRed
கலைஞரும் ஜெயலலிதா அம்மாவும் உயிரோடு இருந்தபோது அண்ணன் தங்கைபோலப் பழகியதாகப் பேட்டி கொடுப்பார்கள். அவ்வ்வ்!
Isaipuyalfan
? மொபைல்போன் - சிறு குறிப்பு வரைக!
செல்லுன்னாலே உயிருக்கு அடிப்படைதானே...
SowmyRed
மனிதப் பொய்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவியது. உதாரணமாக, `பேட்டரி சார்ஜ் இல்லை’, `பேச பேலன்ஸ் இல்லை’, `சிக்னல் கிடைக்கவில்லை’, இன்னும் பல...
இளங்கோவன்
ஒரு நாள் முழுக்கக் கால் கடுக்க நடந்து சென்று பேசிய நிலைமையை மாற்றி, ஒரு ‘கால்’ செய்து நாள் முழுக்கப் பேசும் வல்லமையை உருவாக்கியது!
நா.இரவீந்திரன், வாவிபாளையம்.
‘இன்னைக்கு யார் முகத்தில் விழித்தேன்?’ என்ற சொல்வழக்கை அறவே ஒழித்த அற்புத சாதனம்!
SeSenthilkumar
தனிக்குடித்தனத்திலும் ஒரு தனிக்குடித்தனம் நடத்த உதவுவது மொபைல்போன்களே.
புல்லாங்குழல் @காற்றின் மொழிபெயர்
அகிலத்தையே தன்னுள் அடக்கிய ஆறாம் விரல். அஃறிணைப் பொருளாக அறியப்பட வேண்டிய ஒன்று. மாறாக உயர்திணையாக உலகில் மதிக்கப்படுகிறது.
nalavirumbi
நேரத்தை விரயம் செய்வோருக்கு தனக்குள்ளும் ஒரு கடிகாரம் இருப்பதைக் காட்டிக்கொண்டுதான் இருக்கிறது செல்போன்.
ravikumar.krishnasamy
நட்பு, உறவு முதலியவற்றை நம்மிடமிருந்து பிரித்துவிட்ட, நாம ஹீரோவா நினைச்சுக்கிட்டு இருக்கிற நவீன வில்லன்!
vc.krishnarathnam
தொலைதூரத்தில் இருப்ப வரையும்
வீடியோ காலில் நெருங்க வைக்கும்.
அருகிலிருப்பவரையும் பேசச் செய்யாமல்
தொலைதூரத்துக்கு தள்ளி வைக்கும்.
PG911_twitz
ஆணவத்தால் அழிந்தவர் களைவிட, ஆண்ட்ராய்டால் அழிந்தவர்கள் இங்கு அதிகம்.
amuduarattai
? ஒரு பழைய கிரிக்கெட் வீரர் இப்போதைய இந்திய டீமில் விளையாடலாம் என்றால் யார் உங்கள் சாய்ஸ், ஏன்?
ராகுல் டிராவிட் - தாக்குப் பிடித்து நின்று ஆடுவார்.
பெ.பச்சையப்பான், கம்பம்
யுவராஜ் சிங். யுவிக்கு அப்புறம் இன்னிக்குவரை இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்னைதான். ஸோ, பிரச்சனை தீரணும்னா பழைய யுவி என் சாய்ஸ்.
Iam_SuMu
தமிழில் கமென்ட்ரி செய்யும் அனைத்து வீரர்களையும் மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும். தமிழை இவர்களிடமிருந்து காப்பாற்ற வேறு வழியில்லை!
balasubramni1

கபில் தேவ்... இந்திய கிரிக்கெட்டை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றவர். அவருக்கு உரிய மரியாதையை வாரியம் அளிக்கவில்லை என்று ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு வருத்தம் உண்டு.
vaira.bala.12
சவுரவ் கங்குலி . ஸ்டைலான பேட்டிங், அசத்தலான ஆட்டம் என்று சுவாரஸ்யம் கூட்டும் நல்ல ப்ளேயர்.
ashokan.ahan
அணில் கும்ளே:டாப் ஆர்டர் மிடில் ஆர்டர் கேஎல் ராகுல் வருகைக்கு பின் நலம்.வேகப்பந்து துறை எப்போதும் இல்லாத அளவு சரியாக உள்ளது.சகள் மற்றும் குல்தீப் தான் அடிக்கடி அடி வாங்குகிறார்கள்,இப்போதைக்கு கும்ப்ளே தான் சரியான சாய்ஸ் (அப்டியே டீம்க்கு உள்ளேயே ஒரு எக்ஸ்ட்ரா கோச்!)
Daarwinthehero
சஞ்சய் மஞ்ச்ரேக்கர்:
கமென்ட்ரிங்கிற பேர்ல் ப்ளேயர்கிட்ட வம்பிழுக்கிறதே அவருக்கு வேலையாப் போச்சு. அதனால மறுபடியும் அவர கிரவுண்ட்ல இறக்கி விட்டு, மீம்ஸ் போட்டு கலாய்க்கனும்
RamuvelK
இர்பான் பதான்...ஏன்னா இவர் திறமைய இந்திய அணி நிர்வாகம் சரிவர பயன்படுத்திக்க தவறிட்டாங்க,நல்ல ஸ்விங்&பேஸ் பெளலர்,பேட்டிங்கிலும் சிறப்பா ஆடுவார்
pbukrish
அசாருதீன்- ஒரு சின்ன ஃப்ளிக் மூலம் பவுண்டரி அடிக்கும் அந்த அழகுக்காக..!
மயக்குநன்
கெளதம் கம்பீர்...!!!
பிஜேபி ஆளுங்கறதால போற பக்கமெல்லாம் எப்படியாச்சம் மோடி சப்போர்ட்ல ஜெயிக்கவச்சிடுவார்.
ரமேஷ்.ஏ
வீரேந்தர் சேவாக் - சேவாக்-ரோகித் சர்மா ஓப்பனிங் ஜோடி அதிரடி சரவெடி
M_SR04
முகம்மது கைப் ரன்னிங் பதில் ஸ்விம்மிங்ல தான் ரன் எடுப்பார். நல்ல ஃபில்டரும் கூட
M__karthika
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? எல்லோரும் மொபைலில் மூழ்கிக்கொண்டிருக்கும் காலத்தில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்த என்ன செய்யலாம்?
? ஒரு பழைய படத்திலிருந்து ஜாலியான குறியீடு ஒன்றைக் கண்டுபிடித்துச் சொல்லவும்.
? ஆதாம் ஏவாளுக்குக் கிடைத்த ஆப்பிள் உங்களுக்குக் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
? தனுஷை வைத்து மட்டுமே படங்கள் இயக்கும் வெற்றிமாறன், சிம்புவை வைத்துப் படம் இயக்கினால் என்ன டைட்டில் வைப்பார்?
? கட்சித் தலைவர்களுக்கெல்லாம் அடைமொழிகள் இருக்கின்றன. கட்சிகளே இப்போது கார்ப்பரேட் கம்பெனிகளை நம்பியிருக்கும் நிலையில் ‘அரசியல் ஆலோசகர்’களுக்கு என்ன அடைமொழி கொடுக்கலாம்?
உங்கள் பதில்களை
அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை,
ஆனந்த விகடன்,757, அண்ணா சாலை, சென்னை 600 002.
ஈமெயிலில் அனுப்ப
vasagarmedai@vikatan.com