? மிச்சமிருக்கும் க்வாரன்டீன் நாள்களை இவர் வீட்டில் கழிக்கலாம் என்றால், எந்தப் பிரபலத்தின் வீட்டுக்குச் செல்ல விரும்புவீர்கள், ஏன்?

எஸ்.வி.சேகர் அங்கிள் வீட்டுக்குப் போயிட்டு பால்பாத்திரம்லாம் எப்டியிருக்குன்னு மதிப்பீடு செய்யப்போறேன்!

ananthi.ramakrishnan.1

அஜித்-ஷாலினி தம்பதியர் வீட்டுக்கு. அவர்களின் made for each other வாழ்க்கையை உணர்ந்து, உள்வாங்கி, என் வாழ்விலும் நடைமுறைப்படுத்த.

ஏ.முருகேஸ்வரி, தென்காசி

நான் மோடியின் வீட்டில் தங்க விரும்புகிறேன், ஏனெனில் அவர்தான் வேலையே செய்யாமல் பேசிக்கிட்டே, கதை சொல்லிக் கொண்டு இருப்பார்... நேரம் போவதே தெரியாது.

ganesh.d.babu

மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு - நானும் பழமொழி சொல்லுறதுல வீக்கு... தலைவரும் வீக்கு... ரெண்டு பேரும் பழமொழிகளை மனப்பாடம் பண்ணி மாத்தி, மாத்தி சொல்லிப் பார்த்தா, டிரெயினிங் எடுத்த மாதிரியும் இருக்கும், நல்லா நேரமும் போகும்..!

laks veni

வலைதளம் என்றாலும் ரசிகர்களின் உணர்வுகளைப் புரிந்து பதிலளிக்கும், மதிப்பிற்குரிய இயக்குநர் சேரன் சார் அவர்களின் வீட்டிற்குச் செல்ல ஆசை. அவரின் எண்ணங்கள், திரைப்பட அனுபவங்களைக் கேட்க ஆவல்.

p_jegatha

கேட்டுக்குள்ளேயே இருந்து செய்தியாளர் களிடம் பேசுவதைக் கேட்டுக்கிட்டே இருக்க ரஜினிகாந்த் வீட்டு கேட்டுக்கிட்டேயே இருக்கணும்னு ஆசை...

செளதனிஷ்

கவுண்டமணி, சினிமாவில் வராத காமெடிகளைக் கேட்டு ரசிக்க வேண்டும். அதாவது, சென்சார் இல்லாத காமெடிகள்!

நா இரவீந்திரன்

‘ஈ’ படத்தில் வைரஸ் பற்றியும் பயோ வார் பற்றியும் உரக்கப் பேசிய எஸ்.பி.ஜனநாதன் அவர்கள் வீட்டில் க்வாரன்டீன் நாள்களைக் கழிக்கலாம்.

ஜீவகன் மகேந்திரன்

ராஜா அட்மின் வீட்டிற்கு : எப்படி டிவிட்டர் பதிவு போட்டு தலைவரை மாட்டிவிடுவது எனப் பயிற்சி எடுக்க.

vigneshmos

அமெரிக்க அதிபர் டிரம்ப்... கிருமிநாசினியை உடம்புக்குள் செலுத்தி கொரோனாவை குணப்படுத்தலாம் என்பது போன்ற தரமான காமெடிகளை ரசிக்கலாமே.

துயிலன்

? “டெக்னாலஜி எவ்வளவு முன்னேறினாலும் போன்ல இன்னும் இந்த வசதி வரலையேப்பா” என நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம்?

நமக்குப் பிடித்த குரலைப் பதிவுசெய்து கொண்டு, பொழுது போகலைனா, அந்தக் குரலோடு உரையாடுவது போல ஒரு டெக்னாலஜி.

ravikumar.krishnasamy

டேட்டாவை சேமித்து வைத்துப் பயன்படுத்தும் முறை. பவர் பேங்க் போல.

எனக்கொரு டவுட்டு

வாட்ஸப்ல எதிர்ல இருப்பவர் என்ன டெலிட் செய்தாங்கனு கண்டுபிடிக்கிற வசதி.

வெண்பா

சார்ஜ் இல்லாவிட்டாலும் மொபைலைக் கண்டுபிடிக்க வசதியாக ரிங் ஒலிக்கும் வசதி.

shailu

கடுப்பேத்தற ஃபார்வேர்ட் மெசேஜ் உருவாங்குனவங்க யாருன்னு பாக்கற வசதி... திரும்ப திரும்ப வெட்டி வெட்டியா சுத்தி வருது.

மகாநதி

கோபத்தில் போனைத் தூக்கி வீசினாலும் உடையாத வடிவமைப்பில் உற்பத்திசெய்து வெளியிடவேண்டும்.

Jerry.D.Darvey

? ஊரடங்கு முடிந்ததும் முதலில் நீங்கள் செல்ல விரும்பும் இடம் எது? ஏன்?

முனியாண்டி விலாஸுக்கு! புரோட்டா சாப்பிடத்தான். எனக்கும் பசிக்குமுல்ல!

பிரபு கிரிஷ்

இவ்வளவு நாளா ஓடாம ஒரே இடத்தில் நிறுத்தி வச்சிருக்கிற ஸ்கூட்டியை ரிப்பேர் சரி செய்ய மெக்கானிக் கடைக்குப் போகணும்.

செளதனிஷ்

வீட்டை விட்டு வெளியே போகணும் டாட்...

ஊர்சுற்றி

ஆஸ்பத்திரிக்குச் செல்வேன். கொரோனாவிற்கு பயந்து எனது வழக்கமான நோய்க்கு கட்டாய விடுமுறையளித்திருந்ததால் பழையபடி ஜெனரல் செக்கப்பிற்குச் செல்வேன்.

ஃForjerry

முதல்ல புது டிரஸ் எடுக்க ஜவுளிக்கடைக்குத்தான் போகணும்! லாக் டௌன்ல எல்லா டிரஸ்ஸும் டைட் ஆகிடுச்சு!

H.Umar Farook

எங்கேயாவது போகணும்னுதான் தோணறது. ஆனா நேக்கு யாரைத் தெரியும்... எங்கே போவேன்...? பேசாம பிரியாணிக் கடை வரைக்கும் வேணும்னா போயிட்டு வந்துடலாம்!

சிவம்

கும்பகோணம் போகணும். வயதான அம்மாவைப் பார்க்க.

rajusundararajan

மொதல்ல பைக் எடுத்துட்டு 50 கிலோ மீட்டர் சும்மா ஊரைச் சுத்திட்டு வரணும், ஏதோ ஜெயில்ல இருக்கிற மாதிரியான உணர்வா இருக்கு.

நாகராஜ சோழன் MA. MLA

? மாஸ்க் மாட்டியபடி அனைத்துக்கட்சிக் கூட்டம் காணொலியில் நடந்தால் யார், என்ன பேசுவார்?

ராஜேந்திர பாலாஜி: எங்க டாடி மோடி இருக்கும்வரை கொரனோ நீ டெட்பாடி.

எனக்கொரு டவுட்டு

டி.ராஜேந்தர்: அன்னிக்கி, பர்கூர்ல ஜெயலலிதாவை எதிர்த்துத் தனி ஆளா போட்டி யிட்டபோது, நான்தான் மாஸ்.கொரோனா பாதிப்பு இருக்கக் கூடாதுன்னு இன்னிக்கி போட்டிருக்கிறேன் மாஸ்க்.

syedbuhari.vm

எடப்பாடியும் மோடிஜியும்

எ : ஜிஎஸ்டி நிலுவைத்தொகையைக் கொடுத்தா நல்லாருக்கும்.

ஜி : காசு வரட்டும்.

எ: இப்போதைக்கு பேங்க்ல இருந்து எடுத்துக் கொடுக்கலாமே.

ஜி: பேங்க்கே அபராதத்துலதான் ஓடுது.

Ramuvel Kanthasamy

வைகோ: ரோமானியப் பேரரசில் சீசருக்கு இழைக்கப்பட்ட துரோகம் போலவே இந்த மாஸ்க்கை நான் உணர்கிறேன்!

சிவம்

சரத்குமார் : நான் முதல்வர் கூறியதை வரவேற்கிறேன்.

எடப்பாடி : நான் இன்னும் பேசவே இல்லைங்க.

HariprabuGuru

? வொர்க் ஃப்ரம் ஹோம் - அலுவலகத்தில் வேலை. நச்சென ஒரு வித்தியாசம் சொல்லுங்கள்.

ஆபீஸுக்குப் போகும்போது அயன் பண்ண பேன்ட், சர்ட், கழுத்துல டை, தலைக்கு டை, கூலிங் கிளாஸ் கண்ணாடி, ஷூ சாக்ஸ், பாடி ஸ்பிரே இதெல்லாம் வேண்டும்.

ஒர்க் ஃப்ரம் ஹோம்ல ஒரேயொரு கைலி வேஷ்டி போதும்.

பாலசுப்ரமணி

ஒண்ணும் பெரிய வித்தியாசம் இல்ல, ரெண்டு பக்கமும் என் தலைலதான் வேலையைக் கட்டிடுறாங்க.

எனக்கொரு டவுட்டு

வீட்ல சும்மாதான இருக்கீங்கன்னு மனைவி நம்மள பார்த்துச் சொன்னா அது வொர்க் ஃப்ரம் ஹோம்!

வீட்ல சும்மாதான இருககேன்னு மனைவிய பார்த்து நாம சொன்னா அது அலுவகத்தில் வேலை!

வெ கார்த்திக்

ஆபீஸ்ல மேனேஜர் டார்ச்சர்

அந்த மேனேஜர்க்கே வீட்டுல டார்ச்சர்

இதயவன்

ஆபீஸுக்குப் போகும்போது, வீட்டுக்கு எப்படா போவோம்னு தோணும். இப்போ, எப்படா ஆபீஸ் போவோம்னு தோணுது.

mohanram.ko

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? பழைய படங்களைத்தான் ரீமேக் செய்ய வேண்டுமா? எம்.ஜி.ஆர் இன்றைய படங்களில் ஏதாவது ஒன்றில் நடிக்க வேண்டும் என்றால் எந்தப் படம் பொருத்தமாக இருக்கும்?

? கொரோனா பத்தி ஒரு நாலு வரி கானா எடுத்து விடுங்க, பார்ப்போம்.

? டாஸ்மாக், தியேட்டர் இல்லாமல்கூட தமிழர்கள் இருந்துவிட்டார்கள். வேறு எது இல்லாமல்போனால் நம் மக்கள் தாங்கவே மாட்டார்கள்?

? இன்டர்நெட் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் என்னென்ன நடந்திருக்கும்?

? ஒருநாள் முதல்வரைப்போல் நம் அரசியல் தலைவர்கள் ஒருநாள் நடிகரானால் என்ன செய்வார்கள்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை,

ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.