Published:Updated:

வாசகர் மேடை: “ஹலோ... நான் ஆதாம் பேசுறேன்!”

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

கருத்து வேறுபாடு கொண்ட கட்சித் தலைவர்களைச் சேர்த்து வைக்கலாம்

வாசகர் மேடை: “ஹலோ... நான் ஆதாம் பேசுறேன்!”

கருத்து வேறுபாடு கொண்ட கட்சித் தலைவர்களைச் சேர்த்து வைக்கலாம்

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

? தேர்தல் முடிந்து முடிவு வரும்வரை ஒரு மாதம் ரெஸ்ட். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, முருகன், கமல், சீமான் போன்றவர்கள் என்ன செய்யலாம்?

ஸ்டாலின்: அறிவாலய கவுன்ட் டவுனைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

எடப்பாடி: குறுவைச் சாகுபடிக்குத் தயாராகலாம்.

முருகன்: திரிசூல யாத்திரை போகலாம்.

கமல்: பிக்பாஸ் 5 நிகழ்ச்சி நடத்தலாம்.

சீமான்: கருத்து வேறுபாடு கொண்ட கட்சித் தலைவர்களைச் சேர்த்து வைக்கலாம்.

PG911_twitz

அந்தந்தத் தலைவர்கள், தங்களுடைய வேட்பாளர்களிலிருந்து வீரர்களைத் தேர்வு செய்து ஒரு கிரிக்கெட் அணி அமைக்கச் சொல்லலாம். ஐ.பி.எல் மாதிரி அட்டவணை போட்டு மேட்ச் நடத்தினால் தேர்தல் ரிசல்ட் வரும் வரை அவர்களுக்கும் மக்களுக்கும் நல்ல பொழுதுபோக்காய் இருக்கும்.

 எம்.கலையரசி, சேலம்.

எனது வேண்டுகோளை ஏற்று சின்னய்யாவை இந்த கும்பலோடு சேர்த்துக் குறிப்பிடாமல் விட்டதற்கு என் நன்றிகள்.

_ மருத்துவரய்யா

தைலாபுரம் P.O

விழுப்புரம் மாவட்டம்.

pachaiperumal23

ஸ்டாலின்: உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதல்வராக வருவதற்குப் பயிற்சி அளிக்கலாம்.

RajaAnvar_

சீமான் கதை சொல்ல, கமல் இயக்க, ஸ்டாலின் தயாரிக்க, முருகன் செட் போட, எடப்பாடியார் நடிக்க ‘புன்னகை மன்னன் -2’ படம் எடுக்கலாம்.

balasubramni1a

கமல்: முப்பது நாளில் மினி பிக் பாஸ் எடுக்கலாம்!

RavindranRasu

வாசகர் மேடை: “ஹலோ... நான் ஆதாம் பேசுறேன்!”

? இந்தத் தடவை சென்னை அணி ஐ.பி.எல் கோப்பை ஜெயிக்க சில ரகளை ஐடியாக்கள் ப்ளீஸ்!

சென்னை அணியின் `B’ டீமாக `அம்பயர்' செயல்பட்டால் கோப்பையை ஜெயிக்கலாம்!

sudarvizhie6

மொயின் அலி கிட்ட # வலிமை அப்டேட் கேக்காம இருந்தா, சென்னை அணி கோப்பை வெல்லும்.

UmeshKhanna20

நம்ம அரசியல்வாதிகளை சி.எஸ்.கே-விற்கான ஐ.பி.எல் பொறுப்பாளர்களாக நியமித்தால் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து ஜெயிக்க வைத்திடுவாங்க!

h_umarfarook

டெக்னிக்கலா பேட்ல சில மாற்றங்கள் செய்யலாம்! பாதி தூரம் ஓடிக்கொண்டிருக்கும் போது பேட்ல ஒரு பட்டனைத் தட்டினா பேட்ல இருக்கும் ஸ்பிரிங் மூலம் பேட் நீண்டு, இருந்த இடத்திலிருந்தே க்ரீஸைத் தொடலாம்!

 ஷர்ப்ராஜ், வேடசந்தூர்.

ஃபைனல் மேட்சுல ஜெயிக்கிற வரை, சென்னை அணிக்கு மட்டும், வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்துட்டே இருக்கணும்..!

LAKSHMANAN_KL

அந்த கப் செய்றவங்க அட்ரச வாங்கி வெச்சுக்கலாம்.

YAADHuMAAGE

தோனியின் ராசியான ஜெர்சி நம்பர் 7. அதே மாதிரி மற்ற வீரர்களுக்கும் 17,27,37 என்று 7-ல் முடியும்படி ஜெர்சி நம்பர் கொடுக்கலாம்.

balasubramni1

? ஆதாம், ஏவாள் கையில் மொபைல் போன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்?

வாசகர் மேடை: “ஹலோ... நான் ஆதாம் பேசுறேன்!”


ஆப்பிள் பறிக்கச் சென்ற நேரத்தில் சார்ஜரில் போனைப் போட்டு வைத்திருப்பார்கள்.

saravankavi

ஆதாம் ரெண்டாவது ஏவாளிடம் பேசுவார். ஏவாள் இன்னொரு ஆதாமுடன் பேசுவார்.

eromuthu9

Feeling Lonely-ன்னு ஸ்டேட்டஸ் போட்டிருப்பாங்க.

GrumpyPeriyavar5

சீமான் ``என் கையில் வைத்திருப்பது என் முன்னோர் ஆதாம், ஏவாள் பயன்படுத்திய அதே மொபைல்தான்’’ என்றிருப்பார்.

pbukrish

அதில் கடவுளைத் தவிர வேறு யாருடனும் பேச முடியுமா என்பதை ஆராய்ந்திருப்பார்கள்!

profile.F

தாம் கடித்த ஆப்பிள் தன் மொபைலில் இருப்பதைக் கண்டு வியந்திருப்பர்!

SeSenthilkumar0

கஸ்டமர் கேரான கடவுளுக்கு போன் பண்ணி இன்னைக்கு என்ன ஆஃபர் இருக்குன்னு கேட்டிருப்பாங்க.

balasubramni14

கூகுள் மேப் பார்த்து ஊர் சுத்திக்கிட்டிருப்பாங்க.

RajaAnvar_

கடவுள்கிட்ட Opinion Poll நடத்துவாங்க.

சாத்தான் கொடுத்த ஆப்பிளை

அ) சாப்பிடலாம்

ஆ) சாப்பிடக்கூடாது

இ) உங்கள் விருப்பம்

RamuvelK

நெட் கிடைக்காமல் சிக்னலுக்காக அலைந்து அலைந்து கைலாசா தீவுக்கே சென்றிருப்பார்கள்.

pachaiperumal233

? 2050-ல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் என்னவாக இருக்கும்?


இந்தா, போன எலக்‌ஷன்ல சொன்னது... வருஷத்தை மட்டும் மாத்திக்க!

saravankavi

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லட்சம் மதிப்புள்ள காரும், 40 லட்சம் மதிப்புள்ள ப்ளாட்டும் கொடுப்போம்.

PG911_

கொரோனா 132-வது அலை ஏற்பட்டால், அதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுப்போம்..!

LAKSHMANAN_KL

வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஊருக்கு ஒரு ரயில் இலவசமாக வழங்கப்படும்.

 அ.வேளாங்கண்ணி, வேலூர்

ஜீ கறுப்புப்பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் 15,00,00,000 வரவு வைக்கப்படும். (பணம் மீதியிருந்தால் மேலும் 5,00,00,000 வழங்கப்படும்.)

pbukrish9

தனியார் வங்கிகள், தொழிற்கூடங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் எல்லாம் அரசுடைமை ஆக்கப்படும். ‘வாழ்க்கை ஒரு வட்டம்டா’ என்று சிரிப்பார்கள் 2050 கிட்ஸ்.

Sundar140

வீட்டு உபயோகத்திற்கு தினசரி இருநூறு லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்.

pachaiperumal23

விருப்பப்பட்ட நேரமெல்லாம் விண்வெளிக்குச் சென்று வர வீட்டுக்கொரு விலையில்லா ராக்கெட் வழங்கப்படும்..!

LAKSHMANAN_KL

90s கிட்ஸ்களுக்கு நேரடியாகவே அறுபதாம் கல்யாணம் அரசு சார்பில் நடத்தி வைக்கப்படும்.

balasubramni15

அந்த நேரத்துல ஓட்டு போடவும் VEET (Voters Eligibility and Entrance Test) என்ற பெயரில் நுழைவுத் தேர்வு இருக்கும்.

balebalua

? அஜித் சயின்ஸ் பிக்‌ஷனில் நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்? ஒன்லைன் சொல்லுங்களேன்!


எண்ணெய் அறிந்தால்

ஐந்து சக்கரங்கள் கொண்ட பைக் ரேஸில் பூமியின் அடி ஆழத்திற்குச் சென்று எண்ணெய் கண்டுபிடிக்கும் ஹீரோ, செல்லும் வழியில் வில்லன்களை முறியடித்து வெற்றிபெறும் சாகசங்களே கதை.

SowThanishka

ஃபார்முலா ஒன்

ரேஸ் விபத்தில் காயமடைந்த ஹீரோ, தன்னைப்போலவே ஒரு ரோபோவை உருவாக்கி, ரோபோக்களுக்கான ஃபார்முலா ஒன் ரேஸில் வெற்றிபெற வைக்கிறார்.

RamuvelK

அடிச்சுத் தூக்கு

சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொள்ளும் கப்பல்களை `அலேக்'காகத் தூக்கும் கருவியை உருவாக்குவதுதான் கதை.

 பாலு இளங்கோ, வேலூர்.

படத்தின் டைட்டில் `அப்டேட்.’ இது அஜித் ரசிகர்களுக்கு மிக நெருக்கமான வார்த்தை.

அவரே அவரைச் செதுக்குவதுதான் கதை.

Vasanth920

`சிட்டிசன் சன்!'- உயிரோடு புதைக்கப்பட்ட அத்திப்பட்டி கிராம மனிதர்களை, அவர்களது எஞ்சிய ஜீன்களைக் கொண்டு குளோனிங் மூலம், அஜித்தின் மகனும் மரபியல் விஞ்ஞானியுமான ஜூனியர் அஜித் மீண்டும் உருவாக்குகிறார், இறந்துபோன தாத்தா-பாட்டியையும் சேர்த்து..!

LAKSHMANAN_KL7

வலிமைக்கே இன்னும் அப்டேட் வரல. அது முதலில் வரட்டும். அடுத்த அஜித் படத்துக்கு டைட்டிலும் ஒன்லைனும் சொல்றேன்.

RahimGazzali

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வாசகர் மேடை: “ஹலோ... நான் ஆதாம் பேசுறேன்!”

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? தமிழ்சினிமாவில் கார்ப்பரேட் கம்பெனிகள் பற்றிய கதைகள் போரடித்துவிட்டன. கார்ப்பரேட் நிறுவனங்களை வைத்து வித்தியாச ஒன்லைன் சொல்லுங்களேன்!

? இந்தத் தேர்தல் பிரசாரத்தில் நீங்கள் அதிகம் மிஸ் செய்தது எது?

? செலவே இல்லாமல் கோடை வெயிலை சமாளிக்க சில ரகளை ஐடியாக்கள் ப்ளீஸ்?

? கமல், விக்ரம், சூர்யா மூவரும் ஒரே படத்தில் நடிக்கிறார்கள் மூன்று வெவ்வேறு கெட்டப்களில்... என்னென்ன கெட்டப்கள் யார் யார் போடலாம்?

? எதிர்காலத்திற்கு டைம் ட்ராவல் செய்து அங்கிருந்து ஒரே ஒரு பொருளை எடுத்துக்கொண்டு திரும்ப நிகழ்காலத்திற்கு வந்துவிடலாமென்றால் உங்களின் சாய்ஸ் எந்தப் பொருள்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism