கட்டுரைகள்
Published:Updated:

வாசகர் மேடை: கைப்புள்ள முதல்வனே

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

சட்டசபையில் உள்ள தேவையில்லாத ஆணிகளைப் பிடுங்க உத்தரவிடுவார்!

? உண்மையிலேயே வடிவேலு தமிழக முதல்வர் ஆகிவிட்டால் என்ன நடக்கும்?

முத்துக்காளை, சிசர் மனோகர், கிரேன் மனோகர், கிங் காங், போண்டா மணி, சாரைப்பாம்பு மற்றும் கோவை சரளா போன்றோரை மந்திரியாக்கியிருப்பார்...

W.லூசி, தூத்துக்குடி

மீம்ஸுக்கு வேறு ஆள் தேடவேண்டியதுதான்!

parath.sarathi

டாக்டராக, வக்கீலாக, இன்ஜினீயராக, கான்ட்ராக்டராக, போலீஸாக, மாணவனாக நடித்த காரணத்தால் எல்லாத்துறை பற்றியும் தெரியும்! அதனால் நல்லாத்தான் இருக்கும் எடப்பாடியையே தாங்கிக்கிட்டோம். நேசமணியை நேசிக்க மாட்டோமா என்ன?

suwloYfhHuwsTn7

வாசகர் மேடை: கைப்புள்ள முதல்வனே

சட்டசபையில் உள்ள தேவையில்லாத ஆணிகளைப் பிடுங்க உத்தரவிடுவார்!

pbukrish

பத்துப் பேர் பாக்கெட்டுல வடிவேலு போட்டோ இருக்கும்!

urs_venbaa

கொரோனாவுக்கு ஒவ்வொரு மாநில எல்லையிலும் எழுதப்படும்: இந்தக் கோட்டைத் தாண்டி நீ வரக்கூடாது! நானும் வரமாட்டேன்!

KRavikumar39

பெட்ரோல் சிக்கனத்தை மேற்கோள்ள முதல்வர் கைப்பிள்ளையின் கட்டைவண்டியில்தான் தலைமைச்செயலகம் வருவார்.

pachaiperumal23

? நீங்கள் ஏப்ரல் 1 அன்று ஏமாந்ததில் மறக்க முடியாத சம்பவம்?

இன்னிக்கு உன்னை மாப்பிள்ளை பார்க்க வரப் போறாங்கன்னு சொல்லி ரெடியான பிறகு ஏமாற்றியது.

urs_venbaa

ஒரு ஏப்ரல் 1 அன்று வழமைபோல் பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும் பொழுது, என் பக்கத்தில் வாகனம் ஓட்டி வந்தவர் `சார், உங்க வீல் சுத்துது’ என்று சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டார்.நானும் திகைத்துப்போய் வண்டியை ஓரங்கட்டி, குனிந்து பார்த்த பிறகுதான் புரிந்தது!

nedumaranj

தாத்தா, பாட்டி வீட்டில் வளர்ந்து அம்மா, அப்பாவை மிஸ் பண்ணி கவலைகொண்டிருந்தபோது பள்ளியில் தோழி, ``உன் அம்மா, அப்பா வந்திருக்காங்க”ன்னு சொல்லி ஏமாற்றியதும் வெடித்து அழுத ஒரு ஏப்ரல் 1.

p_jegatha

தியேட்டரில் இருக்கறப்போ ஃபோன்...

“தம்பி... நா எஸ்.ஐ பேசறேன்...’’

“எ..எ..என்னங்க..!’’

“கொஞ்சம் ஸ்டேசன் வரமுடியுமா. உங்கமேல ஒரு கம்ளையிண்டு. நீங்க வறீங்களா... நாங்க வரட்டுமா?’’

அதுக்கப்பறம் படம் முடியறவரை ஸ்கிரீன் ஓடினது எதுவுமே தெரியல.

அப்பறம் தெரிஞ்சது சொந்தக்காரரோட ஏப்ரல் ஃபூல்னு

SENTHIL_WIN

2019 April - 1, திங்கட்கிழமை. அலுவலகத்தில் நுழைந்ததும் ஒரு ஃபிராடு நண்பி இன்னிக்கு மேனேஜர் லீவுன்னு சொல்ல, ‘யெஸ் யெஸ்’ன்னு வெற்றிக்குறி போட்டுத் திரும்பினா... ‘வாட் சுபா, எனித்திங் Special’ன்னு கேட்டுச்சு பாருங்க ஒரு வாய்ஸ்.

செத்துட்டேன்!

vrsuba

Hostel-லில் இருக்கும்போது இன்னிக்கு மட்டன் பிரியாணின்னு சொன்னதும் எல்லோருக்கும் ஏக குஷி. மதியம் புளியோதரை போட்டு ஏமாற்றியதை மறக்க முடியாது.

manipmp

என் மகன் பிறக்க 1997 ஏப்ரல் 1 தான் தேதி...எல்லோரும் எதிர் நோக்கி இருக்க அவன் ஏப்ரல் ஃபூல் ஆக்கி 4ஆம் தேதி பிறந்தான் பாருங்க...

Ammukut19323639

போஸ்ட்டல்ல லெட்டர் வரும், பிரித்துப் பார்த்தால் ‘ஏப்ரல் ஃபூல்’னு எழுதி இருக்கும். தட் ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ மொமன்ட்.

altaappu

அஞ்சு வயசு இருக்கும் அப்போ, உன் டவுசர்ல மண்ணுன்னு சொன்னாங்கன்னு திரும்பிப் பார்த்து ஏமாந்தேன்... என்ன கொடுமைன்னா, அப்போ நான் டவுசரே போடல!

kavi prasad

? வருடம் முழுவதும் வொர்க் ஃப்ரம் ஹோமாக இருந்தால் எப்படி இருக்கும்?

பெட்ரோல் விலை குறையும். ஆனா கேஸ் சிலிண்டர் விலை எக்கச்சக்கமாக உயர்த்திடுவாங்க..

SowThanishka

லீவ் நாளன்று ஆபீஸுக்குப் போய் பெட்ஷீட் போர்த்தித் தூங்குவோம்.

அஜித், சென்னை

மாப்பிள்ளை ‘வீட்டோட மேனேஜரா’ இருக்கார்னு புதுப் பேச்சுவழக்கு உருவாகும்.

rajasingh.jeyakumar

என்னடா இது, இந்த மனுஷன் வேலை வேலைன்னு வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிறார். நமக்கு ஒரு பிரைவசியே இல்லையே என்று மனைவிமார்கள், ஜாலியாக வெளியே ஊர் சுற்றக் கிளம்பிவிடுவார்கள்.

எஸ். மோகன், கோவில்பட்டி

வாசகர் மேடை: கைப்புள்ள முதல்வனே

? விஷால் இயக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் கதை என்னவாக இருக்கும்? நான்கே வரிகளில் சொல்லுங்கள்.

கண் ஆபரேசன் செய்யப் போன இடத்தில ஒரு திருட்டு நடக்குது. ஒரு கண்ணில ஆபரேசன் செய்திருந்தாலும் அதை கூலர் போட்டு மறைத்து மீதி இருக்கிற இன்னொரு கண்ணால திருடனைத் தேடிப்பிடிப்பது. க்ளைமாக்ஸுக்கு முன்னால `கத்தால கண்ணால’ குறியீட்டுடன் ரீ மிக்ஸ் பாட்டு இருக்கு.

urs_venbaa

நான்கு வரிகளில் சொல்ற அளவுக்கெல்லாம் கதை இல்லை, வேணும்னா நாலு வார்த்தைகளில் சொல்றேன்.

போறாரு, தாக்குறாரு, தூக்குறாரு, ஜெயிக்கிறாரு... அவ்ளோதான்.

saravankavi

காணாமல்போன ரஃபேல் விமான டாக்குமென்ட்டுகளைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளைக் கைது செய்கிறார் விஷால்.

(இந்தப் படத்தை பா.ஜ.க பயங்கரமாக எதிர்க்கும். அதுவே படத்திற்குப் பெரும் வெற்றியைத் தேடித் தரும்)

h_umarfarook

விஷாலே கதையைப் பத்திக் கவலைப்பட்டிருக்க மாட்டாரு, நமக்கென்ன பாஸ். நீங்க ரசத்தை ஊத்துங்க!

vikneshmadurai

ஒரு இருட்டு, பல கொலைகள், ஒரு வில்லன் நான்கு கூட்டாளிகள், ஒரு ஹீரோ நண்பன் காதலி, ஒரு பட்டன் கத்தி, ஒரு சப்வே/மார்க்கெட்/பிரிட்ஜ் சண்டை, ஒரு‌ மாற்றுத்திறனாளி, திருநங்கை, ஒயின்ஷாப் சாங், மஞ்சள் புடவை, இளையராஜா... அவ்வளவுதான்!

RavindranRasu

வாசகர் மேடை: கைப்புள்ள முதல்வனே

வங்கி ஒன்று ‘திவால்’ என அறிவிக்கிறது. சிறுவன் ஒருவன் அதில் பணம் பெற முடியாமல் சிரமப்பட, அவனுக்கு உதவும் விஷால், வங்கியின் ‘திவால்’ அறிவிப்பின் பின்னணியிலுள்ள பயங்கரமான உண்மைகளைப் படிப்படியாகத் துப்பறிந்து வெளிக்கொணர்கிறார்.

க.அய்யனார், தேனி.

கொரோனாவைப் பரப்பியது சீனா என்று அமெரிக்காவும், அமெரிக்கா என்று சீனாவும் மாறிமாறி குற்றம் சாட்டிக்கொள்கின்றன. உண்மையில் கொரோனாவை எங்கிருந்து யார் கொண்டு வந்தார்கள் என்று கண்டறிய இன்டர்போல் நம் ஹீரோவை நியமிக்கிறது. நம் துப்பறிவாளன் பல நாடுகளில் களமிறங்கி ஊரடங்கு நேரத்திலேயும் ஆவல் அடங்காமல் கண்டுபிடிப்பதே கதை.

sudersan.srinivasan

? கடவுள் யாருக்காவது கைதட்டிப் பாராட்ட வேண்டும் என்றால், யாரைப் பாராட்ட வேண்டும்?

தூங்காமல், குளுகோஸ் பாட்டில் காலியானதும் மாற்றி விடும் நைட் டூட்டி நர்ஸ்கள்.

வேலாயுதம், மதுரை

பசித்தால் சாப்பிட வேண்டும், அதிலும் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று முதன்முதலில் கண்டுபிடித்தவருக்கு...

p_jegatha

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறானே இந்த மனுஷன் என்று நமக்குத்தான் கடவுள் கை தட்டுவார்.

vikneshmadurai

சுய ஊரடங்கு முடிந்த பிறகு மக்கள் அனைவரும் கைகளைத் தட்டி நன்றி தெரிவிக்க வேண்டும் என்று ஊரட‌ங்கின் நோக்கத்தினையே சிதைக்க பிரதமருக்கு ஐடியா கொடுத்த அந்த அறிவாளி ஆலோசகர்களுக்கு.

saravankavi

இன்னும் அவரை நம்புகிற நல்லுள்ளங்களுக்கு...

Mano red

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை: கைப்புள்ள முதல்வனே

? கொரோனா காலங்களை வைத்துப் படம் எடுத்தால் என்ன டைட்டில் வைப்பீர்கள்?

? கைதட்டுவது, விளக்கேற்றச் சொல்வது ஆகியவற்றையெல்லாம் அறிவிப்பதற்கு முன்பு மோடி என்ன நினைப்பார்?

? உறவினர்கள், பழைய பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள் வாட்ஸ்-அப் குரூப்பில் எரிச்சலூட்டும் மொக்கைச் செய்திகளைப் படிக்கும்போது எப்படி இருக்கும்?

? ‘ஆமா இவர் என்ன ஆனார்?’ என்று நீங்கள் எந்தப் பிரபலத்தைப் பற்றி யோசிப்பீர்கள்?

? இத்தனை நாள் வீட்டுல இருந்திருக்கீங்க. சொல்லுங்க, மனைவி என்பவர் --------------------------

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. ஈமெயிலில் அனுப்ப

vasagarmedai@vikatan.com