Published:Updated:

வாசகர் மேடை: பி.எஸ்.பிக்சர்ஸ் வழங்கும்...

மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி

? 2020-ல் மோடி என்னென்ன ‘புதிய இந்தியா’க்களை உருவாக்குவார் என்று நினைக்கிறீர்கள்?

? ஒரு பழைய படத்தை ரீமேக் செய்து, எடப்பாடியையும் பன்னீர்செல்வத்தையும் நடிக்கவைக்கலாம் என்றால் எந்தப் படத்தை ரீமேக்கலாம்?

23ம் புலிகேசி. அதில் புலிகேசி என்ன செஞ்சாலும் அதப் பாராட்ட `இன்று முதல் நீ’ ன்னு ரெண்டு பேர் வந்து நிப்பாங்களே அந்த கேரக்டர கொடுக்கலாம்.

பொம்மையா முருகன்

வால்டர் வெற்றிவேல் படத்துல சத்யராஜுக்கு பதில் எடப்பாடி பழனிசாமியும், அவர் தம்பி கேரக்டருக்குப் பன்னீரும் பொருந்துவார்கள். ஊமையாக இருந்து வில்லனாக மாறும் தம்பி கேரக்டருக்கு பன்னீர் செல்வம் அட்டகாசமாகப் பொருந்துவாரு.

Mr.அல்லு ராஜபார்ட் ரங்கதுரை

மோடி முன்னால், ‘அம்மம்மா... தம்பி என்று நம்பி’ எனப் பன்னீர்செல்வம் பாட, மாடியில் நிற்கும் எடப்பாடி பம்ம, தியேட்டரே கண்ணீர் விட்டு அழும் காட்சி அது.

வெ.பெத்துசாமி

கேடி பில்லா கில்லாடி ரங்கா

Sundar Rajan

அக்னி நட்சத்திரம்

பிரபு (ஓபிஎஸ்), கார்த்திக் (இபிஎஸ்)

வெங்கடேஷ்

எனக்கு வாய்த்த அடிமைகள்

இயக்கம் - மோடி & அமித்ஷா.

Saravanan M

தில்லானா மோகனாம்பாள் சிவாஜி கணேசன், ஏவிஎம் ராஜன் போல நாதஸ்வர வித்வான்களாக.

செ.கார்த்திகேயன், சாத்தூர்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

? ரஜினிக்குப் பிடித்தமான முறையில் போராட சில ஐடியாக்கள் ப்ளீஸ்...

பழைய பழக்கதோஷத்துல... `தொடர் விசில்’ போராட்டம் செய்யலாம்.

பூநசி.மேதாவி, சென்னை

கமல் மாதிரி அறிக்கை மட்டுமே விட்டுப் போராடலாம்.

கோதை

அமைதியோ அமைதி சின்சான் மாதிரி.

அப்புசௌந்தர்

கண்ணாடியைக் கழற்றி மாற்றிப் போடும் போராட்டம்.

என். பாக்கியலட்சுமி மதுரை

ஓபிஎஸ் மாதிரி ‘தியானம்’ செய்து சாத்வீகமான முறையில் போராடலாம்... இந்தப் போராட்டத்துக்கு நல்ல ‘பலன்’ கிடைக்க வாய்ப்புண்டு!

மயக்குநன்

அனைவரும் தங்கள் வீட்டில் உட்கார்ந்து தியானம் செய்து, அவர்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வது.

ட்விட்டர் போராளி!

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை!

Raja

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

? உங்கள் சின்ன வயது ரஃப் நோட்டில் பாடம் தவிர்த்து என்னவெல்லாம் கிறுக்கிவைத்திருப்பீர்கள்?

புக்குல இருக்குற அரசர்கள் படத்தை கார்பன் பேப்பர் வெச்சு வரைந்து... பெரிய ஆர்ட்டிஸ்ட் போல நினைச்சுக்கிறது.

ஹர்ஷாபா

ல்தகா சைஆ பாணியில் எழுதிப் பார்ப்பேன்! 1. வுலீ ல்கூஸ் 2. லைகக்சிப மாம்அ 3. ர்சச்டீ டுண்கு 4. தாத்தா திந்கா

Balu Marappan

வாசகர் மேடை: பி.எஸ்.பிக்சர்ஸ் வழங்கும்...

ரெண்டு டீச்சர்கள் கையெழுத்த போட்டு பிராக்டீஸ் பண்ணிட்டு இருந்தேன்...

அருள் மொழி வர்மன்

சச்சின் தெண்டுல்கர் எடுக்கும் ரன்களின் விவரங்கள்.

கே.ஆர்.உதயகுமார்

பேனா எழுதுதான்னு நிறையவாட்டி கிறுக்கியிருக்கேன்.

வெ கார்த்திக்

பால்யத்தில் முடியாது என்று தெரிந்திருந்தும் முயற்சி செய்தது...

கையை பேப்பரிலிருந்து வெளியே எடுக்காமல் முழுச் சுற்றுக்கும் வரைந்த முயற்சி.

ஃBorejerry

வார இதழ்களில் வரும் ஒரு பக்கக் கதைகளை காப்பி அடித்து கதை, திரைக்கதை, வசனம் என்பதோடு என் பெயரைச் சேர்த்துக்கொள்வேன்.

Adhirai Yusuf

வேறெங்கும் இடுவதற்கு வாய்ப்பே கிடைக்காததாலோ என்னமோ, விதவிதமாக பிராக்டீஸ் செய்த கையொப்பங்கள்!

அஜித், சென்னை

சினிமாப் பாடல் வரிகள்

கோதை

ரஃப் நோட்டின் பேப்பருக்கு அடியில் நாணயத்தை வைத்து, பேப்பர் மேல் பென்சிலால் கிறுக்கி அந்த நாணயத்தைப் போல உருவாக்குவேன்.

Mr.அல்லு

கரடி

ரயில்

டில்லி

பொம்மையா முருகன்

அழிரப்பரைத் தலையில் தேய்த்து, அதில் ஒட்டிய எண்ணெய்ப் பசையை வைத்து புத்தகங்களில் உள்ள படங்களில் அழுத்தி பின் அதனை ரஃப்நோட்டில் ஒட்டி நிரப்பி வைத்தல்.

செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்

இரண்டு வயதாக இருக்கும் போது அம்மா மறைந்துவிட்டார். எல்லாப் பக்கங்களிலும் அவரின் பெயர் அல்லது அவருக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பேன்.

Adhirai Yusuf

? ஆதாமையும் ஏவாளையும் நேரில் சந்தித்தால் இருவரிடமும் என்ன கேட்பீர்கள்?

ஆதாம் வேற யாரையோ சைட் அடிக்குறாப்ளன்னு ஏவாள்கிட்ட போட்டுக்கொடுப்பேன்.

புல்லட் பாண்டி

கடவுளுக்கு பயப்படச் சொல்லி உங்களுக்குச் சொல்லித்தந்தது யார்?

நவின்

பர்த் சர்ட்டிஃபிகேட் கேட்பாங்களே, வெச்சிருக்கீங்களா?

Ramuvel Kanthasamy

உங்களில் யார் முதலில் காதலைச் சொன்னீர்கள்?

பிரசன்னா வெங்கடேஷ், மும்பை

வாசகர் மேடை: பி.எஸ்.பிக்சர்ஸ் வழங்கும்...

தொப்புள் இல்லையேன்னு ஃபீல் பண்ணியிருக்கீங்களா?

செ.செந்தில்குமார்

பொய்யாகத்தானே ஆப்பிள் மீது பழி போட்டீர்கள்.

புகழ்

ஏன்டா கையைக் காலை வெச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கக் கூடாதாடா..?

MGR

நீங்களாச்சும் கடவுளைப் பார்த்தீங்களா... அப்படியே பார்த்திருந்தாலும் அந்தக் கடவுளாச்சும் உங்க ரெண்டு பேரையும் பாகுபாடு இல்லாமல் பார்த்தாரா?

யாளி கொண்டான்

ஆப்பிளை நீங்க கடிச்சதனால ஒவ்வொரு பண்டிகைக்கும் நாங்க புதுத் துணி எடுக்க கஷ்டப்படுறோம். “இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பிதாவின் குமாரா.”

Krishna Moorthy

ஏன்யா ஆதாமு, அப்போதிருந்தே ஏவாள் என்ன நினைக்கறான்னு புரிஞ்சுக்க முடியாமதான் இருந்தியா?

Sowmya Red

குடும்ப வாழ்க்கைல சண்டை வர்றதுக்கு காரணமா பெண்கள் இருந்தாலும் முதல்ல மன்னிப்பு கேக்குறது ஆண்களாதான் இருக்குது. இந்த டிசைனின் ஆதாரப்புள்ளி நீங்கதான?

Mano Red

நீங்க கடிச்சது ஆர்கானிக் ஆப்பிள்தானே?

எம்.விக்னேஷ் மதுரை

? 2020-ல் மோடி என்னென்ன ‘புதிய இந்தியா’க்களை உருவாக்குவார் என்று நினைக்கிறீர்கள்?

ராணுவத்தைத் தவிர எல்லாவற்றையும் தனியாருக்குக் கொடுத்துவிட்டு, புதிய ‘இந்தியா பிரைவேட் லிமிட்டெடை’ உருவாக்குவார்.

ஜெ.கண்ணன், சென்னை

இனி புதியதாக ஒரு திட்டமோ சட்டமோ வரும்போது முற்றிலுமாக இணையதளம் துண்டிக்கப்படும்.

S.s. Poonkathir

நான் பேசறேன்; நீ கேளு இந்தியா

அ.வேளாங்கண்ணி, வேலூர்

வாசகர் மேடை: பி.எஸ்.பிக்சர்ஸ் வழங்கும்...

Around the world in 365 days புராஜெக்டின்படி மோடி வெளிநாட்டு டூரில் செல்வதால் செயல் பிரதமராக அமித்ஷா செயல்படுவார்.

அ.இ.அ.தி.மு.க பா.ஜ.க-வுடன் இணைக்கப் படும். ஹெச்.ராஜா குட்டித் துணை முதல்வராவார். பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இனி ஆளுநர்களே முதல்வராகச் செயல்படுவார்கள்.

சித்ரா தேவி

நாட்டு மாடு, ஜெர்சி மாடு - இரண்டில் எது வந்தேறி மாடு எனப் பிரித்து மாட்டுக்குக் குடியுரிமை கொடுக்கும் இந்தியா.

ராக்கிங் கில்லர்

சர்வாதிகார ஜனநாயக இந்தியா (புரியலல்ல? எனக்கும்தான்!)

சுனா.பானா

எவன் எதிர்க்கட்சியாக இருந்தால் எனக்கென்ன இந்தியா.

புல்லாங்குழல் @காற்றின் மொழிபெயர்ப்பு

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை: பி.எஸ்.பிக்சர்ஸ் வழங்கும்...

? ஒரு புதிய ஆக்‌ஷன் படத்துக்கு ஹீரோவுக்கான வித்தியாசமான பஞ்ச் டயலாக்குகள் சொல்லுங்களேன்...

? கடந்த பத்தாண்டுகளில் நீங்கள் ரொம்பவே மிஸ் செய்த பிரபலம் யார், ஏன்?

? ஸ்பெல்லிங் மிஸ்டேக்கால் உங்கள் வாழ்க்கையில் நடந்த விசித்திரமான காமெடி..?

? முப்படைகளுக்கும் பொறுப்பாக ஒரு தளபதியை நியமித்துவிட்டார்கள். ஒருவேளை மோடியே தளபதி பொறுப்பேற்றால் என்ன செய்வார்?

? நயன்தாரா யாருடைய பயோபிக்கில் நடிக்கப் பொருத்தமாக இருப்பார்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி :வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

ஈமெயிலில் அனுப்ப; vasagarmedai@vikatan.com