? ‘அட, இந்தப் படத்துல இவர் நடிச்சிருக்கலாமே’ என்று எந்தப் படத்தைப் பார்த்து, யாரை நினைத்தீர்கள்?
மங்காத்தா அர்ஜுனுக்கு பதில் விஜய்.
Thaadikkaran
தீராத விளையாட்டு பிள்ளை படத்துல சிம்பு நடிச்சிருக்கலாம்.
pbukrish
ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆர்யா அல்லது ஜீவா நடித்திருந்தால் காமெடி இன்னும் கொஞ்சம் தூக்கலாக இருந்திருக்கும்!
நா.இரவீந்திரன், வாவிபாளையம்.
பாகுபலி : அஜித் & விஜய்
W.லூசி.
96 படத்தில் சிம்பு - VTV பார்ட் 2 மாதிரி இருந்திருக்கும்.
S.Prabhu Senthilkumar,
சென்னை
இம்சை அரசன் 23ஆம் புலிகேசியாக நாகேஷ் நடித்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப்பார்த்திருக்கிறேன்.
மீனலோசனி பட்டாபிராமன், சென்னை
புலி - வடிவேலு
முத்துகுமார், திருப்பூர்
சங்கமம் படத்துல பிரபுதேவா நடிச்சிருந்தா அந்த செம ஹிட் ஆன பாட்டுக்கெல்லாம் டான்ஸ் அடிபொலியா இருந்திருக்கும்.
C P SenthilKumar
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
? ஸ்டாலின் அ.தி.மு.க தலைவர் ஆனால் எப்படி இருக்கும்?
எல்லா அம்மா உணவகங்களும் அப்பா உணவகங்களாக மாறலாம்.
நளி2K20
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியைத் தொடர்ந்து... புரட்சித் தளபதி.
P. Rajagopal, மன்னார்குடி
பாசத்துக்குரிய அண்ணன் எடப்பாடி அவர்களே, அண்ணன் ஓபிஎஸ் அவர்களே, தம்பி வேலுமணி அவர்களே, அஞ்சாநெஞ்சன் ஜெயக்குமார் அவர்களே... ரத்தத்தின் ரத்தங்களே...
urs_venbaa
மீன்குழம்பு வச்ச சட்டியில சர்க்கரைப் பொங்கல் செஞ்ச மாதிரி இருக்கும்.
HariprabuGuru
பெரியய்யா இது பா.ம.கவுக்குக் கிடைத்த வெற்றி என்பார்.
Akku_Twitz
இரத்தத்தின் இரத்தமே என்பதற்கு பதில் இரத்தத்தின் உடன்பிறப்பே என்று பேச ஆரம்பித்துவிடுவார்.
senthilkumar.shanmugam.16
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

? கிராமத்துப் படங்களில் உங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாத காட்சி எது; ஏன்?
அந்த கிராமத்துக்கு வரும் ரயில் அனைத்தும் மெட்ராசுக்குத்தான் போகும். வேற ஊருக்கே போகாதுங்களா சாரே?
manipmp
காமெடிக் காட்சி வேண்டும் என்பதற்காகவே பட்டணத்திலிருந்து வரும் கதாநாயகனின் நண்பர்கள், அங்குள்ள கிராமவாசிகளை நகரவாசிகளுடன் ஒப்பிட்டுக் கிண்டல் செய்வது.
நா.இரவீந்திரன், வாவிபாளையம்.
கிராமத்துப் படங்களில் கதாநாயகி புடவை கட்டும் விதம்தான். எந்த கிராமத்துப் பெண்களும் புடவையை அப்படிக் கட்டுவதில்லை.
லதா V, சென்னை
ஹீரோயினின் தாய்மாமா படிக்காமல் இருப்பதுபோலக் காட்டுவது.
பெ. பாலசுப்பிரமணி
கிராமத்துப் பாட்டிங்கன்னாலே தூண் ஓரத்துல சாய்ஞ்சு வெத்தலை இடிப்பாங்கன்னு காட்டுவது. எங்க அம்மாச்சில்லாம் சுருக்குப்பைல வெத்தலைக்குப்பதில் செல்போன்தான் வச்சிருக்கும்.
gmuruganandi
வயல்ல போய், புடலங்காய்ன்னு நெனச்சு பாம்பைக் கழுத்துல போட்டுட்டு பா..பா..ன்னு கத்த வேண்டியது.
vrsuba
நாட்டாமைப் பேச்சுக்கு ஊரே கட்டுப்படுவது போன்ற காட்சிகளெல்லாம் சும்மா, எங்க கிராமத்திலெல்லாம் தலைக்குத் தல நாட்டாமை.
selvachidambara
தவறு செய்த குடும்பம் ஊருக்கு ஒதுக்குப் புறமாக self quarantine-இல் இருக்கும்.
sekeran.shanoj.5
? உங்களுக்குச் சொந்தமாக ஒரு தீவு வழங்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?
ஓஎன்ஜிசி-யைக் கூட்டி வந்து தீவில் பெட்ரோல் வளம் இருக்கா என்று செக் பண்ணணும். இருந்தால் குபேரன்தான். இல்லாவிட்டால் ரிசார்ட் கட்டி, அதிருப்தி எம்.எல்.ஏ, எம்.பிக்களுக்கு வசதி செய்து கொடுத்துக் காசு கறக்கலாம்.
எஸ். மோகன், கோவில்பட்டி
தனியாகத் தீவு கிடைத்தால் செவ்வனே கடற்கரையோரம் அமர்ந்துகொண்டு பொரித்த மீனை உண்டுகொண்டு நண்பர்களுடன் சிரித்து மகிழ்வேன்.
செ.ரேவதி
வெட்டுக்கிளிகள் உள்ளே நுழைந்துவிடாதபடி பெரிய வலை வாங்குவேன்.
forgjeryda
வணக்கம்டா மாப்ள, தனித் தீவில் இருந்து அதிபர் பேசரண்டா என டிக் டாக் வீடியோ போடுவேன்.
prabhu65290
எல்லாப் பிரபலங்களையும் அழைத்து புதுத்தீவு புகுவிழா நடத்துவேன், முக்கியமாக நித்தியானந்தாவை! அவர் இதை “சின்ன கைலாசா” என்று அழைத்துவிட்டால் போதும். அதன் டூரிஸ்ட் விசா கொடுத்தே சம்பாதித்து விடலாம்!
h_umarfarook
? மொபைல் போன் பற்றி கமல் பாணியில் ஒரு கவிதை சொல்லுங்கள், பார்ப்போம்!
பேச நினைப்பதை விட்டு
எதையெதையோ பிதற்றுகிறோம்
பேசவேண்டாம் என்று சொல்லவில்லை
பேசவேண்டியதைப் பேசி
காண்போம் புதிய யதார்த்தத்தை!
எம். விக்னேஷ், மதுரை
விஞ்ஞானத்தில் விளைந்த
விதை இக்கருவி
மெய்ஞ்ஞானம் புரியாத
மானுடர்கள்
அஞ்ஞானம் அறிய
அதனில் ஆழம் பார்ப்பர்
அறியாமை அகலா
அறிவிலிகள்..!
மயக்குநன்
சப்தச் சிரமமென்பார்
சர்வநாடியும் ஒடுங்குதென்பார்
சந்தோஷசங்கதிகளின் சங்கமமென்பார்
சத்ரு என்பார்
குரு என்பார்
சத்குருவுக்கும்
தேவையன்றோ
ஆடையில்லா மனிதன்
நிலை அன்று
இன்றோ இது இல்லை என்றால்
எல்லோர்க்கும் அதுவேயாம்
உபாயமுண்டு
ஒழுங்காய் உபயோகி.
புகழ்
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? சீனியர் படங்களைத்தான் ஜூனியர் ரீமேக் செய்ய வேண்டுமா என்ன, தனுஷின் எந்தப் படத்தை ரஜினி ரீமேக் செய்யலாம்?
? ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்படாத துறை எதுவென நினைக்கிறீர்கள்?
? ராகுல்காந்தி இப்போது தமிழில் ரிங்டோன் மாற்ற வேண்டுமென்றால் உங்கள் சாய்ஸ் என்ன பாடல்?
? எடப்பாடி பழனிசாமியை ஒரு விஷயத்தில் பாராட்டலாம் என்றால் எந்த விஷயத்துக்காகப் பாராட்டுவீர்கள்?
? ஒரு வித்தியாசமான மாஸ்க் தயாரிக்க வேண்டும் என்றால் என்னமாதிரியான மாஸ்க் தயாரிப்பீர்கள்?
உங்கள் பதில்களை
அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை 600 002. ஈமெயிலில் அனுப்ப
vasagarmedai@vikatan.com