Published:Updated:

வாசகர் மேடை! - சீமராஜாவும் சீதக்காதியும்

நடுவுல கொஞ்சம் பணத்தைக் காணோம்: இருவரும் சேர்ந்து கொள்ளையடிக்கும் பணத்தை விஜய் சேதுபதி மட்டும் தனி ஆளாகத் திருடுவதைக் கண்டுபிடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

பிரீமியம் ஸ்டோரி

?விஜய்சேதுபதி - சிவகார்த்தி கேயன் சேர்ந்து நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்? ஒன்லைன் ப்ளீஸ்...

சூது கவ்வாது. சூது, வாது செய்து நண்பர்களான சிவாவும் வி.சேவும் முன்னேறிப் பெரியமனிதர்கள் ஆகின்றனர். சிவா மாநிலத் துணை முதல்வராகவும், வி.சே டெல்லியில் மத்திய மந்திரி யாகவும் ஆகின்றனர். நீதி:- சூது ஒருபோதும் கவ்வாது.

pachaiperumal23

கவண் 2: ரியாலிட்டி ஷோவில் ஆங்கராக இருக்கும் சிவகார்த்திகேயனை சினிமாவில் அறிமுகம் செய்து ஹீரோவாக்குகிறார் நடிகரான விஜய் சேதுபதி

balasubramni13

வாசகர் மேடை! - சீமராஜாவும் சீதக்காதியும்

ரெளடி பேபி! (ரெளடி - விஜய் சேதுபதி, பேபி - சிவகார்த்திகேயன்.)

BaaluElango

நடுவுல கொஞ்சம் பணத்தைக் காணோம்: இருவரும் சேர்ந்து கொள்ளையடிக்கும் பணத்தை விஜய் சேதுபதி மட்டும் தனி ஆளாகத் திருடுவதைக் கண்டுபிடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

balasubramni1

சீமராஜாவும் சீதக்காதியும்.நாட்டை ஆளும் அரசனுக்கும் (சிவகார்த்தி), நாடகக் கலைஞனான சீதக்காதிக்கும் (விஜய் சேதுபதி) உள்ள ஆத்மார்த்தமான நட்பைப் பேசும் படம்.

vannamazhai

‘அனில் முகேஷ்.’ அனில் அம்பானியாக விஜய் சேதுபதியும், முகேஷாக சிவகார்த்திகேயனும் கலக்கலாம்.

krishmaggi

‘பாபநாசம் - 3’. சுயம்பு கேஸைக் கையில் எடுக்கிறார் சி.பி.ஐ ஆபீசர் விஜய் சேதுபதி. இந்த முறை சுயம்புவின் மருமகன் சிவகார்த்திகேயனின் புத்திக்கூர்மையால் சி.பி.ஐ மண்ணைக் கவ்வுகிறது.

ARiyasahmed

? சினிமா, சீரியல், வெப்சீரிஸ் வித்தியாசங்களை ஜாலியாகச் சொல்லுங்களேன்...

ஒரு வீடு ஒரு பிரச்னை - சினிமா, ஒரு வீடு பல பிரச்னைகள் - சீரியல்,பல வீடுகள் பல பிரச்னைகள் - வெப்சீரீஸ்.

imvetti2

சிரிச்சிட்டு தியேட்டர்க்குப் போய், அழுதுட்டுத் திரும்பி வந்தா சினிமா முடிஞ்சுது...

அழுதுட்டு சீரியல் பார்த்துட்டு, சிரிச்சிட்டுத் தூங்கினா சீரியல் முடிஞ்சுது...

எல்லாம் பார்த்துட்டு ‘டேட்டா வேஸ்ட்’னு சொன்னா வெப்சீரிஸ் முடிஞ்சிது.

ranjanikovai2

சினிமா: விடுமுறை கிடையாது.

சீரியல்: வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் விடுமுறை.

வெப் சீரிஸ்: இதுல இடைவேளைகூடக் கிடையாது.

Vasanth9206

படத்துல ஹீரோயினைக் காட்டவில்லை என்றால் சினிமா.

ஹீரோவைக் காட்டவில்லை என்றால் சீரியல்.

ஹீரோ ஹீரோயினை மட்டும் காட்டினால் அது வெப் சீரிஸ்.

ranjanikovai

? பெண்களுக்கு இன்னும் எந்தெந்த இடங்களில் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன?

திருமணமான பிறகு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அவர்களாகவே முடிவெடுக்க முடியாது. கணவன் குடும்பத்தாரைக் கேட்டே செயல்பட வேண்டியிருக்கிறது.

SowThanishka 1

சமையலறையில் (நட்சத்திர உணவு விடுதிகளில் அனைவரும் ஆண் சமையலாளர்களே!)

எம்.கலையரசி, சேலம்.

விரும்பும் பட்டப் படிப்பு படிக்க முடிவதில்லை.‘பெண்களுக்கு ஏற்றது அல்ல’ என்று சொல்லி மறுக்கும் படிப்புகளில் fashion technology போன்றவையும் உண்டு.

sumy.sumy.

அனைத்துக் கோயில் கருவறை மற்றும் உடை சுதந்திரம்.

karna_sakthi

சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் தொழிலில், ரேஷ்மா பதானுக்குப் பிறகு பெண்கள் யாரும் வந்ததுபோல் தெரியவில்லை..!

LAKSHMANAN_KL

பெற்றோரின் கடைசிக் காலங்களில் பெற்றோரைத் தன்னுடன் வைத்துக்கொள்ள கணவன் வீட்டினரால் பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

RamAathiNarayen

கொத்தனார்கள் எல்லாமே ஆண்களாகவும் சித்தாளாக பெண்களும் இருந்தனர்! இப்போ சித்தாளா ஆண்களும் வந்திட்டாங்க. ஆனா பெண்கள் தான் இன்னமும் கொத்தனார்களாக வரவில்லை!

h_umarfarook2

? எடப்பாடிக்கு ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ போல் சசிகலாவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கவர்ச்சிகரமான ஸ்லோகன் சொல்லுங்களேன்...

காலம் வெல்லும், காத்திரு...

ரெண்டு பேருக்கும்தான்!

saravankavi

சசிகலா: மாரத்தான் ஓட்டம்.

பன்னீர்: ஓட்டமும் உங்ககூடத் தான்.

eromuthu

வாசகர் மேடை! - சீமராஜாவும் சீதக்காதியும்

சசிகலா: அப்போலோ இட்லி வாங்குமளவுக்கு அனைவரது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே லட்சியம். அது, ஒருநாள் நிறைவேறும் நிச்சயம்!

ஓபிஎஸ்: எதிரணியில் வாரிசு அரசியலை ஒழிப்போம். எங்கள் அணியில் ஒளிப்போம்..!

LAKSHMANAN_KL

வெற்றி நடைபோடும் கைதிகளே...

வெற்றி நடைபோடும் துரோகிகளே...

itismurugan04

சசிகலா: மறு அவதாரம் எடுத்த மன்னார்குடியே!

பன்னீர்செல்வம்: சமாதியில் தியாக சரித்திரம் படைத்த பரதனே!

சி. கார்த்திகேயன் சாத்தூர்

சசிகலா: சிறையில் பூத்த சின்ன மலர். ஓபிஎஸ்: தேனியில் உயர்ந்த தேனீ.

saravankavi

சசிகலா: மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைத்திடும் சிறைச்சாலை.ஓபிஎஸ்: தர்மயுத்தத்தைத் தொடர்வோம்... தமிழ்நாட்டை மீட்போம்.

pachaiperumal23

? வாசகர் கேள்வி : சீமான் கதை சொல்வதற்குப் பதிலாக கவிதை சொன்னால் எப்படிச் சொல்வார்?

தலையில இருக்குது பேனு... கதை சொல்லியே பிழைக்கிறேன் நானு...கூட்டணியெல்லாம் வீணு...எப்பவுமே தனித்து நிற்கிறதுல நாம் தமிழர் ‘நம்பர் ஒன்'னு!

ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்

ஒரு கதை சொல்லியே இன்று கவிதை சொல்லுதே... அடடே... ஆச்சர்யக் குறி! இடையிடையே புஹாஹா போட்டுக்கோங்க.

PG911_twitz

யானையும் குதிரையும் படைக்கழகு. ஆமைக்கறியும் இட்லிக்கறியும் விருந்துக்கழகு. இது கவிதையா, கருமமா என்று குழப்புவதே கவிஞனுக்கழகு. கைதட்டி விசிலடிப்பதே தம்பிகளுக்கழகு.

RahimGazzali1

இலங்கை என்றொரு தேசமுண்டு... அங்கே பிரபாகரன் என்றொரு நேசனுண்டு... குண்டா முழுக்கக் கறி இட்லி உண்டு... அதை நானும் தின்னதுண்டு...

YAADHuMAAGE

இலங்கைக்குச் சென்ற அறுபதாயிரம் யானைகளைச் சுமந்து சென்ற கப்பலைச் செய்தவனும் தமிழனே.

adiraibuhari2

ஆமையைத் திருப்பிப் போட்டா படகாகும் என்பார் இட்லிக்குள் கறி இருந்தது என்பார். இதையெல்லாம் பொய் என்பவர் வந்தேறிகள் என்பார்!

h_umarfarook9

வாசகர் மேடை! - சீமராஜாவும் சீதக்காதியும்

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? மிஷ்கின், செல்வராகவன் வரை பேய்ப்படம் எடுத்துவிட்டார்கள். ஷங்கர் பேய்ப்படம் எடுத்தால் அதன் ஒன்லைன் என்னவாக இருக்கும்?

? சீட்டு வாங்க இவ்ளோ கஷ்டப்படும் காங்கிரஸ் அடுத்த தேர்தலிலாவது ஆட்சியைப் பிடிக்க என்ன செய்யலாம்? யோசனைகள் சொல்லுங்களேன்!

? கள்ள ஓட்டு, கள்ள நோட்டு - ஜாலியான வித்தியாசம் சொல்லுங்களேன்!

? வாசகர் கேள்வி : மறைந்த தமிழ் ஹீரோக்கள், இன்றைய இளம் ஹீரோக்களின் எந்தெந்தப் படங்களில் நடிக்கலாம், ஏன்..?! - லஷ்மணன்

? அரசியலில் கூட்டணி சேர்ந்துள்ள கமல்ஹாசனும் சரத்குமாரும் சினிமாவில் சேர்ந்து ஒரு படம் நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு