Published:Updated:

வாசகர் மேடை: கலைஞர்... கமல்ஹாசன்!

அமித்ஷாவும் அற்புத விளக்கும்
பிரீமியம் ஸ்டோரி
அமித்ஷாவும் அற்புத விளக்கும்

வாசகர் மேடை

வாசகர் மேடை: கலைஞர்... கமல்ஹாசன்!

வாசகர் மேடை

Published:Updated:
அமித்ஷாவும் அற்புத விளக்கும்
பிரீமியம் ஸ்டோரி
அமித்ஷாவும் அற்புத விளக்கும்

? ஆளாளுக்கு ஜெயலலிதாவின் பயோபிக் எடுக்கக் கிளம்பிவிட்டார்கள். கருணாநிதியின் வாழ்க்கையைப் படமாக எடுத்தால், அவரது வேடத்தில் நடிக்கப் பொருத்தமானவர் யார்?

நடிகர் ஜெயப்ரகாஷ்

அசோகன், ஈரோடு

டீன் ஏஜ் - உதயநிதி

ஏஜ் ஆனதும் - அமிர்தம்

பாலு மாரியப்பன், வேலூர்

மு.க.அழகிரியையே நடிக்க வைக்கலாம். ஸ்டாலின் ஒரு படத்தில் நடிச்சிருக்கும்போது அழகிரியும் ஒரு படத்திலாவது நடிப்பதுதானே சரி!

இளையநிலா அனுபம் கெர்

nikanth

வாலிப வயதில் நடிகர் நவாசுதின் சித்திக்கும் முதிய தோற்றத்தில் வாகை சந்திரசேகரும் நடித்தால் பொருந்தும்.

HariprabuGuru

தசாவதாரம் படத்தில் கருணாநிதி வேடத்தில் நடித்தவரே நடிக்கலாம்.

UDAYAKUMARKR

கமல்ஹாசன்.

சூனா.பானா

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

? உணவு, உடை என எல்லாவற்றுக்கும் செயலி வந்துவிட்டது. அடுத்தபடியாக எதற்கு செயலி வந்தால் நன்றாக இருக்கும்?

ஒரு திரைப்படத்தின் கதை ஒரிஜினலா, திருட்டுக்கதையா என்று கண்டுபிடிக்க.

எஸ்.ராஜேந்திரன், கபிஸ்தலம்

பஸ்ல கண்டக்டர் கொடுக்க வேண்டிய மீதிச் சில்லறை, தானாவே நம்ம அக்கௌன்ட்ல கிரெடிட் ஆகிற மாதிரி ஒரு ஆப் இருந்தா பயணம் நிம்மதியா இருக்கும்.

bommaiya

எதிரில் நிற்கும் மனிதர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு செயலி.

sri.vidya

கடையை அடைத்துவிட்டுப் பாதி தூரம் வந்ததும், ‘எல்லா லைட்டையும் ஆஃப் பண்ணிட்டோமா, பேனை ஆஃப் பண்ணிட்டோமா’ன்னு குழப்பம் வந்துடுது. அதைக் கண்டுபிடிக்க ஒரு செயலி வந்தால் தேவலை.

rizriza8

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

200 கோடி... 400 கோடி... 500 கோடி வசூல் ஆவதாகத் தம்பட்டம் அடிப்பதை நிறுத்த; ரியல் வசூல் பற்றிக் கண்டறிய, செயலி ஒன்றை உருவாக்கலாமே..?!

Balumarappan2

உடம்பைக் குறைச்சி சுகர் இல்லாமல் ஆக்கணும். ஆனா உடம்பை வருத்தி நடைப்பயிற்சி, உடற்பயிற்சின்னு உயிரை வாங்கக்கூடாது... அதற்கேற்றமாதிரி ஏதாவது ஆப்பைக் கண்டுபிடியுங்கள்.

ஃBorejerry

கலைஞர் கமல்ஹாசன்!
கலைஞர் கமல்ஹாசன்!

மார்க்கெட்டிற்குச் சென்று காய்கறி வாங்கும் போது அது நல்லதா கெட்டதா என்பதையும் இயற்கை உரம் போட்டு விளைந்ததா என்பதையும் கண்டறிய ஒரு செயலி வேண்டும்.

UDAYAKUMARKR

அதிகம் சாப்பிட்டால் எச்சரிக்கும் செயலி வந்தால் நன்றாக இருக்கும்!

எம்.சேவியர் பால், கோவை

? பொசுக்கு பொசுக்கென முடிந்துவிடும் டெஸ்ட் போட்டிகளை ஐந்து நாள்களுக்கு இழுத்தடிக்க ஜாலி ஐடியாக்கள் ப்ளீஸ்!

ஒரு டெஸ்ட் மேட்ச் இரண்டிரண்டு இன்னிங்ஸ் கொண்டது என்று கணக்கிடாமல் இரண்டிரண்டு இன்னிங்ஸ் முடிந்தபிறகு மீதமுள்ள நாள்களில் எத்தனை இன்னிங்ஸ் சமமாக ஆடமுடியுமோ அத்தனை இன்னிங்ஸ் ஆடி முடிவு எட்டப்படும்

vaira.bala.12

முதல் மூன்று நாள்கள் ‘டெஸ்ட் போட்டி’, நான்காவது நாள் ‘ஒரு நாள் போட்டி’, கடைசிநாள் ‘20 ஓவர் போட்டி’ என ‘காம்போ’ போட்டியாக நடத்தலாம்.

endalelango

காலையில 20 ஓவர்! மாலையில 20 ஓவர் ஆடுனா போதும்! ஒரே நேரத்துல டுவென்டி, டுவென்டி பார்த்த பீலிங்கும் இருக்கும், டெஸ்ட் மேட்சை நடத்துன மாதிரியும் இருக்கும்!

எ.முகமது ஹுமாயூன், நாகர்கோவில்

டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று ஸ்டெம்புக்கு பதில் இரண்டு ஸ்டெம்பை மட்டும் வைத்து விளையாடலாம் பாஸ்.

MSR SRIRAM, மயிலாடுதுறை

டெஸ்ட் போட்டிகளில் கிளீன் போல்டு தவிர மற்ற அனைத்து அவுட்களையும் ரத்து செய்துவிடலாம்.

கே.சங்கர், சென்னை

ராகுல் டிராவிட் போல 11 பேர் தேவை.

ஆர்.மணிவண்ணன், நாகை

விக்கெட் கணக்கெல்லாம் வைக்காமல், வருகைதரும் சிறிய அணிக்கு முதல் மூன்றுநாள் பேட்டிங் வாய்ப்பு தந்து, அவர்களடிக்கும் ஸ்கோரை இரண்டு நாள்களில் உள்ளூர்ப் பெரிய அணியை அடிக்கவைக்கலாம்... முடிவு எப்படியோ, ஆனால் ஐந்து நாள் ஆட்டத்துக்கு கியாரன்டி உண்டு.

mekalapugazh

வர்ணனையாளராக நம்ம வைகோவைப் போடலாம். அவர் பேசி முடிக்கும் வரைக்கும் பந்து வீசக் கூடாது என்ற உத்தரவோடு.

ஒரு மேட்ச் ஒரு வருடம்

கிரேக்கத்திலே!

Alsetwits

ரன் அவுட் முறையை ரத்து செய்யலாம். பேட்ஸ்மேன்கள் நடந்து நடந்து ரன் எடுப்பார்கள் ஸ்கோர் மெதுவாக உயரும் ஐந்து நாள்களும் போட்டி நடக்கும்.

KVENKAT

ஐந்து நாள்களுக்கு முன்பு போட்டி முடிந்தால் மீதமுள்ள நாள்களில் மைதானம் சுத்தம் செய்தல் தண்ணீர் விடுதல் வேலையை வீரர்கள்தான் செய்ய வேண்டும் என்று அறிவிக்கலாம்.

balasubramni1

ரன் எடுப்பது பக்கத்தில் இருப்பதால் சீக்கிரமா ஓடி எடுத்திடறாங்க. அதனால் ஒரு `பத்து கிலோ மீட்டர்’ தொலைவுக்கு வைங்க ஒரு ரன் எடுக்கவே ஒரு நாள் ஆகும்.

billumohan83

நாலு தடவ பவுண்டரி அடிச்சா தான் 4 ரன்கள்.

ஆறு தடவ சிக்ஸர் அடிச்சாதான் 6 ரன்கள்னு புதுசா ஒரு ரூல் போடலாம்.

அதனால எல்லாரும் சிங்கிள்ஸ் தான் ஆடுவாங்க. மேட்ச் ஜவ்வா இழுக்கும்.

vigneshmos

? அமித்ஷா சுயசரிதை எழுதினால் அந்தப் புத்தகத்துக்கு என்ன தலைப்பு வைப்பார்?

பவர் பாயின்ட் ஷோ

எம்.விக்னேஷ், மதுரை

ஆண்டவன் கட்டளை

உ.அருண்குமார், ஒரத்தநாடு

தி லோட்டஸ்

வெ.சென்னப்பன், அரூர்

சுயமாவது... சரிதையாவது...

jerry.darvey

எனக்கு இன்னொரு பேர் இருக்கு!

avikumar.krishnasamy

அமித்ஷாவும் அற்புத விளக்கும்
அமித்ஷாவும் அற்புத விளக்கும்

ஓங்கி அடிச்சா ஒரே நாடு

Asokan Kuppusamy

பில்லியன் பிராப்ளம்ஸ் சால்வ்டு

நா.இரவீந்திரன், திருப்பூர்

தாமரை மலர்ந்தே தீரும்

வீரணம் சரவணன்.

நானும் ரௌடிதாங்க

லூசி. W.. தூத்துக்குடி

அர்த்தமில்லா சாஸ்திரம்

என்.விஜயலக்ஷ்மி, மதுரை

அமித்ஷாவும் அற்புத விளக்கும்

எம்.விக்னேஷ், மதுரை

? ஏலியன்கள் ஏன் அமெரிக்காவைத் தாண்டி நம் ஊர்ப்பக்கமெல்லாம் வருவதேயில்லை?

இங்கே இருக்கும் செல்லூர் ராஜு போன்ற சயன்டிஸ்ட்களைப் பார்த்து பயமோ என்னவோ?

மாணிக்கம், திருப்பூர்

நம்ம ஊர்லதான் வெங்காயம், வெள்ளைப்பூண்டு விலையெல்லாம் ஏறிப்போய்க் கிடக்குதே. அதற்கு பயந்துகிட்டுதான் ஏலியன்ஸ் நம்ம ஊர்ப் பக்கம் வர்றதில்ல!”

ஜீவகன் மகேந்திரன்

பேய்ப்படங்களில் செய்வதுபோல, நம்மூர் மந்திரவாதிகளை வைத்து பயமுறுத்துவார்களோ என்ற அச்சத்தில் அவை வருவதில்லையோ என்னவோ..!

mekalapugazh

ஷங்கர் கால்ஷீட் கேட்டு பிரமாண்டமா படமெடுக்க ஆரம்பிச்சுட்டா அப்புறம் ரெண்டு, மூணு வருஷத்துக்கு இங்கேயே சுத்திட்டுக் கிடக்கணும். திரும்ப அமெரிக்கா பக்கம் போக முடியாதுன்னு பயத்தில்தான் இந்தியா வரல.

rizriza8

சீமான் ஏலியன் கறி விரும்பி சாப்பிடுவார்னு தம்பிகள் யாராவது உணர்ச்சிவசப்பட்டு ஏலியன் பிரியாணி பண்ணிட்டா? அந்த பயத்துலதான் இந்தப் பக்கம் வரலை!

KayathaiS

ஆதார் கார்டில் நம் போட்டோவைப் பார்த்து நம்மையும் ஏலியன்களாக நினைத்திருக்கலாம்!

parath.sarathi

அவ்வளவு பெரிய யானையையே பிச்சை எடுக்க வெச்சிடுறாங்க, ஏலியன் எம்மாத்திரம் என்ற பயம்தான்.

KayathaiS

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை
வாசகர் மேடை

? உங்களால் ஒரு தீவை விலைக்கு வாங்க முடியும் என்றால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள்?

? உள்ளாட்சித் தேர்தல் பற்றி நாலுவரியில் நச்சுனு கவிதை சொல்லுங்க, பார்ப்போம்!

? எடப்பாடி முதல்வரானது, ரஜினி அரசியலுக்கு வருவதெல்லாம் இருக்கட்டும். எது நடந்தால், ‘ஆச்சர்யம், அற்புதம்’ என்பீர்கள்?

? விதவிதமான வேடங்களில் நடித்துவிட்டார் வடிவேலு. ‘இன்னும் இந்த கேரக்டர்ல நடிக்கலையே’ என்று நீங்கள் ஃபீல் பண்ணும் கேரக்டர் எது?

? இன்றைய அரசியல் தலைவர்கள் டி.வி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க வந்தால், யார் எந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கலாம்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை 600 002.ஈமெயிலில் அனுப்ப

vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism