
ஒருநாள் முதல்வர் போல நீங்கள் ஒருநாள் கவர்னர் ஆனால் என்ன செய்வீர்கள்?
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!
1. ஜெயலலிதா வரை பயோபிக் வந்துவிட்டது. அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்குவது என்றால் அண்ணாவாக நடிக்கப் பொருத்தமான நடிகர் யார்?
2. சாலையோர டீக்கடையில் டீ குடிப்பது, போகிற இடத்தில் செல்பி எடுப்பதைத் தாண்டி மக்களைக் கவர ஸ்டாலினுக்கு ஐடியாக்கள் ப்ளீஸ்...
3. ஹீரோக்கள் கேட்கும்போதே தூங்காமல் இருக்கும்படி நாலுவரியில் நச் கதை சொல்லுங்க பார்ப்போம்...
4. உங்கள் கல்லூரி வாழ்க்கை கலைநிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்..?
5. ஒருநாள் முதல்வர் போல நீங்கள் ஒருநாள் கவர்னர் ஆனால் என்ன செய்வீர்கள்?
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.
இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com