Published:Updated:

வாசகர் மேடை: ஓஹோ ஓப்பனிங்!

ஜனகராஜ், ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ஜனகராஜ், ரஜினி

ஜனகராஜை முதல்வராக்குவார். ‘ராஜாதிராஜா’வுல தனக்கு பதிலா அவரத்தான எஸ்டேட்டுக்கு முதலாளியா அனுப்பினார்.

வாசகர் மேடை: ஓஹோ ஓப்பனிங்!

ஜனகராஜை முதல்வராக்குவார். ‘ராஜாதிராஜா’வுல தனக்கு பதிலா அவரத்தான எஸ்டேட்டுக்கு முதலாளியா அனுப்பினார்.

Published:Updated:
ஜனகராஜ், ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ஜனகராஜ், ரஜினி

? ரஜினி கட்சி தேர்தலில் வென்று, வேறு ஒருவர் முதல்வர் ஆகவேண்டும் என்றால், ரஜினி யாரை முதல்வர் ஆக்குவார், ஏன்?

ரோபோ ரஜினியை முதல்வராக்கிவிடலாம்.

DR K விஸ்வநாதன், கோவை

ஜனகராஜை முதல்வராக்குவார். ‘ராஜாதிராஜா’வுல தனக்கு பதிலா அவரத்தான எஸ்டேட்டுக்கு முதலாளியா அனுப்பினார்.

Manikandan Thirunavukkarasu

ஜனகராஜ், ரஜினி
ஜனகராஜ், ரஜினி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏற்கெனவே, தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்றவர். எனவே, சிஸ்டத்தைச் சரி செய்யத் தெரிந்த ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினீயர்தான் முதல்வர்.

அதிரை புகாரி

ஒருவேளை சரத் பாபுவா இருக்குமோ? எல்லாப் படத்துலயும் அவருக்குத்தானே விட்டுக்கொடுப்பார்!

Deepa Ilango

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோமதி நமசிவாயம்.

நானேதான். நம்பிக்கையே வாழ்க்கை..!

கோமதி நமசிவாயம்

சீமான்!

தன்னை எதிர்த்துப் பேசுபவரை முதல்வரா நியமித்துவிட்டா யாரும் எதிர்க்க மாட்டாங்க என்ற எண்ணத்தில்!

(எதிர்த்துப் பேசின மனோரமாவிற்கு அருணாச்சலத்தில் வாய்ப்பு தரவில்லையா, அது போல.)

இளையநிலா

“முதல்வர் பெயர் பின்னர் அறிவிக்கப்படும்” என்று சொல்லி நாள்களைக் கடத்துவார். அதற்குள் ஐந்து வருடம் முடிந்துவிடும்!

balebalu

சீனியாரிட்டிபடி சுழற்சி முறையில்

எஸ்.பி.முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர். ஆளுக்கொரு வருடம் முதல்வராக நியமிக்கப்படலாம்.

சித்ரா தேவி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

? ‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு ஓப்பனிங் பாடல் நீங்கள் எழுத வேண்டும் என்றால், என்ன எழுதுவீர்கள்?

நான் நின்னா பொதுக்கூட்டம்

நான் நடந்தா பேரணி

நான் வந்தா (தான்) மாநாடு.

R செந்தில்வேல், பாண்டி

உலகில் ஏழல்ல அதிசயங்கள்

சூட்டிங் வந்த சிம்பு நீ

எட்டாவது அதிசயமே!

பாலசுப்ரமணி

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

தூக்கம் கலையாமல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தேன்

எனது கலைந்த கனவை எடுத்துச் செல்ல வந்தேன்..!

மயக்குநன்

நான் ஆசைப்படுறப்ப மட்டும்தான்டா எனக்கு வொர்க்கிங் டே,

எனக்கு எப்போதும் இல்லை மன்டே டியூஸ்டே,

வருஷம் முழுக்க எனக்கு சாட்டர்டே சண்டே

தினமு‌ம் எனக்கு ஹாலிடே, ஜாலி டே!

Sriram Murugan

Let me take a kutty sleep, stop the shooting, wait for me...

Momus

? தொடர்ந்து ஐ.பி.எல்லில் தோல்வி மட்டுமே காணும் ஆர்சிபிக்கும் கோலிக்கும் ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் சொல்லவும்...

போனதெல்லாம் விட்டுத்தள்ளு,

பழசையெல்லாம் சுட்டுத்தள்ளு,

புதுசா இப்போ பிறந்தோம் என்று எண்ணிக் கொள்ளடா...

கிரிகெட் பயணம் எங்கே போனால் என்ன... போட்டி நூறு ஆனால் என்ன...

வெற்றி நமதே என்று எண்ணிக்கொள்ளடா...

புல்லாங்குழல் @காற்றின் மொழிபெயர்ப்பு

கோலி
கோலி

ஏதோ 10 டீம் எங்கள அடிச்சு டான் ஆகல;

எங்கள அடிச்ச 10 டீமும் டானுங்கதான்!

pbukrish

கப் இல்லேனாலும் காசியப்பன் பாத்திரக்கடை இருக்கு.

வெண்பா

கொஞ்சம் பொறுமையா இருங்க... எப்படியும் இன்னும் இரண்டு வருடம்தான் தோனி ஆடுவாரு...அப்புறம் ஆர்சிபிதான் சூப்பர் டீம்... நாங்க ஆதரிப்போமுல்ல!

புகழ்

ஜெயிக்கிறவன் மனிதன்; ஜெயிக்க விட்டவன் கடவுள்!

அ.ரியாஸ்

? 2K கிட்ஸ் செய்யும் அட்ராசிட்டிகளில் ஒன்று சொல்லவும்...

பள்ளிக்கு மொபைல் கொண்டு சென்று ஆசிரியர்களுடன் டிக் டாக் பண்ணுவது.

VigneshMos

நம்மை நடுங்க வைக்கும் வகையிலான பைக் ரைடிங்.

SaravanKavi

90ஸ் கிட்ஸ்களுக்குக் கல்யாணம் ஆகாததை ஏதோ 90ஸ் கிட்ஸ் சாபம் வாங்கி வந்ததைப் போல அனுதினமும் சொல்லி வெறுப்பு ஏற்றுவது!

Sriram M20

வாட்ஸப்ல ஸ்டேட்டஸ் வெச்சே கொல்லுவாங்க.

வெ கார்த்திக்

பஸ் கண்டக்டரிடம் பே.டி.எம், கூகுள் பே இருக்குதான்னு கேட்டு அலற விடுவர். டாஸ்மாக்கில் வைஃபை இல்லையென்று அங்கலாய்ப்பர்.

S பிரபு செந்தில்குமார், சென்னை

காட்டு மொக்கையான பாடலையும் யூடியூபில் ஹிட் ஆக்கி விடுவது.

Lakshminarayanan

வாசகர் மேடை: ஓஹோ ஓப்பனிங்!

? வங்கி திவால், வங்கிகளில் 2000 ரூபாய் நிறுத்தி வைப்பு. அடுத்த புதிய இந்தியா என்னவாக இருக்கும்?

வித்தவுட் பப்ளிக் டிரான்ஸ்போர்ட் இந்தியா - முழுக்க முழுக்க தனியார் மயம்.

P ஷகிலாராணி, புவனகிரி

மக்களின் மாதச் செலவுக்கு அரசே அளவோடு பணம் தரும். வங்கிப் பணத்தை எடுக்க முடியாது என்கிற கண்டிப்போடு.

த ராஜவேல் தேனி

வைத்திருக்கும் தங்கத்துக்கு ஏற்ப வரி கட்டச் சொல்லி புதிய இந்தியா பிறக்கலாம்.

ரெட்டைசுழி

வங்கியில் பணம் போடுவதை கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்துவதுபோல் போடவும். திரும்பி வராது என்ற அறிவிப்பு வரலாம்.

Pachai Perumal.A

உஜ்ஜாலாவ இந்திய மேப்ல ஊத்தி, இந்தியாவ புதுசா மாத்திட்டேன்னு சொன்னாலும் சொல்வாங்க.

அ வேளாங்கன்னி, வேலூர்

வங்கியில் டெபாசிட் செய்யும் பணத்திற்கு வாடிக்கையாளர் வட்டி செலுத்த வேண்டும்.வங்கியில் மக்கள் பணம் போடலைனா எல்லா ரூவா நோட்டையும் செல்லாததா அறிவிச்சுடுவோம்!

கார்த்திகா

பேங்க் மற்றும் ஏ.டி.எம்களில் நுழைய அனுமதிக் கட்டணம் வரலாம்.

மகா, திருப்பூர்

பணம், பேங்க் அனைத்தையும் காலி பண்ணிவிட்டு ஆர்பிஐ மூலம் ஆதார் அடிப்படையில் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ‘வரவு’ மற்றும் ‘செலவு’ என இரு கார்டுகள் வழங்கப்படும். வருமானம் ‘வரவு’ கார்டு மூலமாகவும் செலவீனம் ‘செலவு’ கார்டு மூலமாகவும் மேற்கொள்ளப்படும். card in india; made it india.

க.அய்யனார், தேனி.

ஏன், எடக்குமடக்கா ஏதாவது சொல்லப்போயி, அதையே அவங்க implement பண்றதுக்கா?

Sowmya red

டோல்கேட் வழியா நடந்து போனாலும் டோல் கட்டணம் போடுவாங்க!

vc.krishnarathnam?

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை: ஓஹோ ஓப்பனிங்!

? வருடம் முழுவதும் வொர்க் ஃப்ரம் ஹோமாக இருந்தால் எப்படி இருக்கும்?

? நீங்கள் ஏப்ரல் 1 அன்று ஏமாந்ததில் மறக்க முடியாத சம்பவம்?

? கடவுள் யாருக்காவது கைதட்டிப் பாராட்ட வேண்டும் என்றால், யாரைப் பாராட்ட வேண்டும்?

? விஷால் இயக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் கதை என்னவாக இருக்கும்? நான்கே வரிகளில் சொல்லுங்கள்.

? உண்மையிலேயே வடிவேலு தமிழக முதல்வர் ஆகிவிட்டால் என்ன நடக்கும்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

ஈமெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism